என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திண்டுக்கல்லில் ரெயிலில் கடத்தி வந்த வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
  X

  பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில் மற்றும் கைது செய்யப்பட்டவரை படத்தில் காணலாம்.

  திண்டுக்கல்லில் ரெயிலில் கடத்தி வந்த வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெங்களூரில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • 13 வெளி மாநில மதுபாட்டில்கள் ஒரு பையில் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

  திண்டுக்கல்:

  பெங்களூரில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வெங்க டேஷ், பன்னீர்செல்வம், கோகுல்பாண்டி, இளையராஜா, ராஜேஷ் ஆகியோர் அந்த ரெயிலில் சோதனை நடத்தினர்.

  அப்போது பொதுப்பெட்டியில் 13 வெளி மாநில மதுபாட்டில்கள் ஒரு பையில் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை கடத்தி வந்த நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமஸ் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

  மது பாட்டில்களை பறிமுதல் செய்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×