search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுலாதுறை வசம் ஒப்படைத்து  பயணிகள் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில்   ஒகேனக்கல் மேலும் பொலிவுபடுத்தப்படுமா?   -பொதுமக்கள் எதிர்பார்ப்பு
    X

    சுற்றுலாதுறை வசம் ஒப்படைத்து பயணிகள் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில் ஒகேனக்கல் மேலும் பொலிவுபடுத்தப்படுமா? -பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    • பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சுற்றுலா தளங்களுக்கு சென்று மகிழ்வது வழக்கம்.
    • சுற்றுலா ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

    ஒகேனக்கல்,

    பணத்தை தேடி மக்கள் தினமும் உழைத்துக்கொ ண்டிருக்கின்றனர். இவ்வாறு வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்தாலும் நிம்மதியாக ஒரு நாள் மனதுக்கு பிடித்த சுற்றுலா தளத்திற்கு குடும்பத்துடன் சென்று பொழுதை கழித்து நிம்மதி அடைவது தேவையானது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சுற்றுலா தளங்களுக்கு சென்று மகிழ்வது வழக்கம்.

    1970-ம் ஆண்டு செப்டம்பர் 27 -ம் தேதி உலக சுற்றுலா தினத்திற்கு ஐ.நா. அனுமதியளித்தது. அதன் பிறகு 1980 -ம் ஆண்டு முதல் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை உருவாக்கப்பட்டு ஒரு சில சுற்றுலா இடங்களை சுற்றுலா துறை இடம் ஒப்படைத்தது. தற்பொழுது

    சுற்றுலா துறைதான் மிகப்பெரிய தொழில்துறையாக உள்ளது.

    உணவகம். தங்கும் விடுதி, பொழுது போக்கு தளங்கள், போக்குவரத்து, வணிக விற்பனை என ஐந்தையும் உள்ளடக்கியது தான் சுற்றுலா தளம். தமிழகத்தில் ஊட்டி,கொடைக்கானல், சென்னை மெரீனா, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளது. அதே போல் நம்ம ஊரு நயகரா என அழைக்கப்படும் நீர்வீழ்ச்சி உள்ள பகுதி தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் அமைந்துள்ளது.

    ஒகேனக்கல் வழியாக செல்லும் காவிரி ஆறு குடகு மழையில் சிறு ஓடையாக தலைக்காவிரி உற்பத்தியாகி பிறகு கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பறந்து விரிந்து காவிரி ஆறாக ஓடுகிறது. காவிரி ஆறு ஒடும் இடங்களில் ஆங்காங்கே இயற்கை சூழலுக்கு ஏற்றவகையில் அழகிய தோற்றத்தோடு கண் கவரும் பகுதிகளை சுற்றுலாத்துறை தேர்வு செய்து,அங்கு சுற்றுலா தளம் அமைத்து அங்கு சுற்றுலா பயணிகள் பொழுதை கழிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். அது போன்று தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லில் கண்கொள்ளாக் காட்சியாக இயற்கை எழிலோடு அமைந்துள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகள் உள்ளன .

    கடந்த காலங்களில் இப்பகுதிகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜி , ஜெமினி , ஜெயலலிதா, உள்ளிட்ட முன்னோடி நடிகர்களும், ரஜினி,கமல்,விஜயகாந்த் போன்ற நடிகர்களை வைத்து படம் எடுத்துள்ளனர். தற்பொழுது வரை இங்கு தொடர்ந்து அவ்வப்போது படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் கர்நாடக மற்றும் தமிழகத்தை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளது. இங்கு யானை,மான் போன்ற ஏராளமான வன உயிரினங்கள் வாழ்கிறது. இவைகள் கோடை காலங்களில் தண்ணீர் தேடி சில சமயங்களில் சாலைகளை கடக்கும் போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பார்கள்.

    சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்துகொண்டு அருவியில் குளித்த பிறகு அங்கு சுட,சுட சமைக்கும் மீன் குழம்பு மற்றும் மீன் வருவலை சாப்பிட்டு செல்வார்கள். இங்கு சமைக்கும் மீன் குழம்பை ருசிக்கவே தமிழகம் மட்டும் அல்லாமல், கர்நாடகா ,கேரளா. ஆந்திரா மற்றும் வெளி நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    முதலைப் பண்ணை, வண்ண மீன் காட்சியகம், ஊட்டமலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் தோற்றம்,மற்றும் பரிசல் சவாரி, உள்ளிட்டவைகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தின் சிறப்புகளாகும், இதில் தமிழ்நாடு ஓட்டல் மற்றும் தொங்கு பாலம் ஆகியவை மட்டுமே சுற்றுலாதுறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பிற பகுதிகளையும் சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மேலும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் ஆக்கினால் ஒகேனக்கல் தமிழ்நாட்டின் நயாகரா என்பதை விட இந்தியாவின் நயாகரா என்ற அந்தஸ்தை பெறும் என்று சுற்றுலா ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×