search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியாக பிரிக்கப்பட்டு 57 வருடங்கள் ஆகிறது:  வளர்ச்சிப்பாதையை நோக்கி பயணிக்கும் தருமபுரி மாவட்டம்
    X

    தனியாக பிரிக்கப்பட்டு 57 வருடங்கள் ஆகிறது: வளர்ச்சிப்பாதையை நோக்கி பயணிக்கும் தருமபுரி மாவட்டம்

    • தருமபுரி மாவட்டமாக உருவாகி 57 ஆண்டுகள் ஆகிறது.
    • “தகடூர்” என்பதே மருவி பின்னாளில் “தருமபுரி” ஆனது.

    தருமபுரி,

    தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் எல்லாமே சேலம் மாவட்டத்திற்குள் இருந்தன. சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்தியாவிலேயே பெரிய மாவட்டமாக இருந்த சேலம் மாவட்டத்தை தென் சேலம், வட சேலம் என இரு மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என அரசை வற்புறுத்தினர்.

    சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டால் தலைநகரம் தருமபுரியா? கிருஷ்ணகிரியா? ஓசூரா? என்ற சர்ச்சை எழுந்தது.

    1962-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் சுயேட்சியாக நின்று வெற்றி பெற்றவர் வீரப்ப செட்டியார். சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படும் புதிய மாவட்டத்திற்கு தருமபுரியே தலைநகராக இருக்க வேண்டும் என்று பாடுபட்டவர். ஆனால் தனது பதவி காலத்திலேயே இறந்து விட்டதால் 1965-ல் தருமபுரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.

    இடைத்தேர்தலில் வடிவேலு கவுண்டர் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் புதிதாக உருவாகும் மாவட்டத்திற்கு தருமபுரி மாவட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் ,மாவட்டத்தின் தலைநகராக தருமபுரி இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.

    அப்போது முதல்வராக இருந்த பக்தவச்சலம் தருமபுரியை தனி மாவட்டமாக 2.10.1965 -ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து பிரித்து அறிவித்தார். இன்றுடன் தருமபுரி மாவட்டமாக உருவாகி 57 ஆண்டுகள் ஆகிறது.

    தருமபுரிக்கு தகடூர் என்று ஒரு பெயரும் உண்டு.தகடு என்பது தாமரை மலரின் வெளி இதழையும், பொதுவாக பூவின் வெளி இதழையும் குறிக்கும். தாமரை வடிவில் இந்த ஊர் அமைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது என்று கூறுகின்றனர்.

    சுற்றிலும், பெரும்பாலும் மலைகளாயிருக்க நடுவில் அமைந்த சமவெளியில் "தகடூர்" அமைந்திருக்கிறது.ரே "தகடூர்" என்பதே மருவி பின்னாளில் "தருமபுரி" ஆனது.

    பலரும் இந்த நகரின் பெயரை தர்மபுரி என்று எழுதுகின்றனர். தர்மபுரி என்பது சரியான பொருளை தராது. தருமபுரி என்பதே சரியானது என்று மூத்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

    தற்போதுள்ள தருமபுரி மாவட்டத்தின் வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களும், தெற்கில் சேலம் மாவட்டமும், மேற்கில் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

    2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாவட்டத்தில் 15,06,843 மக்கள் உள்ளனர்.இவர்களில் 51% பேர் ஆண்கள், 49% பேர் பெண்கள். மாவட்ட சராசரி கல்வியறிவு 61%. ஆண்களின் கல்வியறிவு சதவிகிதம் 68, பெண்களின் கல்வியறிவு சதவிகிதம் 53.

    தருமபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் 09.02.2004 அன்று பிரிக்கப்பட்டது.

    கன்னட நாட்டில் பிறக்கும் காவிரி ஆறு தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தின் வழியாக சேலம், திருச்சி தஞ்சை மாவட்டங்களை செழிப்படைய செய்து பின்னர் வங்கக்கடலில் கலக்கிறது.

    இதேபோல தென்பெண்ணை ஆறும் கன்னட நாட்டில் பிறந்து கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பன அள்ளி- கவேரிப்பட்டினம்- இருமத்தூர் வழியாக திருவண்ணாமலை மாவட்டங்களை செழிப்படைய செய்து பின்னர் கடலில் கலக்கிறது.

    இவ்வாறு தமிழகத்தின் பெரும்பகுதியை செழிப்படைய செய்வது தருமபுரி – கிருஷ்ணகிரி மாவட்டங்கள்தான் என்றால் மறுக்கமுடியாது. ஆனால் தமிழ்நாட்டையே செழிக்க வைக்கும் இந்த மாவட்டம் தற்போது தான் மெதுமெதுவாக வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. விரைவில் முழு வளர்ச்சியை எட்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×