என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாவூர்சத்திரத்தில் சிறுமி 5 மாத கர்ப்பம்- ஆசிரியரிடம் விசாரணை
  X

  பாவூர்சத்திரத்தில் சிறுமி 5 மாத கர்ப்பம்- ஆசிரியரிடம் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
  • தென்காசி ஆசிரியரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

  ஆலங்குளம்:

  தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று முன்தினம் திடீரென வாந்தி எடுத்துள்ளார்.

  உடனே அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

  இந்த சிறுமி பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2019-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து உள்ளார். அப்போது அங்கு பணியாற்றி வந்த தென்காசி பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவியை அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

  அதேநேரத்தில் மாணவியின் சொந்த ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் காரணமாக மாணவி தற்போது 5 மாதம் கர்ப்பம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக தென்காசி ஆசிரியரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான கூலி தொழிலாளியை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×