search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் 4 வழிச்சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்:  மாற்று பாதை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
    X

    அரூர் 4 வழிச்சாலை விரிவாக்க பணிகள் காரணமாக விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் மாறியுள்ள சாலை.

    அரூர் 4 வழிச்சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்: மாற்று பாதை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

    • 4 வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மாற்றுப்பாதையை சரியாக அமைக்காமல் வாகனங்கள் இயக்குவதால் விபத்துக்கள் நடைபெறுகின்றன.

    அரூர்,

    தருமபுரி முதல் திருவண்ணாமலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் தருமபுரி-அரூர் வழியாக மொரப்பூர் சாலை வரை இரு வழிப்பாதையிலிருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணியும், ரூ.96.50 கோடியில் அரூர் வழியாக தாணிப்பாடி-திருவண்ணாமலை சாலை வரை இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தருமபுரி- திருவண்ணா மலை சாலை 113 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது. தருமபுரி-அரூர் வழியாக தருமபுரி மாவட்ட எல்லை வரை 4-வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. தரை பாலம் அமைத்தல், தடுப்பு அமைத்தல், மண்கொட்டி சீர்படுத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.

    தருமபுரி-அரூர் சாலையில் 4வழிச்சாலை விரிவாக்கப்பணிகள் காரணமாக, வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை அமைக்கும் பணிகளால் குண்டும் குழியுமாகவும் பல்வேறு பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டும் முன்னறிவிப்பு பலகைகள் இல்லாததால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வண்டிகள் மண்களால் அமைக்கப்பட்ட வேக தடைகள் இருப்பது தெரியாமல் வேகத்தடை பகுதியில் திடீரென பிரேக் பிடிப்பதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    பிரதான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய்கள் நான்கு வழி சாலை பணியின் போது சேதப்படுத்தப்படுவதால் பொதுமக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக வேலைகள் விரைவாக நடைபெற்றாலும் மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் வேலை பணிகள் குறித்து ஆய்வுகள் செய்யாததால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் .

    நான்கு வழி சாலை விரிவாக்க பணி துரிதமாக நடைபெற்றாலும் மாற்றுப்பாதையை சரியாக அமைக்காமல் வாகனங்கள் இயக்குவதால் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுகின்றன விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் நெடுஞ்சாலைத்துறையினர் உரிய கவனம் செலுத்தி உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×