என் மலர்
மதுரை
- தெத்தூர் கிராமத்தில் வன உயிரினங்களை பாதுகாக்க சிறைச்சாலை கட்டும் முடிவை கைவிட வேண்டும்.
- கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாடிப்பட்டி
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலா ளர் யூனியன் மாநில பொதுச் செய லாளர் தெத்தூர் கரடி முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தெத்தூர், மேட்டுப்பட்டி ஆகிய 2 ஊராட்சிகள் 10 குக்கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகு தியில் 1971-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு சிறுமலை வனப் பகுதியை வருவாய் துறைக்கு மாற்றம் செய்து 840 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக நிலங்கள் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் வழங்கப்பட்டது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறுதானிய உற் பத்தி, பலன் தரும் பழ மரங்கள் நட்டும் மற்றும் மானாவாரி பயிரிட்டும் விவசாயம் செய்து வருகின்ற னர். இவர்களின் வாழ்வா தாரம் இந்நிலங்களை சார்ந்துள்ளது. இதில் சிலர் 2006-ல் பட்டா பெற்றுள் ளனர். பலர் பட்டா பெறா மல் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் பட்டாபிராமில் புதிதாக மதுரை மத்திய சிறைச் சாலை கட்ட அரசு முடிவு செய்தது. இதையடுத்து அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. சிறைச் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏழைகளுக்கு வழங்கிய நிலத்தை தற்போது மீண்டும் தி.மு.க ஆட்சியில் கையகப் படுத்திருப்பது பொது மக்களிடம், விவசாயி களிடமும் பெரும் எதிர்ப் பையும், அதிருப்திையையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனால் சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. சிறை அமைய உள்ள இடம் சிறுமலையின் தென் பகுதியான அடர்ந்த வனப் பகுதியாகும். இங்கு காட்டு எருமை, மாடுகள், புள்ளி மான்கள், வரையாடுகள், காட்டு பன்றிகள், முள்ளம் பன்றிகள், தேவாங்கு உள்ளிட்ட அனைத்து வன விலங்குகள் வசித்து வருகின்றன.
விவசாயிகள் மற்றும் வன விலங்குகளின் நலனை கொண்டு தெத்தூரில் சிறைச்சாலை கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மேலும் பட்டா இல்லாத விவசாயி களுக்கு பட்டா வழங்கி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மதுரை மாவட்டத்தில் சம்பா சாகுபடி 67 சதவீதம் சரிந்தது.
- வருகிற 12-ந்தேதி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மதுரை
தமிழகத்தில் உள்ள முக் கிய நீராதாரங்கள் போதிய மழை இல்லாததால் வறண்டு போய் காணப்படு கின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அைடந் துள்ளனர். காலம் தவறிய பருவ மழையால் குறிப்பிட்ட நேரத்தில் சம்பா சாகுபடியில் ஈடுபடமுடியாமல் போனது.
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி வரை சம்பா சாகுபடி பரப்பளவு கடந்த ஆண்டை விட 67 சதவீதம் குறைந்துள் ளதாக வேளாண்மைத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக் யில் தெரிவித்துள் ளது. வழக்கமாக, செப்டம்பர் மாதத்திலேயே 45,000 ஹெக் டேரில் நெல் சாகுபடிக்கான விதைப்பு பணிகள் தொடங் கும்.
ஆனால், போதிய மழை பெய்யாததாலும், வைகை யில் நீர் இருப்பு குறைந்து தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதாலும், பெரும்பா லான விவசாயிகள் இந்த ஆண்டு காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் விவசாயிகள் தங்கள் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செப்டம்பரில் முக்கிய நீர் ஆதாரங்களுக்கான தண் ணீர் வரத்து வந்ததால் 185 ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி பணிகள் தொடங்கி யதாக வேளாண் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், சுமார் 553.645 ஹெக்டேர் பரப்பளவில் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த ஆண்டு சம்பா பருவத்தின் முடிவில் மாவட்டத்தில் சுமார் 45,000 ஹெக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட் டது.
தற்போது சாகுபடி பரப்பளவு குறைந்திருந்தபோதிலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் மீண்டும் பணிகள் வேகம் எடுக்கும் என்று வேளாண் மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையினை வழங்கவேண்டும் என்றும், இந்தாண்டு குறுவை, சம்பா பருவ சாகுபடி தண்ணீர் வராததால் பொய்த்து விட் டது. எனவே மதுரை மாவட் டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் கவுரவத் தலை வர் எம்.பி.ராமன் அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் விதைப்புப் பணிகளை முடித்திருந்தா லும், தற்போது மழை பெய்து வருவதால், முழுவது மாக மீண்டும் தொடங்க வேண்டிய சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை விவசாயிகள் சங்க அமைப் பாளர் எம்.கவாஸ்கர் கூறு கையில், நல்ல மழை பெய்த தால் விதைப்பு பணியை துவக்கினோம். விவசாயிகள் ஏக்கருக்கு சராசரியாக ரூ.12,000 வரை செலவழித் துள்ளனர் என்றார். விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்கக் கோரி, ஆர்.எஸ்.மங்கலம், திருவா டானை ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள், வருகிற 12-ந்தேதி திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுபற்றி நேற்று (ஞாயிற் றுக்கிழமை) நடைபெற்ற சங்கக் கூட்டத்தில், 57-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங் களுக்கு இந்த ஆண்டு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங் கப்படவில்லை என்று விவ சாயிகள் புகார் தெரிவித்த னர்.
கடந்த ஐந்தாண்டு அறு வடை சராசரி அடிப்படை யில் காப்பீட்டுத் தொகை வழங்குவது தவறானது, நடப்பாண்டு சாகுபடியை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தனியார் நிறுவனங்கள் மூலம் காப் பீடு செய்யாமல், அரசு நிறு வனங்கள் மூலம் காப்பீடு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியு றுத்தி, நாங்கள் வரும் வியா ழன் அன்று திருவாடானை தாலுகா அலுவலகத்தில் போராட்டம் நடத்த இருக்கி றோம் என்று கூறினர்.
- மதுரை சமயநல்லூரில் நாளை மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமயநல்லூர், தேனூர், கட்டப்புளி நகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, விஸ்தாரா அப்பார்ட்மெண்ட், பரவை மெயின்ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டம்பட்டி, சிறுவாலை ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
- செக்யூரிட்டி நிறுவன அதிபர் வீட்டில் 45 பவுன் கொள்ளையடிக்கப்பட்டது.
- கண்காணிப்பு காமிராவில் பதிவான காட் சிகளை கொண்டும் கொள் ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசி லம்பட்டி பேரையூர் ரோட் டின் கிழக்கே உள்ள அண் ணா நகர் முதல் தெரு வில் வசித்து வருபவர் செல்வ ராஜ் (வயது 50). இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வெளியூ ரில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டை பூட்டிவிட்டு குடும் பத்தினருடன் நேற்று புறப் பட்டு சென்றார். இதற்கி டையே நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டி யிருந்த வீட்டின் பூட்டை உடைத்து நுழைய முயன்ற னர்.
அப்போது வீட்டின் வெளியே காவலுக்கு இருந்த நாய் ெதாடர்ந்து குரைத்தது. இதனால் அச்சம் அடைந்த அந்த மர்ம நபர்கள் நாயால் நாம் மாட்டிக்கொள்வோம் என்பதை உணர்ந்து அந்த நாய் சத்தம் போடாமல் இருக்க சரமாரியாக தாக்கி காயப்படுத்தினர்.
பின்னர் வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் தனி அறையில் வைக்கப்பட்டி ருந்த பீரோக்களை உடைத்து பார்த்தனர். அப்போது அங்கு நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கொள் ளையர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
இதையடுத்து அவர்கள் பேரையூர் ரோட்டில் மேற்கே பசும்பொன் நகரில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தும் ரவி (48) என்பவரது வீட்டிற்குள் புகுந்தனர். அந்த சமயம் ரவி போத்தம்பட்டி கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந் தார்.
இதனை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த அந்த கும்பல் வீட்டின் கதவை உடைத்து புகுந்தனர். பின் னர் பீரோவில் இருந்து 45 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். இன்று காலை வீடு திரும்பிய ரவி, வீட் டிற்குள் மர்ம நபர்கள் புகுந்திருப்பதையும், நகை கள் கொள்ளை போயிருந்த தையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் உசிலம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தடய வியல் நிபுணர்கள் மூலம் தடயங்களை பதிவு செய்தும், அந்த பகுதியில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட் சிகளை கொண்டும் கொள் ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
- தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- சட்ட விழிப்புணர்வு பேரணி காந்தி மியூசியத்தில் தொடங்கியது.
மதுரை
இந்தியாவில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதனை கலெக்டர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், விழிப்புணர்வு முழக்கங்களுடனும் பேரணியாக சென்றனர்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி காந்தி மியூசியத்தில் தொடங்கியது. இந்த பேரணியை மதுரை மாவட்ட அலுவலர் வினோத்தொடங்கி வைத்தார்.உதவி மாவட்ட அலுவலர்கள் பாண்டி, சுரேஷ் கண்ணன், அனுப்பானடி, தல்லாகுளம், திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறுபாலங்களை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
- ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் லேக் ஏரியாவி லும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2 பாகங்கள் கட்டப்பட்டன.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள டி.எம்.நகர், லேக் ஏரியா பகுதிகளில் மழை காலத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் அமைச்சர் மூர்த்தியிடம் மனு கொடுத்தனர்.
இதையடுத்து அமைச்ச ரின் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அலுவ லர்கள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் இங்கு சிறு பாலம் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். எங்கள் பகுதிக்கு பாலம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அமைச்சர் மூர்த்தியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் பாலம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கும்படி அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
அதன்படி ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் டி.எம். நகரி லும், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் லேக் ஏரியாவி லும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2 பாகங்கள் கட்டப் பட்டன. இந்த நிலையில் இந்த பாலங்களின் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பாலங்களை திறந்து வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு உடனடியாக அதில் கவனம் செலுத்தி நிறைவேற்றி தந்துள்ளது.
மேலும் வண்டியூரில் இருந்து ரிங் ரோடு வரை சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற சட்டமன்ற கூட்ட தொடரில் பத்திர பதிவுத்துறையில் மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.
இவ்வாறு அவர் கூறி னார்.
நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த், பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், நகர் நல அலுவலர் அரசு, முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன், தி.மு.க. பகுதி செயலாளர் சசிகுமார், மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளங்கோ, இந்து சமய மண்டல அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன், குடியிருப் போர் நல சங்க நிர்வாகிகள் பிரகலாதன், பிரேம்சந்த், தினகரன், வக்கீல் இளங்கோ வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரிங் ரோட்டில் இருந்து கல்மேடு வரை அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையையும் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
- மதுரையில் மறுசுழற்சி செய்யபட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமாக தயாரான சீருடைகள் விநியோகம் செய்யப்பட்டது.
- நிப்பான் நிறுவனர் தனுஷ்கோடி மற்றும் இந்தி யன் ஆயில் நிறுவனத்தின் கோட்ட மேலாளார் பிரேமா மற்றும் சம்பத்குமார் ஆகியோர் சீருடைகளை வழங்கினர்.
மதுரை
மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் சீருடைகள் தயாரிக்கப் பட்டு இந்திய ஆயில் நிறுவ னத்தின் மூலமாக சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழி யர்களுக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் சீரு டைகளாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்வில் நிப்பான் நிறுவனர் தனுஷ்கோடி மற்றும் இந்தி யன் ஆயில் நிறுவனத்தின் கோட்ட மேலாளார் பிரேமா மற்றும் சம்பத்குமார் ஆகி யோர் கலந்து கொண்டு ஊழியர்களுக்கு சீருடை களை வழங்கினர்.
- மதுரை அய்யர்பங்களாவில் சாகச நிகழ்ச்சிகளுடன் மக்களை மகிழ்விக்கும் கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிகழ்ச்சி நடக்கிறது.
- குடும்பத்துடன் வர மேலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரை
கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிறுவன மேலாளர்கள் வி.தேவராஜ், ஏ.எம்.எஸ். நாசர் கூறியதாவது:-
ஆசியாவிலேயே மிகப் பெரியதும், உலகப்புகழ் பெற்றதுமான கிரேட் இந்தி யன் சர்க்கஸ் நிறுவனம் சுமார் 45 ஆண்டுகள் பாரம் பரியம் மிக்கதாகும். 100-க் கும் மேற்பட்ட இந்திய, மலே சிய, ரஷ்ய நாட்டு அனுபவ மிக்க சாகச வீரர்களின் மயிர் கூச்செரியும் நிகழ்ச்சிக ளுக்கு பொதுமக்க ளிடம் எப்போதுமே தொடர்ந்து ஆதரவு இருந்து வருகிறது.
கடந்த 5 ஆண்டு இடை வெளிக்கு பிறகு மதுரையில் மீண்டும் மக்களை மகிழ் விக்க வந்துள்ளது கிரேட் இந்தியன் சர்க்கஸ். அதன் படி செப்டம்பர் 15-ந்தேதி முதல் மதுரை அய்யர் பங் களா கிருஷ்ணன் கோவில் மைதானத்தில் கிரேட் இந்தி யன் சர்க்கஸ் நிறுவனத்தா ரின் சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது.
தினசரி பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என மூன்று காட்சிக ளாக நடத்தப்படுகிறது. பகை, பள்ளி விடு முறை காலங்களை முன் னிட்டு இந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. பீமல் பார் விளை யாட்டுகள், கலைஞர்கள் பங்கேற்கும் சர்க்கஸ் பரேடு, நேபாள கலைஞரின் ஜிக் விங் விளையாட்டு, கோமா ளிகளின் நகைச்சுவை விளையாட்டுகள்,
அரேபிய நாட்டு ஒட்டகங் களின் சாகசங்கள், கேரள அழகிகளின் சைக்கிள் சாக சங்கள், ஆஸ்திரேலியா நாட்டு கலைஞரிடம் பயிற்சி பெற்ற கலைஞரின் அக்ரோ பட் எனப்படும் மயிர் கூச் செரியும் சாகச நிகழ்ச்சி, குதிரை சாகசங்கள், மரண கூண்டிற்குள் 3 பேர் செய்து காட்டும் அதிபயங்கர நிகழ்ச்சிகள், பொமேரியன் நாய்கள் செய்து காட்டும் வித்தைகள்,
மணிப்பூர் மாநில கலை ஞர்கள் பங்கேற்கும் கத்தி மேல் சாகசங்கள், பிரமிப் பூட்டும் ரோப் பேலன்ஸ், மிகச்சிறிய சைக்கிள் சாகசங் கள், கொல்கத்தா அழகிக ளின் துப்பாக்கி சூட்டிங், மகாராஷ்டிரா அழகிகளின் குரூப் டெண்டல் பேலன்சிங், 8 அழகிகள் பங்கேற்கும் சாகசங்கள், பிரமிப்பூட்டும் அதிபயங்கர பயர் டான்ஸ், மணிப்பூர் கலைஞர்களின் சேர் பேலன்ஸ் என எண் ணற்ற சாசக நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க குடும்பத்தின ருடன் வருகை தாருங்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
- நகரில் உள்ள வீதிகளில் பக்தி பாடல் பாடி ஆடி வந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோவி லில் திருக்கல்யாணம் நடை பெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மேளதாளத்து டன் பெண்கள் சீர்வரிசை எடுத்து 4 ரதவீதி வலம் வந்து கோவிலில் உள்ள யாகசாலை மண்டபத்தை அடைந்தனர். அங்கு யாகவேள்வியுடன் ஸ்ரீபதி என்ற சீதாராமன்பட்டர் திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்ச வம் நடைபெற்றது. உபயதா ரர் தங்கம் ஆசிரியை குடும் பத்தினர் அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசா தம் வழங்கினர்.
இதில் செயல் அலுவலர் சுதா, கோவில் பணியாளர் முரளிதரன் உட்பட ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு கருடாழ் வார் வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா நடந்தது. நேற்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு இக்கோவிலில் சிறப்பு அபிஷேகம், அர்ச் சனை, பூஜைகள் நடந்தது.
இதே போல் குருவித்துறை சித்தர் ரத வல்லப பெருமாள் கோவிலி லும், சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவி லில் உள்ள மகா விஷ்ணுக்கு புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது.
சோழவந் தான் ரவுத்து நாயக்கர் தெருவில் உள்ள கொண்டல் ராவத் நவநீத கிருஷ்ணா நந்த பஜனை குழுவினர் பூங்காவனம் தலைமையில் நகரில் உள்ள வீதிகளில் பக்தி பாடல் பாடி ஆடி வந்தனர்.
- கால்நடை மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
- விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
சோழவந்தான்
சோழவந்தான் கால்நடை மருத்துவமனை கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. இந்த கால்நடை மருத்துவ மனையில் சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பசுமாடு, காளை மாடு, ஆடுகள், பூனைகள், நாய்கள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை சிகிச்சை அழைத்து வரு கின்றனர்.
இங்கு கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய தொற்று நோய் மற்றும் மர்ம நோய்க்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இதற்கான தடுப்பூசியும் இங்கு போடப்படுகிறது. இந்த கால்நடை மருத்துவ மனையின் கட்டிட முன்பகுதி உட்பட பல பகுதி மேற்கூரை கள் சிமெண்ட் பெயர்ந்து கீழே விழுந்து கம்பி தெரிகிறது.
எந்த நேரம் இந்த மேல் கூரை இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது. இடிந்து விழுந் தால் இங்கு சிகிச்சைக்கு வரக்கூடிய கால்நடைக ளுக்கும், அழைத்து வரக் கூடிய பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.
விபரீதம் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இடிந்து விழக்கூடிய நிலை யில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டடத்தை கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி சிறைச்சாலை அமைக்கக்கூடாது என மூவேந்தர் முன்னேற்றக்கழகம் தீர்மானத்தில் கூறியுள்ளது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மூவேந்தர் முன்னேற்றக்கழக மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந் தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டி தலைமை தாங்கி னார். தெற்கு மாவட்ட செயலாளர் எம்.எம்.கே.மருதுபாண்டியன் முன் னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் கருப்பையாசுழியன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில பொரு ளாளர் கே.என்.நாக ராஜன், தென்மண்டல தலைவர் குஷின் செந்தில், மாவட்ட தலைவர் எம்.கே.கணேசன் ஆகியோர் பேசினர். ஒன்றிய விவசாய அணி செயலாளர் வையா புரி, சோழவந்தான் நகர துணைச் செயலாளர் சாமி நாதன், அலங்கை ஒன்றிய துணை செயலாளர் குமார், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சுகுமார், தொழி லாளர் அணி நகர செயலா ளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அக்டோபர் 27-ந்தேதி காளையார்கோவில் மருதுபாண்டியர் ஜெயந்தி விழா, 28-ந்தேதி கும்பகோ ணத்தில் நடைபெறும் தேவர்சிலை திறப்புவிழா, 29-ந்தேதி மாரியப்ப வாண் டையார் நூற்றாண்டு விழா, 30-ந்தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி ஆகிய விழாக்க ளுக்கு சென்று வருவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
சிறுமலை வனப்பகுதியில் தெத்தூர் கரடிக்கல்லில் வனவிலங்கு பாதுகாப்பு கருதி மதுரை மத்திய சிறைச் சாலை அமைக்ககூடாது என்றும், அந்த நிலங்களை பயன்படுத்தி வந்த விவசாயி களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்.
சாத்தை யாறு அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும், பருவ மழை தொடங்குவதை யொட்டி மழைநீரை சேக ரிக்க ஏரி, கண்மாய், குளங்க ளில் சீமைக்கருவேல முட் களை அகற்றி ஷட்டர்களை பழுதுபார்த்து கரைகளை உயர்த்தி சீரமைக்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் கருப்பு மணிவண்ணன் நன்றி கூறி னார்.
- பாதாள சாக்கடைகள் அடிக்கடி நிரம்பி சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
- சாலைகளில் தேங்காதவாறும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மதுரை
மதுரை மாநகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக காளவாசல் உள்ளது. மதுரையில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் காளவாசல் சந்திப்பை கடந்தே தேனி மெயின் ரோடு வழியாக செல்ல வேண்டும். அந்த பகுதி முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் நிரம்பி இருக்கின்றன.
மேலும் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, கம்பம் மற்றும் கேரளா செல்லும் புறநகர் பஸ் களும் இங்கு நிறுத்தியே பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் நெரிசலுடன் காணப்படும். இந்த நிலையில் காளவாசல் சந்திப்பு அருகில் தேனி மெயின் ரோடு பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகள் அடிக்கடி நிரம்பி கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் அவதியடைகின்றனர்.
அவ்வப்போது பாதாள சாக்கடைகள் அடைப்பு நீக்கி சரி செய்யப்பட்டாலும் மீண்டும் நிரம்பி கழிவுநீர் சாலையில் செல்கிறது. மதுரை மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் இந்த சாலை வழியாகத்தான் அடிக்கடி சென்று வருகின்றனர். இருப்பினும் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பஸ் நிறுத்ததிற்கு நடந்து செல்ல பயணிகள் சிரமப்படு கின்றனர்.
மேலும் சாலை யோரத்தில் வாகனங்களை நிறுத்துபவர்களும், பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களும் மூக்கை பிடித்தப்படி செல்லும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து அந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகளின் அடைப்பை முழுமையாக நீக்கி கழிவுநீர் சீராக செல்லவும், சாலைகளில் தேங்காதவாறும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






