என் மலர்
மதுரை
- போலீசார் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 15-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
- சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் போலீசார் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
மதுரை:
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் கடந்த மே மாதம் 25-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது அங்கு கூடிய கூட்டத்தினர், வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி வாரண்ட் நகல், அரசு முத்திரைகள், வழக்கு தொடர்பான அரசு ஆவணங்கள், பென்டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்று, பென்டிரைவில் இருந்த தகவல்கள் முழுவதும் அழிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆவணங்களை பறித்து சென்றதாக தி.மு.க.வினர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் தி.மு.க. கவுன்சிலர் உள்பட 15-க்கும் மேற்பட்ட தி.மு.க. வினர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்களுக்கு ஜாமின் அளித்தும், சிலருக்கு முன்ஜாமின் அளித்தும் கரூர் மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது. இந்த ஜாமின், முன்ஜாமினை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து, அவர்கள் அனைவரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி ஆஜரானவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட னர்.
தற்போது அவர்களில் ரீகன், ராஜா, சரவணன், ராமச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேருக்கு கரூர் கோர்ட்டு மீண்டும் ஜாமின் அளித்தது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், அந்த ஜாமினை ரத்து செய்யக்கோரியும் வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் போலீசார் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
- அரசு மருத்துவமனை டாக்டர்கள் கருப்புப்பட்டை அணிந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
- தங்கள் கோரிக்கை கள் நிறைவேறும் வரை இதுபோல் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
மதுரை
மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண், நகர்புற சுகாதார நிலையத்தில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். பிரச வத்திற்காக சென்றபோது பிரசவம் செய்வதில் மருத் துவ ரீதியாக பிரச்சினைகள் இருப்பதாக கூறி கடந்த 29-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து பிரச வத்தின் போது குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அந்த பெண் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர், அரசு ஆஸ்பத்திரியின் மகப்பேறு துறையில் அத்துமீறி தலையிட்டு மகப் பேறு துறையின் பெயரை கெடுக்கும் வண்ணம் செயல் பட்டுள்ளதாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபோல், அவர் பல வித அதிகார மீறல்களில் ஈடுபட்டதாக கூறி, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் அறி விக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார் பில் டாக்டர்கள், மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்யக்கோரி, கருப்பு பட்டை அணிந்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 3-வது நாளா கின்று அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து, அரசு டாக்டர் கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். தங்கள் கோரிக்கை கள் நிறைவேறும் வரை இதுபோல் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அவர் கள் தெரிவித்தனர்.
- ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கையில் கூறியிருந்தார்.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
மக்களுடைய கோரிக்கை கள் எல்லாம் திட்டங்களால் செயல்படுத்துவதற்காக தான் தேர்தல் வாக்குறுதி களை கொடுக்கப்படு கிறது. அதை நம்பித்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள்.ஆனால் அந்த அடிப்படை தத்துவத்தை இலக்கணத்தை தி.மு.க. அரசு தகர்த்தெறிந்தி ருக்கிறது.
சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரி யர்கள் மற்றும் கூட்டு நலச் சங்கத்தினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். கணினி, தையல்பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்ட 8 பிரிவு பகுதி நேர ஆசிரி யர்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், நிரந்தர ஆசிரி யராக ஆக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்கள்.
இதை நிறைவேற்ற கோரி தொடர்ந்து ஆசிரி யர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். கல்விதான் எதிர்கால சந்ததியை பாதுகாக்கும். அப்படி கல்வியை போதிக் கும் ஆசிரியர்களே இன்றைக்கு உயிரே போனாலும் பரவாயில்லை என்று போராட்டம் நடத்து கிறார்கள்?
இப்படி 520 தேர்தல் வாக்குறுதிகளுக்கும் போராட்டத்தை நடத்தி னால் தமிழ்நாடு போராட்ட களமாக மாறி விடும். ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிக்கும் ஒவ்வொரு பிரிவினர் போராடுகிறார் கள். தேர்தல் வாக்குறுதி களை கொடுத்து அதனை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கிற அரசாக திமுக அரசு உள்ளது.
ஆகவே தான் இந்த 520 தேர்தல் வாக்குறுதிகளும் காகித பூவாக காட்சிய ளிக்கிறது. உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வரும் இந்த ஆசிரியர்கள் போராட் டத்தை கண்டு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கை களை செவி சாய்த்து கேட்டு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு காமராஜர் மக்கள் நண்பர்கள் அன்பு குழு சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச புத்தக பை தலைவர் கதிரேசன் வழங்கினார்.
- கல்வி உதவித் தொகையும் பலருக்கு வழங்கியுள்ளார்.
மதுரை
தமிழ்நாடு காமராஜர் மக்கள் நண்பர்கள் அன்பு குழு சார்பில் அதன் தலை வர் கதிரேசன் கடந்த 22 ஆண்டுகளாக ஏழை, எளிய மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகி றார். அதேபோல் கல்வி உத வித் தொகையும் பலருக்கு வழங்கியுள்ளார்.
இந்தநிலையில் இந்த அமைப்பு சார்பில் மதுரை தெப்பக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுமார் 400-க்கும் மேற்பட்டோருக்கு இலவச புத்தக பைகளை தலைவர் கதிரே சன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பெ.இந்துமதி, உடற்கல்வி இயக்குநர் ச.வசந்தி மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண் டனர். இலவச புத்தக பைகளை பெற்றுக்கொண்ட மாணவிகள் தமிழ்நாடு காமராஜர் மக்கள் நண்பர் கள் அன்பு குழுவிற்கும், அதன் தலைவர் கதிரேசனுக் கும் தங்களது நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
- கீழக்குயில்குடியில் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த கீழக்குயில்குடியில் ரூ.32 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டமிடப் பட்ட பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை விரைந்து செயல்படுத்த திருப்பரங்குன்றம் சட்டப்பே ரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்குயில்குடி ஊராட்சியில் அப்பகுதி பொதுமக்கள் சமணர் படுக்கை பகுதியில் சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்ப டையில் கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.32 லட்சத்து 56 ஆயிரத்திற்கு பேவர்பிளாக் சாலை அமைக்க ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டது.
மேலும் அந்தப் பணிகள் நான்கு மாதங்களில் முடிக் கப்படும் என தெரிவிக்கப் பட்டது. ஆனால் தற்போது வரை அங்கு பேவர் பிளாக் சாலைப்பணிகள் எதுவும் தொடங்கவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து உடன டியாக பேவர் பிளார் சாலை அமைக்கும் பணி யினை செய்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கின்றேன். மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
- முடிவில் செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார். பேராசிரியர் சுகந்தி தொகுத்து வழங்கினார்.
மதுரை
சவுராஷ்ட்ரா கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் சந்திப்பு கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் குமரேஷ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேராசிரியர் நாதன் வரவேற்றார்.
இளநிலை கணினி அறிவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தலைவராக சிவக்குமார், துணைத் தலைவராக அமர்சிங், செயலாளராக அமர்நாத், துணை செயலாளராக ஸ்ரீதரன், பொருளாளராக விஷ்ணுகுமார், செயற்குழு உறுப்பினர்களாக ரவிகுமார், ஹரிஹரசுதன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய நிர்வாகிகளிடம் நிர்வாகிகள் ஹரிஹரன், அருண்பிரசாத், நாதன் ஆகியோர் ஒப்படைத்தனர். கல்லூரி தலைவர் மோதிலால், செயலாளர் குமரேஷ், பொருளாளர் பாஸ்கர், செயற்குழு உறுப்பினர்கள் பன்சிதார், வெங்க டேஸ்வரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் பேராசி ரியர்கள் விஜயகுமார், சிவகுமார், துரைசாமி, ஜீவப்பிரியா, மகாலட்சுமி, கணேசன், ராம்பிரசாத், கார்த்திக், கிருஷ்ணன், புவனேஸ்வரி, தேவி, பாண்டியராஜன், கணேசன், சிவகுமார், பவித்ரா, 300-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார். பேராசிரியர் சுகந்தி தொகுத்து வழங்கினார்.
- சோழவந்தான் பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
- சி.புதூர், சித்தாலங்குடி, திருவேடகம், இரும்பாடி, நாச்சிகுளம், கருப்பட்டி, ரிஷபம், நெடுங்குளம், திருவேடகம் ஆகிய ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. வெங்க டேசன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். கிராம மக்கள் குடிநீர், ரோடு, கழிவறை, பஸ் வசதிகள் உட்பட கிராம மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் மாவட்ட வழங்கல் அதிகாரி முருகவள்ளி, தாசில்தார் மூர்த்தி, மண்டல துணை தாசில்தார் வருவாய் அலுவலர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் வெங்க டேசன், அரசு போக்கு வரத்துக் கழக என்ஜினீயர் மூர்த்தி, வனத்துறை, சுகா தாரத்துறை, கல்வித்துறை உள்பட பல்வேறு துறை யைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி தலைவர் பவுன் முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீர பாண்டி, துணைத் தலைவர் பாக்கியமெ் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் கதிரவன், ஊராட்சி செயலாளர் திருச்செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன், முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் கேபிள் ராஜா, தென்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளா அய்யப்பன், துணைத் தலைவர் கிருஷ்ணன், திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் தலைவர் சகுபர்சாதிக், மேலக்கால் ஊராட்சியில் தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன், துணைத் தலைவர் சித்தா ண்டி ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. சி.புதூர், சித்தாலங்குடி, திருவேடகம், இரும்பாடி, நாச்சிகுளம், கருப்பட்டி, ரிஷபம், நெடுங்குளம், திருவேடகம் ஆகிய ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.
- வாடிப்பட்டி பேரூராட்சியில் பேட்டரி குப்பை சேகரிப்பு வாகனங்களை வெங்கடேசன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார் .
- முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் புதிய பேட்டரி குப்பை சேகரிப்பு வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தாதம்பட்டி நீரேத்தான் மந்தி திடலில் நடந்தது. பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார் செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணி துணை தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல். ஏ., வாகனங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளில் குப்பைகள் சேகரிக்க புஸ்காட் வண்டி பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் புதிதாக 22 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி, சரசு, பூமிநாதன், ஜெயகாந்தன், குருநாதன், சுசீந்திரன், மற்றும் தி.மு.க முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ், முரளி, வினோத், மருதுபாண்டியன், அரவிந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.
- சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது.
- முடிவில் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் இளங்கோவன், சூரியா, வெங்கடேஷ்வரி, பிரியதர்ஷினி, கீதா பால சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர் அன்பரசி வரவேற்றார். டாக்டர் தனசேகரன் முகாமை தொடங்கி வைத்து ரத்ததான வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
உசிலம்பட்டி அரசு மருத்துவமனை ரத்ததான வங்கி மருத்துவர் உஷாராணி தலைமையில் மருத்துவகுழுவினர், செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். முன்னாள் கவுன்சிலர் சீனிராஜா, முன்னாள் கூட்டுறவுசங்கதலைவர் பொன்ராம், ஜெயலலிதாபேரவை பேரூர் செயலாளர் தனசேகரன், அ.தி.மு.க.வார்டு செயலாளர் லில்லி, ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சூரியா, வெங்கடேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.
- மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகே மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்யப் பட்டதன் நினைவு நாளை கருப்பு தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச. சார்பில் கருணாநிதி, சி.ஐ.டி.யு. சார்பில் லெனின், எச்.எம்.எஸ். சார்பில் பாதர் வெள்ளை, ஐ.என்.டி.யு.சி. சார்பில் ராஜசேகரன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேது, எம்.எல்.எப். சார்பில் மகபூப்ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் படுகொலைக்கு காரண மானவர் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி யதை திரும்பப்பெற வேண் டும், அனைத்து தொழிலா ளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளம் ரூ.26 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- தமிழக மாணவர்களின் கல்விக்கடனை தி.மு.க. அரசு ரத்து செய்ய வேண்டும்.
- தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரீப் வலியுறுத்தினார்.
மதுரை
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. கடந்த 2021-ம் ஆண்டு தனது தேர்தல் அறிக் யில் தாங்கள் ஆட் சிக்கு வந்தால் தமிழக மாண வர்களின் கல்விக்கடன் முழுவதையும் ரத்து செய்வ தாக அறிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இது பற்றி எவ்விதமான முயற்சி யையும் தமிழக அரசு எடுக்க வில்லை.
ஒரு லட்சம் ரூபாய் கல் விக்காக கடன் வாங்கியிருந் தால் பத்து லட்சம் முதல் இருபது லட்சம் வரை கட்ட வேண்டும் என்று வங்கிகள் நோட்டீஸ் அனுப்புகிறது. கட்டத்தவறினால் நீதிமன்ற சம்மனும் வருகிறது. சில வங்கிகள் கடனை வசூலிக்க ஏஜென்சிகளை பயன்படுத் துகின்றன.
தனியார் ஏஜென்சிகள் வட்டிக்காரர்களை போன்று கடன் பெற்ற மாணவர்களை மிரட்டுகிறார்கள். கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுபற்றி எவ்வித கவலையும்படாமல் அதிகாரத்தில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள்.
அரசின் விளம்பரங்க ளுக்கு ஆகும் செலவை நிறுத்தினாலே மாணவர்க ளின் கல்விக்கடனை ரத்து செய்துவிடலாம். எனவே திராவிட முன்னேற்றக்கழக அரசு தனது தேர்தல் வாக்கு றுதியில் சொல்லியபடி உட னடியாக கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும். வட்டிக்கடைக்காரர்களை போல் மாணவர்களை மிரட்டும் வங்கி ஏஜென்சி யிடம் இருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கையை தமிழக அரசிற்கு முன்வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள் ளார்.
- மாநில அளவிலான ஆக்கி போட்டி திருநெல்வேலி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- முடிவில் எவர்கிரேட் ஹாக்கி கிளப் தலைவர் பி.ஜி.ராஜா நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப் பட்டி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில் முன்னாள் உடற்கல்வி ஆசி ரியர் எல்.ராஜூ நினைவுக் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கிடையே யான 3-ஆம் ஆண்டு மாநில ஆக்கி போட்டிகள் 3 நாட் கள் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளைச் சேர்ந்த 12 அணிகள் விளை யாடின.
இதன் இறுதிப் போட்டி நேற்று மாலை நடந்தது.இதில் திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு விடுதி அணியும், பாண்டிய ராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் திருநெல் வேலி அணி 2:0 என்ற கோல் கணக்கில் பாண்டிய ராஜபுரம் அணியை வென்று முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை மேல்நி லைப்பள்ளி அணியும்,3-வது இடத்தை ராமநாத புரம் மாவட்ட விளை யாட்டு விடுதி அணியும், நான்காவது இடத்தை திரு நகர் இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளி அணியும் பெற்றனர்.
இதன் பரிசளிப்பு விழா விற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன் தலைமை தாங்கினார். எவர்கிரேட் ஆக்கி கிளப் செயலாளர் சிதம்பரம், உதவி செயலர்கள் சரவ ணன், ரமேஷ், இணைச்செயலர் வெள்ளைச்சாமி ஆகி யோர்முன்னிலை வகித்த னர்.
வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து முதல் பரிசிற்கான கோப்பையினை யும், தொழிலதிபர் சீனிவா சன் இரண்டாம் பரிசிற்கான கோப்பையினையும், மாநக ராட்சி அதிகாரி பாஸ்கரன் மூன்றாம் பரிசிற்கான கோப்பையையும் வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங் கினர்.
ஆட்டநாயகன் விருதினை மாவட்ட விளையாட்டு அலு வலர் சிவா வழங்கினார். முடிவில் எவர்கிரேட் ஹாக்கி கிளப் தலைவர் பி.ஜி.ராஜா நன்றி கூறினார்.






