என் மலர்
உள்ளூர் செய்திகள்

பால் வேன் கவிழ்ந்து கிடப்பதையும், சாலையில் பால் ஆறாக ஓடியதையும் படத்தில் காணலாம்.
கார் மோதி பால் வேன் கவிழ்ந்தது
- திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் கார் மோதி பால் வேன் கவிழ்ந்தது.
- சாலையில் பால் ஆறாக ஓடியது.
திருமங்கலம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி லட்சுமி (வயது73). இவர் உறவினர்களுடன் மதுரை அழகர் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரியா பட்டியில் இருந்து நகரிக்கு பால் கேன்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று முன்னால் சென்று கொண்டி ருந்தது. சமய நல்லூர் நான்கு வழிச்சா லையில் திருமங்கலம் அருகே காட்டு பத்திர காளியம்மன் கோவில் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த பால் வேன் மீது கார் மோதியது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. கார் மோதியதில் பின்னால் இருந்த கதவு உடைந்து கேன்களில் இருந்த பால் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த வடக்கம்பட்டியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், காரில் வந்த லட்சுமி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போலீசார் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.






