

மதுரை
மதுைர பெருங்குடி இந்திரா நகர் பர்மா காலனியை சேர்ந்தவர் முத்துமாரி (வயது45), கட்டிட தொழிலாளி. இவரது கணவர் கருப்பசாமி இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
முத்துமாரி அதிகாலை யில் வேலைக்கு செல்வது வழக்கம். இதனால் பிள்ளைகள் வீட்டை பூட்டி சாவியை மறைத்து வைத்து விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பிள்ளைகள் வீட்டை பூட்டி விட்டு சாவியை கோலப்பொடி டப்பாவில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மாலையில் வீட்டுக்கு வந்த மகள் சாவியை தேடி பார்த்தார். அப்போது சாவி அங்கு இல்லை. கதவை தள்ளி பார்த்தபோது கதவு திறந்திருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ. 3 ஆயிரம் திருடு போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் சாவியை வெளியே வைத்துவிட்டு செல்வதை நோட்டமிட்டு அதனை எடுத்து வீடு புகுந்து பணம்-நகையை திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் முத்துமாரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.