சுகாதார பேரவை கூட்டம்

அலங்காநல்லூரில் சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. பாலமேடு பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர்.
சுகாதார பேரவை கூட்டம்
Published on

அலங்காநல்லூர்

அலங்காநல்லூரில் வட்டார சுகாதாரப் பேரவை கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொன் பார்த்திபன், விஜய் ஆனந்த், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். சுகாதார பேரவை குழுவின் மூலம் கிராம மக்களின் சுகாதார தேவைகள் குறித்து கேட்டறிந்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பி தேவையை பூர்த்தி செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஜீலான் பானு, தேவி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் உஷா, தானம் அறக்கட்டளை கிராமப்புற ஒருங்கிணைப்பாளர் முத்தையா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com