ஜிம்னாஸ்டிக் நிலையில் வில் வித்தையில் அசத்தும் சிறுவன்

சிறுவர்-சிறுமிகளின் பல்வேறு திறமைகளை வீடியோக்கள் மூலம் காண முடிகிறது. பயனர்கள் சிறுவனின் திறமையை பாராட்டுவதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
ஜிம்னாஸ்டிக் நிலையில் வில் வித்தையில் அசத்தும் சிறுவன்
Published on

இளம் தலைமுறையினரின் திறமைகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் சமூக வலைதளங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இதில் சிறுவர்-சிறுமிகளின் பல்வேறு திறமைகளை வீடியோக்கள் மூலம் காண முடிகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் சிறுவனின் ஆபாரமான வில் வித்தை திறமை பயனர்களை வியக்க வைத்துள்ளது. ருத்ரபிரதாப் சிங் என்ற அந்த சிறுவன் உடலை வளைத்து கொண்டு காலால் வில்லை எடுக்கிறான். பின்னர் ஜிம்னாஸ்டிக் நிலையில் வில் மற்றும் அம்புகளை தூக்கி இலக்கை நோக்கி அம்பை வெற்றிகரமாக எய்வது போன்ற காட்சிகள் பயனர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ 1.68 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றுள்ளது. தொடர்ந்து வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் பயனர்கள் சிறுவனின் திறமையை பாராட்டுவதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com