search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stamp"

    • உரிய முத்திரை தீர்வை-கட்டணத்துடன் பத்திரம் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
    • பொதுமக்கள் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுரை மாவட்ட சார்பதி வாளர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    மதுரை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட மதுரை வடக்கு, மதுரை தெற்கு என இரு பதிவு மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 26 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படு கின்றன. நடப்பு 2023-24 நிதி ஆண்டில் மதுரை வடக்கு பதிவு மாவட்டத்திற்கு ரூ.478 கோடி, தெற்கு மாவட்டத்திற்கு ரூ.57 ஆயிரத்து 125 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இதில் இந்த மாதம் வரை மதுரை வடக்கு மாவட்டத்தில் ரூ.139.29 கோடியும், தெற்கு மாவட்டத்தில் ரூ.14 ஆயரத்து 159 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அலு வலர்கள் தங்களது இலக்கை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்.

    மேலும் தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவல கங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

    சார் பதிவாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் பதிவு தாரர்கள் சொத்து மதிப்பினை பதிவு ஆவணங்களில் தவறாமல் தெரிவித்து அதற்குரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை செலுத்தி ஆவணங்களை பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். இதில் அரசு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சார்பதி வாளர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துணை பதிவுத்துறை தலைவர் ரவீந்திரநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
    • மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வரும் 3-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் உரிய முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை தானியங்கி பொறியாளரின் செயல்முறை ஆணையின்படி கீழ்காணும் அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரின் கட்டுப்பாட்டில் உள்ள பாபநாசம் வட்ட அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5000-க்க்கு காப்புத்தொகையினை மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் பெயரிலும், தஞ்சாவூர் மாவட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலரது (நகரம்) தஞ்சாவூர் அரசு சேவை இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5,000 ற்கான காப்புத்தொகையினை குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் தஞ்சாவூர் (நகரம்) பெயரிலும் எடுக்க வேண்டும்.தஞ்சாவூர் மாவட்ட குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகத்தில் (ஊரகம்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ5,000-க்கான காப்புத்தொகையினை தஞ்சாவூர் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் (ஊரகம்) பெயரிலும்,

    ஒரத்தநாடு குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5,000/ ற்கான காப்புத்தொகையினை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (ஓரத்தநாடு) பெயரிலும், தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ரோடு, உழவர் சந்தை அருகில் உள்ள மாவட்டத்தொழில் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.10.000 ற்கான காப்புத்தொகையினை பொது மேலாளர் மாவட்டத் தொழில் மையம் தஞ்சாவூர் பெயரிலும், எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5000-க்கான காப்புத்தொகையினை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தஞ்சாவூர்,பெயரிலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.10.000-க்கான காப்புத் தொகையினை மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தஞ்சாவூர் பெயரிலும் ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் விலைப்புள்ளியுடன் வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வரும் 3-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் உரிய முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

    ஆர்வமுள்ள நபர்கள் வாகனத்தை நேரில் பார்வையிட்டு வாகனம் இருக்குமிடத்தில் உள்ள நிலைக்கு விலைப்புள்ளி அளிக்கலாம். விலைப்புள்ளிகள் 3-ந் தேதி பிற்பகல் 4 மணிக்கு வருகை புரிந்துள்ள ஏலதாரர்கள் முன்னிலையில் தொடர்புடைய அலுலகங்க ளில் தொடர்புடைய அலு வலர்களால் திறக்கப்படும்.

    உறையின் மீதுஎந்த வாக னத்திற்கான விலைப்புள்ளி என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஏல அறிவிப்பு நாள் மற்றும் தேரத்தினை மாற்றி அமைத்திட மாவட்ட கலெக்டருக்கு முழு அதிகாரம் உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் கி.பி 705-745 முதல் தஞ்சாவூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்தினார்.
    • அறம் மாறா நல்லாட்சி நடத்திய பேரரசர் சுவரன்மாறனின் பிறந்தநாளான மே 23 -ந் தேதி அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் கிராமத்தில் பெரும்பிடு குமுத்தரையர் காளாபிடாரி அம்மன் கோவிலில் அமைந்துள்ள அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பில் அதன் பொறுப்பாளர் ஜோதி தலைமையில் பேராசி ரியர் சந்திரசேகரன் மற்றும் குழுவினர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் கி.பி 705-745 முதல் தஞ்சாவூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்தினார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமம் ஊராட்சியில் அன்னை மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோவில் அமைத்து வணங்கினார். அறம் மாறா நல்லாட்சி நடத்திய பேரரசர் சுவரன்மாறனின் பிறந்தநாளான மே 23 -ந் தேதி அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.

    தமிழக அரசும், மத்திய அரசும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறனுக்கு விரைவில் தபால்தலை வெளியிட வேண்டும். மேலும் சிவனுக்கு 1008 லிங்கங்களை அமைத்து சைவத்துக்கு பெரும் தொண்டாற்றிய ஆன்மீக சித்தன் பேரரசர் சுவரன்மாறன் பெயரில் தஞ்சாவூர் தமிழ் பல்கலை க்கழகத்தில் ஆய்வு இருக்கை ஒன்று அமைத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே போன்ற கோரிக்கை அடங்கிய மனுவை டெல்லியில் தி.மு.க. எம்.பி கனிமொழியிடமும் கொடுத்தனர்.

      திருப்பூர் :

      இந்திய அஞ்சல் துறை சார்பாக பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா ஊக்கத்தொகை திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி இந்திய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

      இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முதல்கட்டமாக வினாடி-வினா எழுத்து தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி அகில இந்திய அளவில் நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 29-ந் தேதி கடைசிநாளாகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு dotirupur.tn@indipost.gov.in என்ற முகவரியிலும், 0421 2239785 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

      அடுத்தகட்டமாக வெற்றி பெற்றவர்கள் தபால் தலை தொடர்பான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் philately project சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.500 வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் அவர்களின் அஞ்சல் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும். இந்த தொகை அவர்களின் 9-ம் வகுப்பு பள்ளி படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.

      இந்த தகவலை திருப்–பூர் அஞ்–சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

      ×