search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரசை வாரத்தில் 6 நாள் இயக்க வேண்டும்
    X

    நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரசை வாரத்தில் 6 நாள் இயக்க வேண்டும்

    • நாகர்கோவில் மங்களூர் எக்ஸ்பிரசை இரவு ரெயிலாக மாற்றி இயக்க வேண்டும்.
    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    மதுரை வழியாக வாரம் 3 நாள் இயக்கப்படும் நாகர்கோவில்-தாம்பரம் இரவு நேர எக்ஸ்பிரசை வாரம் 6 நாள் இயக்க வேண்டும். மேலும் இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல் லும் வகையில் மாற்ற வேண்டும்.

    மேலும், ஐதராபாத்- தாம்பரம் சார்மினார் எக்ஸ் பிரசை திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இந்த ரெயில் தென்மத்திய ரெயில்வேயால் பரிந்துரைக் கப்பட்ட ரெயிலாகும். இதை கன்னியாகுமரி வரை நீட் டிக்க தென்மத்திய ரெயில்வே தயாராக உள்ளது. ஆனால் சென்னையை தலைமையிட மாக கொண்டு செயல்படும் தெற்கு ரெயில்வே மண்டலம் இதற்கு முட்டுக்கட்ைடயாக உள்ளது. எனவே ரெயில்வே அமைச்சர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில் மங்களூர் எக்ஸ்பிரசை இரவு ரெயிலாக மாற்றி ஏசி தூங் கும் பெட்டிகளுடன் கொச்சு வேளி-மங்களூர் சந்திப்பு அந்தியோதையா ரெயில் இயங்கும் நேரத்தில் இயக்க வேண்டும். மேலும் இந்த ரெயில் இரணியல், குழித்துறை, பாறசாைல, நெய்யாற்றின்கரை ஆகிய இடங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும்.

    திருவனந்தபுரம்-திருநெல்வேலி இடையே நாகர்கோவில் வழியாக குறைந்தது 2 மெமு ரெயில்கள் இயக்க வேண்டும். அவை கூட்டம் அதிகமாக இருக்கும் காலை மற்றும் மாலை நேரத்தில் இயக்க வேண்டும்.நாகர்கோவில்-திருநெல்வேலி இடையே 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப் படுகின்றன.

    ஆனால் திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல் வேலி தடத்தில் ஒரு மெமு ரெயில் கூட இயக்கப்படவில்லை. எனவே மத்திய அமைச்சர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. அந்த மனுவில் கூறி உள்ளார்.

    Next Story
    ×