என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
- மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை அருகே மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்யப் பட்டதன் நினைவு நாளை கருப்பு தினமாக அனுசரித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச. சார்பில் கருணாநிதி, சி.ஐ.டி.யு. சார்பில் லெனின், எச்.எம்.எஸ். சார்பில் பாதர் வெள்ளை, ஐ.என்.டி.யு.சி. சார்பில் ராஜசேகரன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேது, எம்.எல்.எப். சார்பில் மகபூப்ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் படுகொலைக்கு காரண மானவர் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி யதை திரும்பப்பெற வேண் டும், அனைத்து தொழிலா ளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளம் ரூ.26 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.






