search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வியை கற்பிப்பதில்  ஆசிரியர்கள் சிற்பிகள் போல செயல்பட வேண்டும்-  ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பேச்சு
    X

    விழாவில் பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி உள்பட பலர் உள்ளனர்.

    கல்வியை கற்பிப்பதில் ஆசிரியர்கள் சிற்பிகள் போல செயல்பட வேண்டும்- ஜி.கே.மணி எம்.எல்.ஏ. பேச்சு

    • ஒன்றியக் குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • பின்தங்கிய தருமபுரி மாவட்டம் கல்வியில் முன்னேற வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அளவிலான கல்வி வளர்ச்சி நாள் விழா வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி. கே. மணி ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற விழாவிற்கு தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    இவ் விழாவில் முன்னிலை வகித்து பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசியதாவது:-

    நாட்டின் முதல் இந்திய குடிமகனாக பணியாற்றிய அப்துல் கலாம் அடிப்படையில் ஒரு ஆசிரியர், ஆசிரியராக இருந்த காரணத்தால் தான் ஒரு விஞ்ஞானியாகவும், நாட்டின் குடியரசுத் தலைவராகவும் வர முடிந்தது.

    கல்வி ஒன்றே அழியாச் செல்வம், அந்த கல்வியை கற்பிப்பதில் ஆசிரியர்கள் ஒரு சிற்பிகளாக மாணாக்கர்களுக்கு போதித்து மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

    பின்தங்கிய தருமபுரி மாவட்டம் கல்வியில் முன்னேற வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க வேண்டும். கண்டிப்பும், அரவணைப்பும் இருந்தால் தான் மாணவர்களை நல்வழிப்படுத்த முடியும்.

    தமிழகத்தில் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவிற்கு தலைமை தாங்கி பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை போதிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

    விழாவில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு சான்றிதழ் களையும், பரிசுகளையும் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி வழங்கி பாராட்டினார்.

    Next Story
    ×