என் மலர்tooltip icon

    மதுரை

    • வெவ்வேறு விபத்துக்களில் விவசாயி-பெட்டிகடைக்காரர் பலியானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் ராம சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது 23). இவர் மேலக்கோட்டை அவுசிங்போர்டு குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    அங்குள்ள தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் ராஜபாளையம் மெயின் ரோட்டில் சென்றார். செங்கப்படை விலக்கு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பாண்டி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அவரை அங்கிருந்த வர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி காவேரி திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூடலிங்கம். அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று கடையின் எதிரே உள்ள ஓட்டலுக்க சாப்பிட சென்றார். பின்னர் கடைக்கு வருவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது ஒரு வாலிபர் வேகமாக ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் கூடலிங்கத்தின் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர். பின்னர் உறவினர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் கூடலிங்கத்தின் மகன் மணிகண்டன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் கார் மோதி பால் வேன் கவிழ்ந்தது.
    • சாலையில் பால் ஆறாக ஓடியது.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி லட்சுமி (வயது73). இவர் உறவினர்களுடன் மதுரை அழகர் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காரியா பட்டியில் இருந்து நகரிக்கு பால் கேன்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று முன்னால் சென்று கொண்டி ருந்தது. சமய நல்லூர் நான்கு வழிச்சா லையில் திருமங்கலம் அருகே காட்டு பத்திர காளியம்மன் கோவில் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த பால் வேன் மீது கார் மோதியது.

    இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. கார் மோதியதில் பின்னால் இருந்த கதவு உடைந்து கேன்களில் இருந்த பால் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த வடக்கம்பட்டியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், காரில் வந்த லட்சுமி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போலீசார் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • அரசியல் செய்வதற்காக கர்நாடக பா.ஜ.க. காவிரி பிரச்சினையை தூண்டி விடுகிறது.
    • மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டினார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி யின் 155-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தெற்குத்தெரு பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கிறாரோ அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். காவிரி பிரச்சினைக்கு முதல் கார ணம் பா.ஜ.க. குழந் தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி வருகின்றனர். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முதல் 15 நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் கொடுத்து வந்தார். ஆனால் போராட்டத்தை தூண்டியது பா.ஜனதா தான்.

    கர்நாடக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் தருவது அம்மாநில மக்களி டையே பெரும் வரவேற்பினை பெற்று உள்ளது. இதை திசை திருப்புவதற்காக பா.ஜனதா அரசியல் செய்கிறது. இங்குள்ள பா.ஜனதா இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்?. தற்போது டெல்லி சென்றுள்ள பா.ஜனதா தலைவர் அண்ணாமலை காவிரி பிரச்சினையில் கர்நாடக முன்னாள் முத லமைச்சர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் தலை யிடக்கூடாது என்று கட்சி மேலிடத்தில் கூறுவாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மா பட்டி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம், நகர் காங்கிரஸ் தலைவர் கரிசல்பட்டி சவுந்தரபாண்டி, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜா தேசிங், நகர்மன்ற கவுன்சிலர் அமுதா சரவணன், பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பி னர்கள் உலகநாதன், ராஜ்குமார், பழனிக்குமார், வட்டார தலைவர்கள் முரு கேசன், தளபதி சேகர், கள்ளிக்குடி பாண்டியன், வீரபத்திரன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கூடல் புதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜா (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் தலைமை அதி காரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் தனக்கு பணிச்சுமை அதிக மாக இருப்பதாகவும், தற் கொலை செய்து கொள்ள லாம் என தோன்றுவதாகவும் நெருக்கமாகவர்களிடம் கடந்த சில நாட்களாக புலம்பி வந்துள்ளார்.

    இந்த நிலையில் மனைவி, குழந்தைகளுடன் அவரது அக்கா வீட்டுக்கு சென்று இருந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த ராஜா சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ராஜாவின் தாய் ஷோபனா கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகாத்மா காந்தி பிறந்த நாள்-கதர் சிறப்பு விற்பனை விழா அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
    • 409 பயனாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வா தாரமாக தலா ரூ.5000 வீதம் வருடந்தோறும் வழங்கப் பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை, மேலமாசி வீதி யில் உள்ள கதர் விற்பனை நிலையத்தில் இன்று தமிழ் நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் காந்தியடி கள் பிறந்த நாள் விழா மற்றும் கதர் சிறப்பு விற் பனை விழா நடைபெற்றது. விழாவில் வணிகவரி மற் றும் பதிவுத்துறை அமைச் சர் பி.மூர்த்தி, தக வல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியா கராஜன் ஆகியோர் காந்திய டிகள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    காந்தியடிகளால் கிரா மப்புற ஏழை, எளிய மக்க ளுக்கு ஆண்டு முழுவ தும் வாழ்வளிக்க வேண்டு மென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி வட்டம் அன்னமார்பட்டியில் கிராமிய நூற்பு நிலையம் 1-ம், உசிலம்பட்டி கதர் உபகிளை மற்றும் மேலமாசி வீதியில் கதர் அங்காடியும் செயல்பட்டு வருகின்றன.

    கிராமிய நூற்பு நிலையத் தில் 25 ராட்டைகள் மற்றும் கதர் உபகிளையில் 15 தறிக ளும் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்க ளின் வாழ்க்கைத்தரம் மேம் படுத்தப்பட்டும், அவர்களின் பொருளாதார நிலை உயர்வு செய்யப்படும் அண்ணல் காந்தியின் கொள்கையினை முழுவதுமாக கடைப்பிடித்து இத்துறையினரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகி றது.

    மேலும் கதர் அங்காடிகள் மூலமாக கடந்த ஆண்டு கதர் ரகங்கள் குறியீடு ரூ.75 லட்சத்தில் கதர் ரகங்கள் ரூ.49.99 லட்சமும் மற்றும் கிராமப் பொருட்கள் குறி யீடு ரூ.65.00 லட்சத்தில் ரூ.24.28 லட்சமும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மண்பாண்ட தொழி லாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவி தொகை யாக 409 பயனாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வா தாரமாக தலா ரூ.5000 வீதம் வருடந்தோறும் வழங்கப் பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் அண்ணல் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்ப னையை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவ லகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள், நகராட்சிகள், பேரூ ராட்சிகள், அரசு மருத்துவ மனை வளாகங்களில் ஆகிய இடங்களில் 02.10.2023 முதல் தீபாவளி முடியும் வரை தற்காலிக விற்பனை நிலையங்கள் செயல்படுத் தப்படுகிறது.

    அரசு துறைகளில் பணி யாற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. பொது மக்கள் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தீபாவளி வரை எல்லா நாட்களிலும் கதர் அங்காடி கள் செயல்படும்.

    இந்த ஆண்டு மதுரை மாவட்டத் திற்கு கதர் விற்பனை குறியீ டாக ரூ.1 கோடியே 80 லட்சம் நிர்ண யிக்கப்பட்டுள் ளது. இக்கு றியீட்டினை அடைந்திட பொதுமக்கள், அரசு ஊழி யர்கள், ஆசிரியப் பெரு மக்கள் உள்ளிட்ட அனைவ ரும் இத்தொழிலில் ஈடுபட்டி ருக்கும் நுாற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கதர் துணிகளை வாங்கி ஒத்து ழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    விழாவில் மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநக ராட்சி மேயர் இந்திராணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலா நிதி, மதுரை கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்கு நர் சுதாகர் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டது.
    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 70 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு காத்திருக்கின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாணவ, மாணவியர் அணி சார்பில் கட்சியில் இணை யும் விழா பொதுச் செயலா ளர் டி.டி.வி.தினகரன் முன் னிலையில் இணைத்து உறுப் பினர் அட்டை பெற்றுக் கொண்டனர்.

    முன்னதாக டி.டி.வி. தினகரனை திருமங்கலம் பெரியார் சிலை முன்பு மாணவியர் அணி செயலா ளர் ஜீவிதா நாச்சியார், தொண்டர்களுடன் சென்று வரவேற்றார். இதனைத் தொடர்ந்து திருமங்கலம் சந்தைப்பேட்டையில் திரு மங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண் ணன், வடக்கு ஒன்றிய செய லாளர் வினோத், திருமங்க லம் நகரச் செயலாளர் வைரவன் ஆகியோர் வர வேற்றனர்.

    நிகழ்ச்சியில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேந்தி ரன் தலைமை தாங்கி பேசி னார். அம்மா பேரவை செய லாளர் டேவிட் அண்ணா துரை, மகளிர் அணி செய லாளர் வளர்மதி ஜெபராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.

    பின்னர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

    பழனிச்சாமி செய்த தவறுகளால் மக்கள் தி.மு.க. ஆட்சியை ஏற்படுத்தியுள்ள னர். பொய்யான வாக்குறுதி களை கொடுத்து மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது. தேர்தல் வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, மாணவர் களுக்கு கல்விக்கடன் ரத்து, லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பை பெற்றுத் தரு வார்கள் என்று சொன் னார்களே என்னவாயிற்று?

    இளம் சமுதாயத்திற்கு நல்வழிகாட்டுதலை செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. அரசுத் துறையில் வேலை வாய்ப்பு என்ன ஆயிற்று, பெரும் கனவான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை முறையாக நடத்த முடிய வில்லை. பொறியியல், கலைக்கல்லூரிகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக் கில் உள்ளது. அவர்களுக்கு முறையான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 70 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு காத்திருக்கின்றனர்.

    தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து விடுபட வேண் டுமென்றால் மீண்டும் தமி ழகத்தில் அம்மாவின் ஆட் சியை உருவாக்கி தரவேண் டும். அதற்கு மாணவர்களின் பங்களிப்பு இருக்கவேண் டும். எப்போதெல்லாம் ஆட்சி மாற்றம் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் மாண வர்களின் எழுச்சி இருக்கும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சி உருவாக பாடு பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • 3 வார்டுகளில் ஏராளமான இளைஞர்கள் தி.மு.க. இளைஞரணியில் சேர்ந்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் 21, 22 மற்றும் 27-வது வார்டுகளில் தி.மு.க. இளைஞரணி சார்பில் நடை பெற்ற இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் கள் சேர்ப்பு நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர்.

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.வில் இல்லம் தேடி இளைஞரணிக்கு உறுப்பி னர் சேர்க்கை முகாம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று.

    திருமங்கலம் நகரத்திற் குட்பட்ட வார்டுகள் 21, 22 மற்றும் 27 பகுதிகளில் இளைஞரணிக்கு உறுப்பி னர் சேர்க்கை முகாம் நடை பெற்றது. மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் ஆத வன் அதியமான் தலைமை வகித்தார். திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    3 வார்டுகளில் ஏராள மான இளைஞர்கள் தி.மு.க. இளைஞரணியில் சேர்ந்த னர். இந்த நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் செல் வம், மாவட்ட பிரதிநிதி கோல்டன் தங்கபாண்டி, தி.மு.க. கவுன்சிலர் சரண்யா ரவி, நிர்வாகிகள் பவித் ராஜா, சத்யா, வெங்கடேசன், செல்வராஜ், வடமுருகன், ஆனந்த், செந்தில், மணி கண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலருக்கு பாராட்டு விழா நடந்தது.
    • முடிவில் கணேசன் நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன். இவரது பொதுப்பணியை பாராட்டும் வகையிலும், தொடர்ந்து 2-வது ஆண்டாக லயன்ஸ் கிளப் தலைவராக தேர்ந்ெதடுக்கப்பட்டதை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க சோழவந்தான் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மகளிர் குழு சொர்ணம், கோதை, பாமா, நல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிட்டு வரவேற்றார். கோவில் அர்ச்சகர் கண்ணபிரான், பிரசாந்த் சர்மா ஆகியோர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கி னர். ராமநவமி கமிட்டி நிர்வாகி காசி விஸ்வநாதன், அய்யப்ப சேவா சங்க செயலாளர் தாமோதரன், கணேசன், தங்கப்பாண்டியன் ஆகியோர் கவுரவித்தனர். முடிவில் கணேசன் நன்றி கூறினார்.

    • குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், காமாட்சி உள்பட போலீசார் மறியலில் ஈடு பட்ட பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் அருகே உள்ள செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக கிடைக்க வில்லை.

    இது குறித்து பல முறை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டியிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் ஊராட்சி நிர் வாகம் சார்பில் அருகில் உள்ள கம்மாயில் போர் வெல் போட்டு குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்தனர்.

    இதில் தனிநபர் ஒருவர் குடிநீர் எடுக்கக் கூடாது என்று தகராறு செய்ததாக வும் இதனால் இக்கிராமத் திற்கு குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை கீழப்பட்டி அரசு பள்ளி மெயின் ரோட்டில் காலி குளத்துடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் முருகே சன், காமாட்சி உள்பட போலீசார் மறியலில் ஈடு பட்ட பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதில் குடிநீர் பிரச் சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • ேகாரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது.
    • உள்ளூர் மட்டும் மில்லாமல் வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்க உள்ளனர்.

    மதுரை

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குத்து புல் ஹஜ்ரத் காஜாசையத் சுல்தான் அலாவுதீன், அவு லியாக்களின் தர்காவில் சந்தனக்கூடு என்னும் உரூஸ் மத நல்லிணக்க விழா இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு இன்று அதி காலை 6 மணியளவில் உரூஸ் கொடி பாரம்பரிய ஹக்த்தார்கள் முன்னிலையில் யாசின் ஓதிதுஆவுடன் ஏற்றப்பட்டன.

    இதில் திரளான முஸ்லீம்கள் மற்றும் பொது மக்கள் ஜாதி, மத பேதமின்றி பங்கேற்று அவுலியாக்களின் நல்லாசி பெற்றனர்.

    மாலை நடைபெறும் உரூஸ் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மின்சார விளக்கு கள் அலங்காரத்துடன் மேளதாள வாத்தியம் ஒட்டகம், நாட்டிய குதிரை யுடன் சந்தனக்கூடு ஊர்வ லம் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தர்காவை வந்தடையும். இந்த விழாவை காண உள்ளூர் மட்டும் மில்லாமல் வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி தர்கா முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடு களை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சையது சம்

    சுதீன், சையது ரசூல், சம்சுதீன் அபு மற்றும் பரம்பரை தர்கா ஹக்தார்கள் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.

    • தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றவில்லை.
    • தமிழகத்தில் ஜாதி, மத வேறுபாடுகளுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

    மதுரை:

    மதுரையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் கூட்டணி போன்ற முடிவுக்கு பொதுவாகவே மூன்று வாய்ப்புகள் உள்ளது. எங்களுக்கு ஒன்று பா.ஜ.க. உடன் கூட்டணி, மற்றொன்று காங்கிரசுடன் கூட்டணி அல்லது தனித்து போட்டியிடுவது.

    2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்க வற்புறுத்தியதால் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாக வரும் தகவலுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி செய்த ஊழல்கள் தவறுகளால்தான், தி.மு.க.வுக்கு வாக்களித்தார்கள்.

    இன்று தி.மு.க.வுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் உணர்ந்து வருகின்றனர். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். தி.மு.க.வுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மாற்று சக்தியாக அ.ம.மு.க. வரும். தமிழக மக்கள் உறுதியாக எங்களை ஆதரிப்பார்கள். தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றவில்லை. சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது. விலைவாசி ரெக்கை கட்டி பறக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    விவசாயிகள், அரசு ஊழியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். மேலும் ஆளுநர் பட்டியலின பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை, இதுதான் சமூக நீதியா என கூறுவது கேலி கூற்றானது. தமிழகத்தில் ஆண், பெண் சமம் என்ற சமூக நீதி பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் செயல்களால் தான் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இல்லாத சமூக நீதி உள்ள சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

    தமிழகத்தில் தீண்டாமை இல்லை. ஜாதி, சமய வேறுபாடு இல்லை. கல்வி, தொழிலில் பிறப்பால் எந்த பிரிவினையும் இல்லை. ஆண்களும், பெண்களும் இரு கண்கள் என்ற அடிப்படையில் சமுதாயம் வளர்ந்துள்ளது. எனவே இங்கொன்றும், அங்கொன்றும் தனி நபர்களின் செயல்பாடுகளை வைத்து ஆளுநர் பேசுவது தவறு.

    மேலும் தமிழகத்தில் ஜாதி, மத வேறுபாடுகளுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்த எந்த பதிலும் தற்போது சொல்ல முடியாது, தேர்தல் நேரத்தில் சொல்வோம். ஓ.பி.எஸ். எனது பழைய நண்பர், அவர் ஏதோ கோபத்தில் செய்தது எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் நண்பர் என்ற முறையில் மீண்டும் இணைவது என்பது தமிழ்நாட்டில் நடப்பது தான்.

    அவர் தனித்து முடிவெடுப்பார், ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என மட்டும் தான் கூறியுள்ளோம். அவருடைய செயல்பாடுகள் பற்றி எதுவும் சொல்ல இயலாது.

    அ.ம.மு.க. எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என 90 சதவீதம் அ.ம.மு.க.வினர் விரும்புகிறார்கள். ஓ.பி.எஸ்.சுடன் கூட்டணி சேர்ந்தாலும் நாங்கள் சேரமாட்டோம். தனியாகவே போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.
    • ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை திருப்பாலை பகு தியில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.மூர்த்தி தலைமையில் இன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் பேசியதாவது:-

    வருகின்ற டிசம்பர் மாதம் சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. அதற்கு முன்பாகவே அக் டோபர் 15 முதல் 31-ந்தே திக்குள் ஒன்றியம், வட்டம், பேரூர், பகுதி கழகங்கள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும்.

    மேலும் தலைமைக் க ழகம் அறிவிப்பு எதுவாயி னும் அதை மதுரை வடக்கு மாவட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ரூ.44 கோடி மதிப்பீட்டில் மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் பார்வையாளர் கள் அமரும் வகையில் பிர மாண்டமாக கட்டப்பட்டு வரும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு மைதானம் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

    எனவே இந்த மைதா னத்தை திறக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிறார். அவ ருக்கு நாம் சிறப்புமிகு வர வேற்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த கூட்டத்தில் சோழ வந்தான் எம்.எல்.ஏ. வெங்க டேசன், அவைத்த லைவர் பாலசுப்ரமணியன், பொரு ளாளர் சோமசுந்தர பாண்டி யன், மாவட்டச் துணைச் செயலாளர் ஆசை கண் ணன், இலக்கிய அணி நேரு பாண்டி, ஒன்றிய சேர்மன் வீரராகவன், ஒன்றிய செய லாளர்கள் ரகுபதி, சிறைச் செல்வன், தனசேகர், பால ராஜேந்திரன்,

    மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி, பகுதி செயலாளர் சசிகுமார், மருதுபாண்டி, கௌரி சங்கர், இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, மாவட்ட அமைப்பாளர் அழகுபாண்டி, துணை அமைப்பாளர்கள் இளங்கோ, வைகை மருது, மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர், பேரூர் கழகச் செயலாளர் வாடிப்பட்டி பால்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×