search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன உயிரினங்களை பாதுகாக்க சிறைச்சாலை கட்டும் முடிவை கைவிட வேண்டும்
    X

    வன உயிரினங்களை பாதுகாக்க சிறைச்சாலை கட்டும் முடிவை கைவிட வேண்டும்

    • தெத்தூர் கிராமத்தில் வன உயிரினங்களை பாதுகாக்க சிறைச்சாலை கட்டும் முடிவை கைவிட வேண்டும்.
    • கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலா ளர் யூனியன் மாநில பொதுச் செய லாளர் தெத்தூர் கரடி முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தெத்தூர், மேட்டுப்பட்டி ஆகிய 2 ஊராட்சிகள் 10 குக்கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகு தியில் 1971-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு சிறுமலை வனப் பகுதியை வருவாய் துறைக்கு மாற்றம் செய்து 840 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக நிலங்கள் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் வழங்கப்பட்டது.

    கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறுதானிய உற் பத்தி, பலன் தரும் பழ மரங்கள் நட்டும் மற்றும் மானாவாரி பயிரிட்டும் விவசாயம் செய்து வருகின்ற னர். இவர்களின் வாழ்வா தாரம் இந்நிலங்களை சார்ந்துள்ளது. இதில் சிலர் 2006-ல் பட்டா பெற்றுள் ளனர். பலர் பட்டா பெறா மல் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பட்டாபிராமில் புதிதாக மதுரை மத்திய சிறைச் சாலை கட்ட அரசு முடிவு செய்தது. இதையடுத்து அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. சிறைச் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏழைகளுக்கு வழங்கிய நிலத்தை தற்போது மீண்டும் தி.மு.க ஆட்சியில் கையகப் படுத்திருப்பது பொது மக்களிடம், விவசாயி களிடமும் பெரும் எதிர்ப் பையும், அதிருப்திையையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. சிறை அமைய உள்ள இடம் சிறுமலையின் தென் பகுதியான அடர்ந்த வனப் பகுதியாகும். இங்கு காட்டு எருமை, மாடுகள், புள்ளி மான்கள், வரையாடுகள், காட்டு பன்றிகள், முள்ளம் பன்றிகள், தேவாங்கு உள்ளிட்ட அனைத்து வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    விவசாயிகள் மற்றும் வன விலங்குகளின் நலனை கொண்டு தெத்தூரில் சிறைச்சாலை கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மேலும் பட்டா இல்லாத விவசாயி களுக்கு பட்டா வழங்கி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×