என் மலர்
மதுரை
- பாலமேடு பேரூராட்சியில் ரூ.29.60 லட்சம் மதிப்பீட்டில் நவீன பூங்கா, கழிப்பறை வசதியை வெங்கடேசன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி பகுதியில் உள்ள மஞ்சமலை நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாய கழிப்பறை வசதி மற்றும் பேரூராட்சி அருகே உள்ள வேளார் தெருவில் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் நவீன சிறுவர் பூங்கா அமைக்கப் பட்டு உள்ளது.
இதனை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் தேவி, திமுக மாவட்ட அவை தலைவர் பால சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்த ராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய சேர்மன் பஞ்சு அழகு, ஒன்றிய துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், இளைஞரணி சந்தனகருப்பு, அணி அமைப்பாளர்கள் யோகேஷ், தவசதிஷ், ராகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- முறைகேடாக அதிகாரிகள் திட்டத்தில் சேர்த்து பணத்தை முறைகேடு செய்துள்ளனர்.
மதுரை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த லட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பிரதமரின் அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தேன். அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அதிகாரிகள் திட்டத்தின் கீழ் என்னை பயனாளியாக தேர்ந்தெடுத்தனர்.
இந்த நிலையில் அந்த திட்டத்தில் எனக்கு வரவேண்டிய பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது உரிய பதிலளிக்காமல், காலம் தாழ்த்தினர். மேலும் இது குறித்து விசாரித்த போது அதே கிராமத்தில் எனது பெயரை கொண்ட வேறொரு நபர் இந்த திட்டத்தின் கீழ் பயனாளியாக சேர்க்கப்பட்டது தெரியவந்தது. என்னை பயனாளியாக தேர்ந்தெடுத்து விட்டு வேறொரு நபரை முறைகேடாக அதிகாரிகள் திட்டத்தில் சேர்த்து பணத்தை முறைகேடு செய்துள்ளனர்.
எனவே எனக்கு அந்த திட்டத்தின் கீழ் வரவேண்டிய பணத்தை வழங்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி,
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது.வறுமையில் உள்ளவர்களுக்கான திட்டத்தில் முறைகேடு நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த திட்டம் முறையாக வெளிப்படை தன்மையோடு செயல்படுத்தப்பட வேண்டும். தகுதியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைவதை அதிகாரிகள் தான் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் உண்மையான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடையும்.
எனவே சிவகங்கை மாவட்ட கலெக்டர் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மனு தாரர் லட்சுமிக்கு 12 வாரத்தில் மானிய தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
- எங்கள் பகுதி பொதுமக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன்.
- சம்பந்தமே இல்லாமல் பல்வேறு திட்டங்களை எங்கள் வார்டில் செயல்படுத்துகிறார்கள்.
மதுரை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சித்ரா தேவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
நான் அம்பாசமுத்திரம் நகராட்சி 8-வது வார்டு சுயேச்சை கவுன்சிலராக உள்ளேன். எங்கள் பகுதி பொதுமக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். எங்கள் வார்டு மக்களின் குறைகளையும், அடிப்படை வசதிகள் குறித்தும் தொடர்ந்து நகராட்சியிடம் முறையிட்டு வருகிறேன்.
ஆனால் இங்கு உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தருவதில்லை. சம்பந்தமே இல்லாமல் பல்வேறு திட்டங்களை எங்கள் வார்டில் செயல்படுத்துகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படுவதில்லை.
இதை சுட்டிக்காட்டி தொடர்ந்து வார்டு மக்களின் நலனுக்காக போராடுகிறேன். எனது கோரிக்கைகள் இதுவரை ஏற்கப்படவில்லை. எனவே எங்கள் வார்டு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளித்தேன். அவர்கள் அனுமதி மறுத்துள்ளனர். நான் திட்டமிட்டபடி நாளை (6-ந்தேதி) போராட்டம் நடத்த அனுமதிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் மனுதாரர் தனது போராட்டத்தை நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
- மதுரையில் வருகிற 12-ந்தேதி தொடங்கும் புத்தக கண்காட்சி 10 நாட்கள் நடக்கிறது.
- சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன.
மதுரை
மதுரையில் புத்தக கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்த படியாக தமிழகத்தில் மிகப்பெரிய புத்தக கண்காட்சியாக மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சி உள்ளது.
இந்த ஆண்டு புத்தக கண்காட்சி வருகிற 12ந்தேதி முதல் தமுக்கம் மைதா னத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. 22ந்தேதி முதல் 10 நாட்கள் வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. தென் இந்திய புத்தக பதிப்பா ளர்கள் சங்கம், மதுரை மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த கண் காட்சியை நடத்துகின்றன. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். இந்த ஆண்டு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இதில் பல்வேறு துறைகள், பதிப்பகங்கள், எழுத்தா ளர்களின் பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் இடம்பெற உள்ளன.
கண்காட்சி நடைபெறும் நாட்களில் மாலையில் நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அதன்படி இந்த புத்தக கண்காட்சி நடத்தப் படுகிறது. வாசிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளாக இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும். சிறப்பான எதிர்கால தலைமுறையை உருவாக்கு வதற்கு புத்தகங்கள் வழி காட்டியாக அமையும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமான, பிடித்தமான புத்தகங்களை வாங்கிக்கொடுத்து அவர் களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சங்கீதா கேட்டுக்கொண்டுள்ளார்.
- மதுரையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
- ஒப்பந்த முறையில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாநகராட்சியின் 2-வது மண்டலத்தை உள்ளடக்கிய விளாங்குடி, கரிசல்குளம், ஜவகர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின்ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பி.பி.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பா ளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கே.கே. நகர் மெயின் ரோடு, அண்ணா நகர் மெயின் ரோடு, சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியா புரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய பகுதி களில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த முறையில் நூற்றுக்க ணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 500-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கரிசல்குளத்தில் உள்ள மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலு வலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தூய்மை பணியாளர்களின் கோரிக்கை தொடர்பாக நாளை மாநகராட்சியில் உயர்மட்ட அதிகாரிகளின் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சுகாதார பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ள தனியார் நிறுவனம் காண்ட்ராக்ட் எடுத்திருந்தது. அதன்படி தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். மேலும் வேலை பார்ப்பதற்கு சரியான ஊதியம் மற்றும் இ.எஸ்.ஐ., பி.எப்.ஆகிய வற்றிற்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பணம் செலுத்தா மல் இருந்தது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் மண்டலம் 2-ல் தூய்மை பணியில் ஈடுபட தனியார் நிறுவ னத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி யது. தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும், மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும் மற்றும் தொகுப்பு ஊழி யர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். உள்ளிட்டவை பிடித்தம் செய்ய வேண்டும், 18 வருடமாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நாளை மாநகராட்சி அனைத்து மண்டலங்களி லும் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.
முன்னதாக நடந்த போராட்டத்தை முன்னிட்டு காவல் உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் கூடல்புதூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் புலிக்குட்டி அய்யனார் மற்றும் ஆயுதப்படை போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- தாலிக்கு தங்கம் திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்தியது ஏன்? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
- மக்கள் சேவையில் முதன்மையாக இருந்து வருகிறது.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் கூடக்கோயில், மேல உப்பிலி குண்டு, கல்லணை, கொக்குளம், வேப்பங்குளம், மருதங்குடி ஆகிய பகுதி களில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் வேப்பங்குளம் கண்ணன் தலைமை தாங்கினார். முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சிவசுப்பிர மணியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செய லாளர் துரைப்பாண்டி, மாவட்ட மீனவரணி செயலாளர் சரவணபாண்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ராமையா, பிரபுசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உதயகுமார் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி மக்கள் சேவையில் முதன்மையாக இருந்து வருகிறது.
பெண் கல்வியை ஊக்குவிக்க தாலிக்கு தங்கம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்து, அதன் மூலம் தாலிக்கு 8 கிராம் தங்கம், படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரம் வழங்கினார். இதன் மூலம் 12 லட்சத்து 51 ஆயிரம் ஏழை பெண்கள் பயன் அடைந்தனர். இன்றைக்கு அந்த திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. இதற்கு என்ன காரணம்?
தி.மு.க. அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது. இந்தியாவி லேயே கடன் வாங்கிய மாநிலத்தில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- குற்றம்சாட்டப்பட்ட துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறையினர் 5191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தனர்.
- விசாரணைக்கு ஆஜரான பின் வெளியே வந்த துரைதயாநிதியிடம் நிருபர்கள், அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பினர்
மதுரை:
கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமம் பெற்றவர்கள் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி , மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் கிரானைட் குவாரிகள் மூடப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழு விசாரணை நடத்திய பின்னர் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக 2013-ம் ஆண்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த கிரானைட் குவாரி முறைகேடு சம்பந்தமான வழக்குகள் மேலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்குகள் கனிம வளக்குற்றங்களை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் நிறுவனமான ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் மீதும் மதுரை மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.257 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே 2013-ம் ஆண்டில் ஒலம்பஸ் குவாரி நிறுவனத்தின் பங்குதாரர் துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறையினர் 5191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 27-ம் தேதி மேலூர் நீதிமன்றத்தில் துரை தயாநிதி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது குற்றப்பத்திரிகைகளின் நகலை பெற்றுக்கொண்ட பின்பு இந்த வழக்கு மதுரை மாவட்ட கனிமவள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு செப். 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதன்படி இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கிரானைட் முறைகேடு வழக்கிற்காக நீதிபதி சிவகடாட்ஷம் முன்பாக துரைதயாநிதி இன்று நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற நவம்பர் 6-ந்தேதி வழக்கை ஒத்திவைத்தார்.
விசாரணைக்கு ஆஜரான பின் வெளியே வந்த துரைதயாநிதியிடம் நிருபர்கள், அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கோர்ட்டுக்கு வந்துள்ளேன் என பதில் அளித்தவாறு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
- பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார்.
- மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லுர் அருகே கோட்டைமேடு மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி (வயது35). இவர் தனது மகன் மேசாக் (11) மகள் மேகா (9) ஆகியோரு டன் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு அலங்காநல்லுர் போலீஸ் நிலையத்திற்கு புகார் மனு அளிப்பதற்காக வந்தார்.
அப்போது கண்மணி மற்றும் குழந்தைகள் திடீ ரென மயங்கி விழுந்து உள்ளனர். பின்னர் கண்மணியிடம் போலீசார் விசாரித்தபோது, தான் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுமார் 3 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரி வித்தார். மேலும் மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கொக்குளம் பகுதியைச் சேர்ந்த சரண் ராஜ் என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு சுமார் 2 வருடங்களாக அவருடன் வாழ்ந்து வந்த தாகவும் கூறினார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேறு பெண்ணுடன் சரண் ராஜூக்கு திருமணம் ஆகி விட்டது தெரியவந்ததால் தன்னை சரண்ராஜ் ஏமாற்றிய மன வேதனையில் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து தானும், தனது 2 குழந்தைகளும் எலி பேஸ்டை சாப்பிட்டு விட்ட தாகவும் கூறி உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த போலீ சார் உடனடியாக அவர்கள் 3 பேரையும் அலங்காநல்லுர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்க ளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக் காக அனுப்பி வைக்கப் பட்டனர். அங்கு அவர் களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேஸ்புக் காதலால் இளம்பெண் தனது இரு குழந்தையுடன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மேலூர் காஞ்சிவனம் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு விழா நடந்தது.
- ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
மேலூர்
மேலூரில் பஸ் நிலையம் எதிரில் மந்தை கோவிலில் பிரசித்திபெற்ற காஞ்சி வனம் சுவாமி கோவில் உள்ளது. மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 பட்டி கிராம மக்களின் காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. அதற்கு முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 18 பட்டி கிராம அம்பலகாரர்கள், இளங்கச்சிகள், கிராம பொதுமக்கள் காஞ்சிவனம் கோவிலில் ஒன்றுகூடி பாரம்பரிய வழக்கப்படி புரவி எடுப்பு விழாவின் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மேலூரில் உள்ள தெற்குப் பட்டியில் குதிரைகள் செய்யப்பட்டு தினமும் அங்கு பெண்கள் கிராம வழக்கப்படி கும்மி அடித்து, பாட்டுபாடி வணங்கி வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு தெற்குப்பட்டியில் இருந்து மாலைகள் மரியாதை களுடன், தாரை தப்பட்டை உடன் வான வேடிக்கை களுடன் குதிரைகளை 18 பட்டி கிராம மக்கள் பக்தி யுடன் சுமந்து ஊர்வல மாக காஞ்சிவனம் கோவிலுக்கு எடுத்து வந்தனர். 12 ஆண்டு களுக்கு பின் நடைபெறும் இந்த விழாவில் மேலூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வழிபட்ட னர்.
மேலூர் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிக மானதால் அனைத்து வாகனங்களையும் போலீ சார் மாற்று பாதை யில் அனுப்பினர். மேலும் இன்று மாலை காஞ்சிவனம் கோவிலில் இருந்து குதிரைகள் புறப்பட்டு மாத்திகண்மாயில் கரையில் உள்ள அய்யனார் கோவிலில் இறங்கி வைத்து சாமி வழிபாடு நடைபெறுகிறது.
- மதுரை ரிங் ரோட்டில் நள்ளிரவில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
- மோட்டார் சைக்கிள் கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
மதுரை
மதுரை ரிங் ரோடு சாலையில் நேற்று நள்ளிரவில் கண்டெய்னர் லாரி ஒன்று மாட்டுத்தாவணி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் ஒரே மோட்டார் சைக்கிளில் சோளங்குருணி யைச்சேர்ந்த ஜெயமுருகன் மகன் ரஞ்சித் (வயது16) , கண்ணன் மகன் வீரசந்தானம் (18) உள்பட 3 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். மண்டேலா நகர் அருகே மோட்டார் சைக்கிள் கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். 3 பேரும் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரஞ்சித், வீரசந்தானம் 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரைஅரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பெருங்குடி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவர் குறித்தும், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் குளோபல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
- 15-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றன.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் திருநகர் தனியார் கிளப் சார்பில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது, இதில் 15-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றன. மதுரை நாகனக்குளம் கல்வி குளோபல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று முதல் பரிசினை பெற்றனர். ஆட்டநாயகனாக கிரேன் மற்றும் தொடர் நாயகனாகப் பூபதி தேர்வுபெற்று பரிசுகளைப் பெற்றன. வெற்றிபெற்ற மாணவர்கள், கால்பந்தாட்ட பயிற்சியாளர் பாலமுருகன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சரவணபாலாஜி ஆகியோரை பள்ளி நிர்வாகம், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- உசிலம்பட்டியில் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு விஸ்வ இந்து பரிஷத்-பஜ்ரங்தள் அமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கூட்டத்துக்கு போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ேமடைகளை அப்புறப்படுத்துமாறு கூறினார். இதனால் போலீசாருக்கும், விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி மாநில அமைப்பாளர் சேதுராமன், பொறுப்பாளர் பீமாராவ்ராம் தலைமையில் விஸ்வ இந்துபரிஷத் நிர்வாகிகள் 30 பேர் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






