வருவாய் ஆய்வாளர் அலுவலகம்- குடியிருப்பு கட்டுமான பணி தொடக்கம்

அலங்காநல்லூரில் ரூ.31 லட்சம் மதிப்பில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்- குடியிருப்பு கட்டுமான பணியை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு சேதமடைந்து இடியும் நிலையில் காணப் பட்டது. இதனால் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வருவாய்த் துறையினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பரிந்துரையின் பேரில் அலங்காநல்லூர் சந்தை மேடு பகுதியில் ரூ.30.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய வருவாய் ஆய்வாளர் அலு வலகம் மற்றும் குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்த ராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி வார்டு உறுப்பி னர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com