என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேலூர் புரவி எடுப்பு விழா ஊர்வலம் நடந்தபோது எடுத்தபடம்.
15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு விழா
- மேலூர் காஞ்சிவனம் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு விழா நடந்தது.
- ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
மேலூர்
மேலூரில் பஸ் நிலையம் எதிரில் மந்தை கோவிலில் பிரசித்திபெற்ற காஞ்சி வனம் சுவாமி கோவில் உள்ளது. மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 பட்டி கிராம மக்களின் காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. அதற்கு முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 18 பட்டி கிராம அம்பலகாரர்கள், இளங்கச்சிகள், கிராம பொதுமக்கள் காஞ்சிவனம் கோவிலில் ஒன்றுகூடி பாரம்பரிய வழக்கப்படி புரவி எடுப்பு விழாவின் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மேலூரில் உள்ள தெற்குப் பட்டியில் குதிரைகள் செய்யப்பட்டு தினமும் அங்கு பெண்கள் கிராம வழக்கப்படி கும்மி அடித்து, பாட்டுபாடி வணங்கி வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு தெற்குப்பட்டியில் இருந்து மாலைகள் மரியாதை களுடன், தாரை தப்பட்டை உடன் வான வேடிக்கை களுடன் குதிரைகளை 18 பட்டி கிராம மக்கள் பக்தி யுடன் சுமந்து ஊர்வல மாக காஞ்சிவனம் கோவிலுக்கு எடுத்து வந்தனர். 12 ஆண்டு களுக்கு பின் நடைபெறும் இந்த விழாவில் மேலூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வழிபட்ட னர்.
மேலூர் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிக மானதால் அனைத்து வாகனங்களையும் போலீ சார் மாற்று பாதை யில் அனுப்பினர். மேலும் இன்று மாலை காஞ்சிவனம் கோவிலில் இருந்து குதிரைகள் புறப்பட்டு மாத்திகண்மாயில் கரையில் உள்ள அய்யனார் கோவிலில் இறங்கி வைத்து சாமி வழிபாடு நடைபெறுகிறது.






