என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தோவாளை யூனியனில் ரூ.4 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் - கலெக்டர் அரவிந்த் ஆய்வு
- தோவாளை ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி த்திட்டப்ப ணி களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார்
- 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1.99 லட்சம் மதிப்பில் மண்புழு உரம் கொட்டகை அமைக்கப்பட்டிருந்ததைத்தொடர்ந்து, பணியினை விரைந்து ஆரம்பிக்க உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், தோவாளை ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சி த்திட்டப்ப ணி களை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூ ராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தடிக்காரன்கோணம் ஊராட்சி பகுதியில் மாநில உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பில் கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை மற்றும் கீரிப்பாறை தொழி லாளர் காலனிக்கு செல்வதற்கு புதிதாக 2 பாலங்கள் அமைக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1.99 லட்சம் மதிப்பில் மண்புழு உரம் கொட்டகை அமைக்கப்பட்டிருந்ததைத்தொடர்ந்து, பணியினை விரைந்து ஆரம்பிக்க உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தொடர்ந்து அருமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி,மேல்நிலைப்பள்ளியில் கழிவறை மற்றும் வேதியி யல் ஆய்வுக்கூடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்திலுள்ள சமையலறை ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு வழங்க ப்படும் உணவின் தரம் குறித்து தலைமையா சிரியர்களிடம் விவரம் கேட்கப்பட்டது.
மாணவ, மாணவிகள் சாப்பிடும் முன் பொறுப்பு ஆசிரியர் பரிசோதனை மேற்கொள்வ தோடு, ஒவ்வொரு நாளும் மாதிரி உணவினை சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும், ரூ.1.92 லட்சம் மதிப்பில் வீரவநல்லூரில் கிடை மட்ட உறிஞ்சுக்குழி அமைக்கும் பணி முடிக்கப்பட்டிருந்ததை நேரில் ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.
இறச்சக்குளம் ஊராட்சி பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.15.27 லட்சம் மதிப்பில் இறச்சக்குளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிட பணியினை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தோடு பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, ரூ.4.29 லட்சம் மதிப்பில் இறச்சகுளம் பிளசன்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் நடைப்பாதையினையும் ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது.
தொடர்ந்து, ஈசாந்தி மங்கலம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிட பணி என யூனியனுக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.4.38 கோடி மதிப்பில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென துறைசார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்ப ட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்