search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே மருந்து விற்பனையாளரை மிரட்டி பணம் பறிப்பு
    X

    தக்கலை அருகே மருந்து விற்பனையாளரை மிரட்டி பணம் பறிப்பு

    • பேக், செல்போன் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார்
    • தக்கலை அருகே வழிப்பறி கொள்ளை நடந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சம்

    கன்னியாகுமரி :

    பத்மநாபபுரம் முடக்கு ளம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45). இவர் ஆயுர்வேத மருந்து விற்பனையாளராக பணிசெய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட் டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் எங்கு செல்கிறீர் எனக்கேட்டுள்ளார். உடனே ராதாகிருஷ்ணன் பத்மநாபபுரம் செல்கிறேன் என கூறியதும் நான் அவ் வழியாகத்தான் செல்கிறேன் என கூறி மோட்டார் சைக்கிளில் மருந்து விற்பனையாளரை உட்கார வைத்து மோட்டார் சைக்கிளை ஒட்டி சென்றார்.

    பத்மநாபபுரம் பஸ் நிறுத்தம் வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இறக்கி விடும்படி கேட்டுள்ளார். ஆனால் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அந்த மர்ம நபர் சாரோடு பக்கமுள்ள இருட்டான பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். உடனே மருந்து வியாபாரி கீழே இறங்கி நடக்க துவங்கியதும் அவரை பிடித்து நிறுத்திய மர்ம நபர் இடுப்பிலிருந்த கத்தியை காட்டி மிரட்டி பேக், செல்போன் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார்.

    செல்போன், துணிவகை கள், ரொக்கப்பணம், சார்ஜர் ஆகியவற்றை பறிகொடுத்த ராதாகிருஷ்ணன் தக்கலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். தக்கலை அருகே வழிப்பறி கொள்ளை நடந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சம் மற்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    Next Story
    ×