என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வா கிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மேற்கு (தெற்கு) ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் நத்தம் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் 2024 நாடாளு மன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வா கிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏக்கள் தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், சதன் பிரபாகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராம்குமார், ஒன்றிய செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சிறுவாலை, அம்பலதாடி, விட்டங்குலம் உள்ளிட்ட பல கிராமங்களில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.

    • பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் திருடப்பட்டது.
    • அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுைர பெருங்குடி இந்திரா நகர் பர்மா காலனியை சேர்ந்தவர் முத்துமாரி (வயது45), கட்டிட தொழிலாளி. இவரது கணவர் கருப்பசாமி இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    முத்துமாரி அதிகாலை யில் வேலைக்கு செல்வது வழக்கம். இதனால் பிள்ளைகள் வீட்டை பூட்டி சாவியை மறைத்து வைத்து விட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பிள்ளைகள் வீட்டை பூட்டி விட்டு சாவியை கோலப்பொடி டப்பாவில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மாலையில் வீட்டுக்கு வந்த மகள் சாவியை தேடி பார்த்தார். அப்போது சாவி அங்கு இல்லை. கதவை தள்ளி பார்த்தபோது கதவு திறந்திருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ. 3 ஆயிரம் திருடு போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் சாவியை வெளியே வைத்துவிட்டு செல்வதை நோட்டமிட்டு அதனை எடுத்து வீடு புகுந்து பணம்-நகையை திருடிச்சென்றுள்ளனர்.

    இதுகுறித்து அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் முத்துமாரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசு ரத்து செய்யப்படுகிறது.
    • வாடகை நிலுவைத்தொகைகளை மதுரை ஆதீன மடம் வசூல் செய்து கொள்ளலாம்.

    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டு கிளையில் மதுரை ஆதீனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஆதீனங்களில் மிகவும் பிரபலமான பிரசித்தி பெற்ற ஆதீன மடமாக மதுரை ஆதீனமடம் இருந்து வருகிறது. மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமாக மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஒரு இடத்தை பகவர்லால் என்பவர் தரை வாடகைக்கு பயன்படுத்தும் விதமாக 10 வருட ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டது. இதற்கு மாத வாடகையாக ரூ.2 ஆயிரத்து 500 என்றும், அதில் கட்டிடங்கள் கட்டினால் 10 வருட பயன்பாட்டிற்கு பின் அது ஆதீனத்திற்கு சொந்தமானது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.

    ஆனால் ஒப்பந்த விதிகளை மீறி 2013-ம் ஆண்டு மதுரை ஆதீனம் மற்றும் மாநகராட்சி உரிய அனுமதி இல்லாமல் பகவர்லால் பெரிய கட்டிடம் கட்டியது மட்டுமில்லாமல் வாடகையும் செலுத்துவதில்லை.

    எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது.

    ஆனால் இதற்கு எதிராக தமிழ்நாடு புதிய வாடகை சட்டத்தின் படி வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் பகவர்லால் மனு தாக்கல் செய்து உள்ளார். இது குறித்து ஆதீன மடத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் மற்றும் மடங்களுக்கு தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டம் (2017) பொருந்தாது. எனவே வருவாய் கோட்டாட்சியரின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது, ஆதீன மடத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 78-ன்படி கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான இடத்தில் உரிய வாடகை செலுத்தாதவர்கள் நில ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள். அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனருக்கு மனு அளித்தோம். அதை விசாரணை செய்த இணை இயக்குனர் ஆக்கிரமிப்பாளரை அகற்ற உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து பகவர்லால் ஆணையரிடம் முறையீடு செய்தார். அது நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நோட்டீஸ் சட்ட விரோதமானது. கோவில் மற்றும் மடங்களுக்கு இது பொருந்தாது எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் வாடகை வசூல் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் நிலுவையில் உள்ள மனுவை விரைந்து விசாரணை செய்து முடிக்க வேண்டும். மேலும் வாடகை நிலுவைத்தொகைகளை மதுரை ஆதீன மடம் வசூல் செய்து கொள்ளலாம். அதேபோல தமிழ்நாடு அரசின் புதிய வாடகை சட்டத்தின்படி வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசு ரத்து செய்யப்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறை கோவில் மற்றும் மடங்களுக்கு புதிய வாடகை சட்டம் பொருந்தாது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    • மதுைர மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் தேசிய ரத்த தான கூட்டம் நடந்தது.
    • முடிவில் ரத்த வங்கி முதுநிலை மேலாளர் ரவி நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மதுரை கிளை சார்பில் தேசிய ரத்த தான தினத்தை முன்னிட்டு ரத்த தானம் செய்யும் நிறுவனங்களை கவுரவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

    ரத்த வங்கியின் தலைவரும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவத் துறையின் தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வர வேற்றார். மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி மற்றும் மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சிறப்பு விருந்தினராக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டார். துணை மேயர் நாகராஜன், ஜோஸ், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி முன்னாள் துணைத் தலைவர், மதுரை ராதா கிருஷ்ணன், மாவட்ட கவர்னர், மதுரை மீனாட்சி மிஷன் கிளையின் தலைவர் டாக்டர் செந்தில் குமார், டாக்டர் கார்த்திகேயன், மதுரை மீனாட்சி கிளை செயலாளர் மீனாட்சி மிஷன் மருத்துவ மனையின் குழந்தைகள் ரத்த புற்றுநோய் பிரிவின் முதுநிலை நிபுணருமான காசி விஸ்வநாதன், பாண்டி யராஜன், முதுநிலை மேலா ளர், மார்க்கெட்டிங் மற்றும் அழகுமுனி, பொது மேலாளர்-மனிதவள மேம்பாட்டு துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் ரத்த வங்கி முதுநிலை மேலாளர் ரவி நன்றி கூறினார்.

    • சோழவந்தானில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 100-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் மதுரை மண்டல பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மேம்பாட்டு திட்டம் கணக்கெடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. பேரூராட்சி இளநிலை உதவியாளர் கண்ணம்மா வரவேற்றார். இப்பயிற்சியில் மதுரை மண்டல உதவி இயக்குனர் சேதுராமன், பேரூராட்சி செயலாளர் ஜீலான்பானு, சுகாதார பணி ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் தூய்மை பணியாளர்கள் மேம்பாடு திட்டம் மற்றும் கணக்கெடுப்பு பற்றி பேசினார்கள்.

    இந்த முகாமில் தூய்மை பணி குறித்தும், செயல்பாடு குறித்தும், கழிவு நீர் பராமரிப்பு, மலக்கசடு-கழிவுநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் சத்திய பிரகாஷ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி பணியாளர் பாலமுருகன் நன்றி கூறினார் இந்த முகாமில் 100-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூரில் ரூ.31 லட்சம் மதிப்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்- குடியிருப்பு கட்டுமான பணியை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு சேதமடைந்து இடியும் நிலையில் காணப் பட்டது. இதனால் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வருவாய்த் துறையினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பரிந்துரையின் பேரில் அலங்காநல்லூர் சந்தை மேடு பகுதியில் ரூ.30.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய வருவாய் ஆய்வாளர் அலு வலகம் மற்றும் குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்த ராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி வார்டு உறுப்பி னர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை மனித வள மேலாளர் முகமது பாசில் மற்றும் கணிணி அமைப்பு அலுவலர் உதய கதிரவன் செய்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் உள் தர உறுதி குழுவின் சார்பில் ஆசிரியர் திறன் மேம் பாட்டுப் பயிற்சிக் கருத் தரங்கம் நடந்தது. கல்லூரி தாளாளர் எம். எஸ்.ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோரின் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமை யில் தாங்கி பேசியதாவது:-

    உயர் கல்வி நிறுவனங் களின் தர மதிப்பீட்டை உறுதி செய்யும் குழு, பாடத் திட்ட அம்சங்கள், கற்பித்தல் முறை, ஆராய்ச்சி, உள் கட்ட மைப்பு, மாணவர் ஆதரவு, ஆளுமை, நிறுவன மதிப்பு கள் போன்ற 7 அளவு கோல் களின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, இந்தியா முழுவதும் உள்ள பல் கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டு வழங்கும் மதிப் பெண்கள் அடிப்படையில் தர மதிப்பீடு சான்றிதழ் வழங்கி வருகிறது. இது போன்ற பயிற்சிக் கருத் தரங்கம் மூலம் பேராசிரி யர்கள் தங்களை மேம் படுத்தி கொள்ளவும், கல்லூ ரியின் தரத்தை உயர்த்தி கொள்ளவும் முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை என். எம். ஆர். சுப்புராமன் பெண்கள் கல்லூரி ஆங் கில துறை பேராசிரியர் சிவப்பிரியா தேசிய தர மதிப்பீட்டின் ஏழு அம்சங் கள் குறித்து தெளிவான விளக்கத்தினை எடுத் துரைத்தார். பின்னர் பேராசிரியர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கத் தினை அளித்தார்.

    முன்னதாக கல்லூரி யின் ஆங்கிலத் துறை தலைவரும், உள் தர உறுதி குழுவின் ஒருங்கிணைப் பாளருமான பேராசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். கருத்தரங்கில் வணிக மேலாண்மை துறை இயக்கு னர் பேராசிரியர் நடேச பாண்டியன், கல்விசார் நெறியாளர் டாக்டர் நாசர், துறை தலைவர்கள் டாக்டர் முனியாண்டி, பால்ராஜ், டாக்டர் கார்த்திகா, சீனி வாசன், சி.எஸ். கார்த்திகா, சுபஸ்ரீ, தனலட்சுமி, உள் தர உறுதிக் குழுவின் உறுப்பி னர்கள் ஜஸ்டின், சசிகலா உள்ளிட்ட 60-க்கும் மேற் பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன டைந்தனர். இதற்கான ஏற் பாடுகளை மனித வள மேலாளர் முகமது பாசில் மற்றும் கணிணி அமைப்பு அலுவலர் உதய கதிரவன் செய்தனர்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை மதுரை வடக்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி, அண்ணா பஸ் நிலையத்தில் துைண மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடைபெறு கிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்டை ஏற்படும்.

    அண்ணா பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்தி மியூசியம், கரும்பாலை பகுதிகள், தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியி ருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்துவ கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, அரசு ராசாசி மருத்துவ மனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில்தெரு, சின்னக் கண்மாய் தெரு, எச்.ஏ.கான் ரோடு, இ2 இ2 ரோடு, ஒ.சி.பி.எம். பள்ளி, செல்லூர் பகுதிகள், பாலம்ஸ்டேசன் ரோடு, கான்சாபுரம்,

    பி.எஸ்.என்.எல். தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப், மற்றும் தமுக்கம் பகுதிகள், சேவாலயம் ரோடு, ஆர்.ஆர்.மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா வெற்றிலை பேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50 அடி ரோடு, போஸ்வீதி, குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜூவா ரோடு.

    மீனாட்சி புரம், சத்தியமூர்த்தி 1 முதல் 7 தெருக்கள், சரஸ்வதி தியேட்டர் பகுதிகள், தாமஸ்வீதி, நரிமேடு மெயின்ரோடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி பகுதி கள், அன்னைநகர், எஸ்.என்.ஏ. அப்பார்ட் மெண்ட், எல்.ஐ.ஜி. காலனி, பள்ளி வாசல் தெரு, மௌவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, கே.டி.கே. தங்கமணி தெரு, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், 80 அடி ரோடு ஆவின் வரை, வைகை காலனி.அம்பிகா தியேட்டர் சுற்றியுள்ள பகுதிகள்.

    ராமவர்மாநகர், பி.ஆர்.சி, புதூர், புதூர் பஸ் நிலையம், சுந்தரம் தியேட்டர் ரோடு, மானகிரி, அன்புநகர், சதாசிவநகர், அழகர்கோவில் மெயின் ரோடு. கற்பகநகர், லூர்து நகர். காந்திபுரம், சர்வே யர்காலனி, சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம், அல்அமின்நகர், மாவட்ட நீதிமன்றம் எதிர்புறம், கே.கே.நகர் ஆர்ச் பகுதி, மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பழம் மார்கெட், லேக் வியூ முழுவதும், டி.சி.சி. மெயின் ரோடு, ராம லெட்சுமி நகர், எல்.சி.சி. பகுதிகள், அழகர் கோவில் மூன்றுமாவடி, பாண்டியன் நகர்,அழகர் நகர், ஆவின் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    இந்த தகவலை மதுரை வடக்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சுகாதாரக்கேடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதுடன் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி யடைந்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியின் 2-வது (வடக்கு) மண்ட லத்திற்கு உட்பட்ட பகுதி களில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணிகளை மேற் கொள்ள ஒப்பந்த முறையில் நூற்றுக்கணக்கா னோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்யாமல் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு கீழ் பணிபுரிய மாநகராட்சி ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் தூய்மை பணி யாளர்கள் நிரந்தரம் செய்வ தற்கு எதிரான அரசாணை 152ஐ ரத்து செய்ய கோரியும், தினக்கூலி தூய்மை பணியாளர்களை யும், ஓட்டுனர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    கடந்த 4 ஆண்டுகளாக ஓய்வு பெற்ற நிரந்தர பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்ப யன்களை முழுமையாக உடனே வழங்க வேண்டும், தினக்கூலி மற்றும் கிராமப் பஞ்சாயத்து தொகுப்பூதிய தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் , கனரக வாகன ஓட்டுனர்கள், அனி மேட்டர் பணியா ளர்களுக்கு தினச்சம்பளமாக கொசு மருந்து மற்றும் அபேட் மருந்து பணியாளர்களுக்கு, பாதாளச்சாக்கடை மற்றும் பிட்டர் கூலி பணியா ளர்களுக்கு அரசாணை 36(2D)-ன்படி ஊதியம் வழங்க வேண்டும்.

    சுகாதாரம் மற்றும் பொறி யியல் பிரிவு ஒப்பந்த தொழிலாளர்களின் இ.பி.எப், குளறுபடிகளை சரி செய்து இ.பி.எப், பணத்தை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திட வேண்டும், ஓட்டுனர்க ளுக்கான சம்பளத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்து வந்தனர்.

    அதன்படி நேற்று 500-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கரிசல் குளத்தில் உள்ள மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலு வலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம் குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தூய்மை பணியாளர்களின் கோரிக்கை தொடர்பாக நாளை மாநகராட்சியில் உயர்மட்ட அதிகாரிகளின் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் 2-வது நாளாக மதுரை சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மண்டல அலுவலக வளாகத்தில் அமர்ந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து 2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவகர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின்ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பி.பி.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பா ளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கே.கே. நகர் மெயின் ரோடு, அண்ணா நகர் மெயின் ரோடு, சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியா புரம், பி.பி.சாவடி, கோச்சடை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணிகள் சரிவர நடைபெற வில்லை.

    இதனால் அந்த பகுதிகளில் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதுடன் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி யடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் போராட் டத்தில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • 58-வது வட்ட தி.மு.க. சார்பில் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
    • விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார்.

    மதுரை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. 58-வது வட்டம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞான ஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலை பள்ளி வளாகத்தில் நாளை (7-ந்தேதி) நடைபெறு கிறது.

    விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். 58-வது வார்டு கவுன்சிலரும், மாநில தலைமை செயற்குழு உறுப்பின ருமான ஜெயராம் அனைவரையும் வரவேற்று பேசுகிறார். பகுதி செயலர் மாறன், வட்ட செயலாளர் சீனிர மேஷ், கப்பல்ஜான், வக்கீல் ராகவேந்திரன், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரி யர் ராஜாராம், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கு கின்றனர். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பொன்முத்து ராமலிங்கம், வேலுசாமி, குழந்தைவேலு, மூவேந்தி ரன், மேயர் இந்திராணி, தன செல்வம், சின்னம்மாள், அக்ரிகணேசன், சவுந்தர் ராஜன் உள்பட பலர் பங் கேற்கின்றனர். ராஜா, சட்சி தானந்தம், அன்புகுமார், ஆகியோர் நன்றி கூறு கின்றனர்.

    • மதுரை அருகே டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • ஹோமியோபதி மாத்திரைகள் வார்டு கவுன்சிலர் மூலமாக வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியும், நகராட்சியும் இணைந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை நடத்தியது. திருமங்கலம் நகராட்சியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் டெங்கு காய்ச்சல் வருவதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோமியோபதி மாத்திரைகள் வார்டு கவுன்சிலர் மூலமாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஹோமியோபதி மருத்துவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பேசினார். தொடர்ந்து அரசு ஹோமியோபதி மருத்துவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் திருக்குமரன், வீரக்குமார், சின்னச்சாமி சுகாதார ஆய்வாளர்கள் அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட்பட பலர் கலந்து கொண்டனர். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவுன்சிலர் உடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று மாத்திரை வழங்கினர்.

    • சோழவந்தான், வாடிப்பட்டியில் வள்ளலார் தினம் கொண்டாடப்பட்டது.
    • இதில் பக்தர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் சன்மார்க்க சங்கம் சார்பாக வள்ளலார் பிறந்த தின விழா கொண்டா டப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு புஷ்பலதா மணிகண்டன் ஜோதி விளக்கேற்றினார். வள்ளலார் படம் அலங்கரிக்கப்பட்டு சன்மார்க்க சங்கத்தினர் நகர்வலம் வந்தனர். அகழ் பாராயணம் நடந்து வள்ளலாரும் வள்ளுவரும் என்ற தலைப்பில் கம்பம் மொக்கச்சாமி பக்தி சொற்பொழிவாற்றினார். சன்மார்க்க சங்கத்தின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி விழாவிற்கு தலைமை தாங்கினார்.

    செயலாளர் நல்லுச்சாமி, இணைச் செயலாளர் நாகையா, ஆலோசகர் மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். சங்கத்தின் மகளிர் அணி செயலாளர் சாந்தி ஜோதி வழிபாடு நடத்தினார். இதைத் தொடர்ந்து இங்கு உள்ள அய்யப்பன் கோவிலில் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்ட மடக்கி கண்மாய்கரையில் இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலையடிவாரத்தில் 36 அடி உயர லிங்கவடிவிலான அண்ணாமலையார் கோவிலில் வள்ளலார் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. இந்தவிழாவை யொட்டி ராமலிங்கவள்ளலாருக்கு திருவருட்பா பாடி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்தபூஜைகளை மிளகாய்பொடி சாமியார் அங்க முத்து, கிருஷ்ணன் ஆகியோர் செய்தனர். இந்தவிழாவிற்கு மனவளக்கலை மன்ற தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். உலக நலசத்தியஞான சித்தாந்தசபை நிர்வாகி பழக்கடைபாண்டி முன்னிலை வகித்தார். ஜோதிடர் ஆனந்தன் வர வேற்றார். அண்ணா மலை யார் கோவில் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜேஸ்வரி கோபிநாத் அன்னதானம் வழங்கினார். இதில் பக்தர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×