search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில்  305 பேர் நீட் தேர்வு எழுதவில்லை
    X

    தருமபுரி மாவட்டத்தில் 305 பேர் நீட் தேர்வு எழுதவில்லை

    • அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் 1416 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
    • 305 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    தருமபுரி,

    இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, 5 மணி வரை நடைபெற்றது.

    இதில் தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 8 மையங்களான கேந்திர வித்யாலயா பள்ளி, செந்தில் பப்ளிக் ஸ்கூல், விஜய் மில்லினியம் ஸ்கூல், விஜய் வித்யாஷ்ரம், டான் சிக்ஸாலயா, சசி ஞானோதயா, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கமலம் இன்டர்நேஷனல் ஸ்கூல், உள்ளிட்ட மையங்களில் 5328 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

    இதில் 5023 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். 305 பேர் தேர்வு எழுத வரவில்லை, அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் 1416 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    தருமபுரி மாவட்டத்தில் மாணவர்கள் 8 மையங்களுக்கும் காலை 10 மணி முதலே, நீட் தேர்வு எழுதுவதற்கு ஆயத்தமாக வந்திருந்தனர். தொடர்ந்து நுழைவாயிலில் தேர்வுக்கு வரும் மாணவ, மாணவிகளை 11.30 மணி முதல் நுழைவு சீட்டு மற்றும் அரசு விதித்துள்ள நுழைவு தேர்வு விதிகளை பின்பற்றி காவல் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள், பல கட்ட தீவிர பரிசோதனை செய்து, தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தனர்.

    முதன்முறையாக தருமபுரி மாவட்டத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

    Next Story
    ×