search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alankanallur"

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 810 காளைகள் பங்கேற்றன.
    • ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு வென்று கார் பரிசு.

    உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

    இன்று காலை 7 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது.

    மொத்தம் 810 காளைகள் போட்டியில் பங்கேற்றன.

    அமைச்சர் மூர்த்தியின் அறிவுறுத்தல்படி எஞ்சிய காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.

    18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் இரண்டாம் பரிசு பெற்றார்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு வென்று கார் பரிசு பெற்றுள்ளது.

    சிறந்த காளையாக 2ம் பரிசுக்கு மதுரை காமராஜபுரம் வெள்ளைக்காளி சௌந்தர் என்பவரின் மாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது முதல் பரிசு பெறும் கருப்பாயூரணி கார்த்தி, 2022ம் ஆண்டிலும் முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • அலங்காநல்லூரில் ரூ.31 லட்சம் மதிப்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்- குடியிருப்பு கட்டுமான பணியை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு சேதமடைந்து இடியும் நிலையில் காணப் பட்டது. இதனால் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வருவாய்த் துறையினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பரிந்துரையின் பேரில் அலங்காநல்லூர் சந்தை மேடு பகுதியில் ரூ.30.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய வருவாய் ஆய்வாளர் அலு வலகம் மற்றும் குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்த ராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி வார்டு உறுப்பி னர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூர் அருகே உள்ள மந்தை கருப்பணசாமி கோவில் உற்சவ விழா நடந்தது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஇலந்தைகுளம் ஆற்றங்கரை தென்புறம் உள்ளது மந்தைகருப்பண சுவாமி கோவில். இங்கு ஆனி மாத கிடாய் வெட்டு உற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழா கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு உற்சவ விழா நடந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கினர். விழா ஏற்பாடுகளை பழனிச்சாமி நாட்டாமை வகையறா, அலங்கார் பூசாரி வகையறா, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அலங்காநல்லூரில்பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • சொற்பொழிவு, நாடகம், கோலாட்டம், கும்மியாட்டம், பாட்டு, ரங்கோலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூரில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை துணை செயலாளர் தொடங்கி வைத்தார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் வன்முறைக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து சொற்பொழிவு, நாடகம், கோலாட்டம், கும்மியாட்டம், பாட்டு, ரங்கோலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரத்தை மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் துணைத் தலைவர் காளிதாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர்கள் மரியா, காளிதாஸ், மாவட்ட வள பயிற்றுநர் தேவி, வட்டார இயக்க மேலாளர் மகாலட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராதிகா, கலா ராணி, தேவி, முத்துச்செல்வி, உமாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் மரியா நன்றி கூறினார்.

    • அலங்காநல்லூரில் சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
    • பாலமேடு பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூரில் வட்டார சுகாதாரப் பேரவை கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொன் பார்த்திபன், விஜய் ஆனந்த், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். சுகாதார பேரவை குழுவின் மூலம் கிராம மக்களின் சுகாதார தேவைகள் குறித்து கேட்டறிந்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பி தேவையை பூர்த்தி செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஜீலான் பானு, தேவி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் உஷா, தானம் அறக்கட்டளை கிராமப்புற ஒருங்கிணைப்பாளர் முத்தையா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூரில் 11-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்.
    • காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை ஏற்படும்.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை மறுநாள்(11-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை யு.உசிலம்பட்டி, மறவர்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்ன பாலமேடு, சுக்கம்பட்டி, கோணாம்பட்டி, சாத்தியார் அணை, ஏர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி,, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், பாலமேடு, அலங்காநல்லூர், சுகர் மில், பண்ணைகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார்நத்தம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழசின்னம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • அலங்காநல்லூர், பாலமேட்டில் திட்டப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
    • மண்புழு உரம், கலவை உரம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகளில் நடக்கும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார பணிகளை பேரூராட்சிகளின் ஆணை யாளர் செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு பஸ் நிலைய, வளம் மீட்பு பூங்கா, கழிப்பறைகள், குப்பையை தரம் பிரித்தல், மண்புழு உரம், கலவை உரம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளில் உதவி இயக்குநர் சேதுராமன், செயல் அலுவலர்கள் ஜீலான் பானு, தேவி, பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன், துணை தலைவர்கள் சுவாமிநாதன், ராமராஜன், மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சர்வதேச யோகா தினம் நடந்தது.
    • ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி நடந்தது. உடற்கல்வி ஆசிரியர் காட்வின் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியின் முன்னதாக மாணவர்கள் பள்ளி வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர்.

    யோகா பயிற்சி சுமார் 1 மணிநேரம் நடந்தது. கல்லணை ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சூரிய நமஸ்காரம், தாடாசனம், விருச்சிகாசனம், புஜங்காசனம் உள்ளிட்ட ஆசனங்கள் கற்றுத்தரப்பட்டது.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக உலக யோகா தினத்தையொட்டியோகா பயிற்சி நடத்தப்பட்டது.இந்த பயிற்சி வகுப்புக்கு நீதிபதி கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நீதிபதி வெங்கடலட்சுமி தொடக்கி வைத்தார்.நீதிமன்றப் பணியாளர்கள் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சி வகுப்பில்யோகா பயிற்சி யாளர் சுரேஷ் மற்றும் கராத்தே பயிற்சியாளர் கணேசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதன் ஏற்பாடுகளைவட்ட சட்டப்பணிகள் குழு சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    ×