search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன் சாப்பிட்ட 4 பேருக்கு மயக்கம் - ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி உணவகம் மீது நடவடிக்கை - மேயர் மகேஷ் தகவல்
    X

    மீன் சாப்பிட்ட 4 பேருக்கு மயக்கம் - ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி உணவகம் மீது நடவடிக்கை - மேயர் மகேஷ் தகவல்

    • மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகத்தில் மீன் சாப்பாடு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது
    • பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல முறையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில்:

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கீழப்பெருவிளையை சேர்ந்த பணி அடிமை, சுஜில் வாத்தியார்விளையை சேர்ந்த அஜித், வடசேரியை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் உணவு சாப்பிட்டனர். சாப்பிட்டு சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 4 பேரையும் நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்தார்.

    பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து டாக்டரிடம் கேட்டு அறிந்தார். பின்னர் மேயர் கூறியதாவது:-

    மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகத்தில் மீன் சாப்பாடு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் ஆய்வு செய்ததாக கூறினார்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முறையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின் போது மருத்துவக் கல்லூரி முதல் வர் திருவாசக மணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் விஜயலட்சுமி, துணை உறைவிட மருத்துவர் ரெனிமோள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×