அலங்காநல்லூரில் திட்டப்பணிகள் ஆய்வு

அலங்காநல்லூர், பாலமேட்டில் திட்டப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மண்புழு உரம், கலவை உரம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.
அலங்காநல்லூரில் திட்டப்பணிகள் ஆய்வு
Published on

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகளில் நடக்கும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார பணிகளை பேரூராட்சிகளின் ஆணை யாளர் செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு பஸ் நிலைய, வளம் மீட்பு பூங்கா, கழிப்பறைகள், குப்பையை தரம் பிரித்தல், மண்புழு உரம், கலவை உரம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளில் உதவி இயக்குநர் சேதுராமன், செயல் அலுவலர்கள் ஜீலான் பானு, தேவி, பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன், துணை தலைவர்கள் சுவாமிநாதன், ராமராஜன், மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com