என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஆசிரியர்கள் அதிகப்படுத்த வேண்டும் : ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
  X

  அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஆசிரியர்கள் அதிகப்படுத்த வேண்டும் : ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 100 சதவீதம் குழந்தைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்பிய கிராமங்களுக்கு பரிசு உள்ளிட்ட விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
  • மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் (நாகர்கோவில்), ராமச்சந்தி ரன் நாயர் (குழித்துறை), பெருமாள் (தக்கலை), ராமசுப்பு (திருவட்டார்), ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  நாகர்கோவில்:

  கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் அரவிந்த் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் குறித்தும், மாணவ-மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை குறித்தும், துறைசார்ந்த அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

  பின்னர் அவர் கூறியதாவது:-

  அரசு பள்ளிகளில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் கணக்கெடுப்பின்படி, 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், அனை வரையும் முதல் வகுப்பில் சேர்த்தல் வேண்டும். அனைத்து அரசு பள்ளிகள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1, முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி கற்று கொடுக்க வேண்டும்.

  1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப்பணியில் 20 சதவீத மும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமை, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000 என அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

  ஒற்றை இலக்க மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் அர்ப்பணிப்புடன் அதிகமாக மாணவ, மாணவியர்களை அப்பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து ஆசிரியர்களும் விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்து செல்வதோடு, பள்ளிகள் திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக முக்கியமான பகுதிகளில் பேரணி நடத்தப்பட வேண்டும்.

  இடைநிற்றல் அதிகமான இடங்களில் பேரணி நடத்தி மாணவர் சேர்க்கை செய்தல், உள்ளாட்சி பிரதிநிதிகள் போன்றவர்களை ஈடுபடுத்து வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளலாம். 100 சதவீதம் குழந்தைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்பிய கிராமங்களுக்கு பரிசு உள்ளிட்ட விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி குழந்தைகளை அரசுப்பள்ளி யில் சேர்க்க வேண்டும். வீடு வீடாக சென்று அழைப்பு விடுக்கலாம்.

  தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆன்லைன் கிளாஸ், வாட்ஸ் ஆப் குரூப்-ல் பயிற்சி, ஆசிரியர் மாணவர் பாட பரிமாற்றம் நடைபெறுவதை விளக்கலாம். சமூக வலை தளங்களில் ஆடியோ வீடியோ பதிவுகள் மேற்கொள்ளச் செய்யலாம்.

  பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கலாம். ஒவ்வொரு பள்ளித்தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளாக கருதி மேற்கொள்ள வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் தன்னார்வர்கள் பெற்றோரிடம் நேரடியாக உரையாடுவதோடு, குழந்தை களின் பெற்றோர்களை வரவழைத்து புகைப்ப டங்கள் காணொளிகளை திரை யிட்டு நலத்திட்டங்களை எடுத்துக் கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் (நாகர்கோவில்), ராமச்சந்தி ரன் நாயர் (குழித்துறை), பெருமாள் (தக்கலை), ராமசுப்பு (திருவட்டார்), ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×