search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி காருடன் பறிமுதல் - டிரைவர் தப்பி ஓட்டம்
    X

    கன்னியாகுமரி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி காருடன் பறிமுதல் - டிரைவர் தப்பி ஓட்டம்

    • சொகுசு கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது
    • காரில் 900 கிலோ ரேசன்அரிசி இருந்தது. அதனை கேரளாவுக்கு கடத்திச் செல்வது விசாரணையில் தெரியவந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சொர்ண ராணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, ஏட்டு மாசானமுத்து மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு கன்னியாகுமரி கோவளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து சந்தேகம்அடைந்த போலீசார் காரை தடுத்து நிறுத்தினர். ஆனால் காரை நிறுத்திய டிரைவர் அங்கி ருந்து தப்பி ஒடி விட்டார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் காருக்குள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது காருக்குள் ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

    அந்த காரில் 900 கிலோ ரேசன்அரிசி இருந்தது. அதனை கேரளாவுக்கு கடத்திச் செல்வது விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சொகுசு காரையும் அதிலி ருந்து 900 கிலோ ரேசன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ரேசன் அரிசியை சொகுசு காருடன் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×