search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில்   அனுமன் ஜெயந்தியையொட்டி சாமந்திப்பூ விலை உயர்வு
    X

     தருமபுரி பூ மார்க்கெட்டில் காலையிலிருந்து பூக்களை வாங்க வியாபாரிகளும், மக்களின் கூட்டமும் அலை மோதியது.

    தருமபுரியில் அனுமன் ஜெயந்தியையொட்டி சாமந்திப்பூ விலை உயர்வு

    • இரண்டு வாரங்களாக சாமந்திப்பூ தர விலையில் குறைந்து கிலோ 5 ரூபாய் முதல் ஏழு ரூபாய் வரை விலை போனது.
    • விவசாயிகள் இன்று தருமபுரி பூ மார்க்கெட்டிற்கு 10 டன்னுக்கும் மேற்பட்ட சாமந்தி பூக்களை கொண்டு வந்து குவித்தனர்.

    தருமபுரி மாவட்டத்தில் இந்த வருடம் பருவமழை இரு மடங்கு பெய்துள்ளதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் சாமந்திப்பூ அதிகபடியாக சாகுபடி செய்துள்ளனர்.

    தினசரி பூ மார்க்கெட்டிற்கு சாமந்தி பூக்கள் குவிய தொடங்கியதால் கடந்த இரண்டு வாரங்களாக சாமந்திப்பூ தர விலையில் குறைந்து கிலோ 5 ரூபாய் முதல் ஏழு ரூபாய் வரை விலை போனது. பூக்கள் பறிக்கும் கூலியே கிடைக்கவில்லை என பூக்களை விவசாயிகள் ரோடு ஓரங்களிலும் ஆறுகளிலும் கொட்டி வந்தனர்.

    இந்த நிலையில் திடீரென மார்கழி அமாவாசை அனுமன் ஜெயந்தியை ஒட்டி நேற்று முதல் பூக்களின் விலை திடீரென உயர்ந்து கிலோ 50 ரூபாய்க்கு விலை போனது.

    இதனால் விவசாயிகள் இன்று தருமபுரி பூ மார்க்கெட்டிற்கு 10 டன்னுக்கும் மேற்பட்ட சாமந்தி பூக்களை கொண்டு வந்து குவித்தனர்.

    தருமபுரி பூ மார்க்கெட்டில் காலையில் இருந்து வியாபாரிகளும், மக்களின் கூட்டமும் அலை மோதியது. விறுவிறுப்பான வியாபாரத்தால் இன்று கிலோ சாமந்திப்பூ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கொண்டு வந்த பூக்கள் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×