என் மலர்tooltip icon

    ஈரோடு

    உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கொடுமுடியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்கள்.
    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 79). விவசாயி. இவருடைய மனைவி அங்கத்தாள் (70). இவர்களுடைய மகள் தமிழ்செல்வி (53), மகன் சண்முகசுந்தரம் (49). தமிழ்செல்வியும், சண்முகசுந்தரம் திருமணம் ஆகி அவரவர் குடும்பத்துடன் குண்டடத்திலேயே வேறு பகுதியில் வசித்து வருகிறார்கள். அதனால் கந்தசாமியும், அங்கத்தாள் மட்டும் அவர்களுடைய வீட்டில் இருந்து வந்தனர். இருவருக்குமே உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்கள். முதுமை காரணமாக நோயும் குணமாகவில்லை. இதனால் இனி வாழ்வதைவிட சாவதே மேல் என்று இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்தனர். அங்குள்ள பிரசித்திபெற்ற மகுடேசுவரர் வீரநாராயணபெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்கள். பின்னர் காவிரிக்கரைக்கு சென்று, தாங்கள் வாங்கி வந்திருந்த விஷத்தை இருவரும் குடித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கிவிழுந்து விட்டார்கள். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து உடனே கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி (கொடுமுடி பொறுப்பு) போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

    இதற்கிடையே தந்தையும், தாயும் விஷம் குடித்துவிட்ட தகவல் அறிந்து ஈரோடு ஆஸ்பத்திரிக்கு வந்த சண்முகசுந்தரம் இருவரையும் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று காலை 7 மணி அளவில் அங்கத்தாள் இறந்தார். பகல் 12.20 மணிக்கு கந்தசாமியும் இறந்துவிட்டார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நோய் குணமாகாததால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவம் குண்டடம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்னும் சில தினங்களில் லேப்-டாப் வழங்கப்படும். இதேபோல் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ministersengottaiyan #schoolteachers #studentlaptops

    கோபி:

    கோபி அருகே உள்ள விளாங்காட்டு பாளையம், நாதிபாளையம், வெள்ளாங்கோவில், கொளப்பலூர் ஆகிய பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பூமிபூஜை யை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி செம்மையாக செயல்பட்டு வருகிறது.

    நேற்று முதல் பிளஸ்-2 தேர்வு தொடங்கி உள்ளது. மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து உள்ளனர். மாணவர்கள் பரீட்சையில் வெற்றி பெற வாழ்த்துகளை கூறி கொள்கிறேன்.

    பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் சி.ஏ. (பட்டய பயிற்சி)க்கு 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் அரசு சார்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

    வரும் திங்கட்கிழமை ஐ.சி. திட்டத்தில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 6 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும். 9.10.11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு இண்டர் நெட் வசதி செய்து தரப்பட உள்ளது. இதை முதல்- அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்னும் சில தினங்களில் லேப்-டாப் (மடிகணினி) வழங்கப்படும். இதே போல் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இவை வழங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.  #ministersengottaiyan #schoolteachers #studentlaptops

    பெருந்துறை அருகே இன்று காலை கார் டயர் வெடித்து லாரி மீது மோதியது. இதில் 6 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்கள்.

    பெருந்துறை:

    திருவண்ணாமலையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கோவைக்கு ஒரு காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

    கோவையில் இஸ்லாமிய பேரவை கூட்டம் இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்ள அவர்கள் வந்தனர். காரை காதர்கான் (வயது28) என்பவர் ஓட்டி வந்தார்.

    மேலும் காரில் பர்வேஸ்(48), ரிஜாயித் (35), சஜினா(28), சபானா(28), சபியா(2½) ஆகிய 6 பேர் வந்தனர்.

    இந்த கார் இன்று காலை 6.30 மணியளவில் பெருந்துறை காஞ்சி கோவில் பைபாஸ் ரோட்டில் வந்த போது திடீரென காரின் ஒரு டயர் வெடித்தது. இதில் அந்த கார் நிலை தடுமாறி ரோட்டோரம் நின்ற ஒரு லாரி மீது மோதியது.

    இதில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாட்டுக்குள் சிக்கி தவித்தவர்களை மீட்டனர். மேலும் சம்பவ இடத்துக்கு பெருந்துறை போலீசாரும், விரைந்து வந்தனர்.

    படுகாயத்துடன் துடித்த 6 பேரை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    சுப்ரீம் கோட்டில் தினகரன் மேல் முறையீடு செய்தாலும் இரட்டை இலை எங்களுக்கே என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். #ministerkaruppannan #dinakaran #admkleaf

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கப்பாளையத்தில் இன்று மின்ன வேட்டுவபாளையம்-சாலையூர் இடையே 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை போடும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. இதில் சுற்றுச்சூழல்த் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கி உள்ளது. பரீட்சை எழுதும் மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கு கிடத்து உள்ளது. ஒட்டு மொத்த அ.தி.மு.க.வினருக்கும் ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. ஆண்டவன் எங்க பக்கம் இருக்கார்.

    இதை எதிர்த்து அவர்கள் (தினகரன் அணியினர்) சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தாலும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான்.

    ஈரோட்டில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேம்பாலங்களை திறந்து வைத்தார். கோடி கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    இப்படி தமிழக முதல்- அமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று மக்கள் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

    இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார்.

    ஈரோடு மாவட்டத்தில் 216 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 13 ஆயிரத்து 36 மாணவிகள் ,11 ஆயிரத்து 736 மாணவர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 792 மாணவ-மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர். #PublicExam
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கின. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது.

    ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி தலைமையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 216 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 13 ஆயிரத்து 36 மாணவிகள் ,11 ஆயிரத்து 736 மாணவர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 792 மாணவ-மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதற்காக 91 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    தேர்வு மையங்களில் காற்றோட்டமான அறைகள் தடையின்றி மின்சாரம் வினியோகம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    தேர்வையொட்டி மாணவ- மாணவிகள் அருகில் உள்ள கோவில்கள் சென்று பயபக்தியுடன் வழிபட்டனர். மேலும் சில மாணவர்கள் தேர்வு எழுதும் முன் தனது ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர். பல மாணவ- மாணவிகள் பள்ளி வளாகத்தில் உட்கார்ந்து படித்த பாடத்தை மீண்டும் ஒரு முறை படித்துக் கொண்டிருந்தனர்.

    பிளஸ்-2 தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடிந்தது. முதல் 15 நிமிடம் அதாவது 10 மணிமுதல் 10. 15 வரை மாணவ மாணவிகள் கேள்வித்தாளை வாசிக்கும் நேரமாக ஒதுக்கப்பட்டு இருந்தது பின்னர் 10.15 மணி அளவுக்கு ஒரு மணி அடித்தது. அதன்பின்னர் மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர்.

    ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பிளஸ்-2 பொது தேர்வை மாவட்ட கலெக்டர் கதிரவன் பார்வையிட்டார்.

    இன்று தொடங்கும் பிளஸ்-2 பொதுத் தேர்வு வரும் மாதம் 19ம் தேதி நிறைவடைகிறது. தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை மாணவ மாணவிகள் முதல் முறையாக 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. #PublicExam
    ஈரோடு பழைபாளையத்தில் இன்று அதிகாலை தனியார் கம்பெனி மேலாளரை அரிவாளால் மிரட்டி 35 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.
    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பழைய பாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 52). தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிகிறார்.

    இவரது மனைவி பெயர் வள்ளியம்மை. இவர்களுக்கு கவுதம் (22), ஸ்ரீராம் (16) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகன் கவுதம் ஓசூரில் வேலை பார்க்கிறார். இளையமகன் ஸ்ரீராம் திண்டலில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறாள்.

    நேற்று இரவு வழக்கம் போல் இவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். கீழ்வீடு வாடைக்கு விடப்பட்டுள்ளது. மேல் வீட்டில் ராமநாதன் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் 4பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. இவர்கள் 4 பேருக்கும் 25 வயதில் இருந்து 30 வயதுக்குள் இருக்கும்.

    2பேர் கீழே நின்று கொண்டனர். மற்ற 2 பேர் மாடிக்கு சென்றனர். ஒருவன் கதவை உடைத்தான். 2 பேர் கைகளிலும் அரிவாள் இருந்தது.

    கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டதும் வீட்டில் தூங்கிகொண்டிருந்த ராமநாதன் மணியம்மை, ஸ்ரீராம் 3 பேரும் முழித்தனர். ஒருவன் மணியம்மை கழுத்தில் அரிவாளை வைத்தான். இன்னொருவன் மாணவன் ஸ்ரீராம் கழுத்தின் அரிவாளை வைத்தான்.

    பிறகு கொள்ளையர்கள் “நகை பணம் இருக்கும் இடத்தை சொல்லி விடுங்கள். இல்லையென்றால் அரிவாளால் வெட்டி கொன்று விடுவோம்” என்று மிரட்டினர்.

    இதில் பயந்துபோன அவர்கள் நகை இருக்கும் இடத்தை கூறினர். பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்து 35 பவுன் நகை ஒரு வைரநகை, வெள்ளி பொருட்கள், 6 செல்போன்கள் ஒரு டி.வி. ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.

    வீட்டில் இருந்த 2 கண்காணிப்பு கேமிராவையும் உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறாரகள். 
    சென்னிமலை அருகே பட்டதாரி பெண்னை வாலிபர் கடத்தியதாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே தொட்டம்பட்டி சேர்ந்தவர் ராஜா என்கிற கருப்பண்ணசாமி (வயது 48). கூலித் தொழிலாளி.

    இவரது மகள் அபிராமி (21) பி.எஸ்.சி. பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் சென்னிமலை அருகே உள்ள அத்திக்காடு என்ற இடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த 23-ந் தேதி காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அபிராமியின் தந்தை ராசு என்கிற கருப்பண்ணசாமி சென்னிமலை போலீசில் புகார் கொடுத்தார்.

    அந்த புகாரில் சென்னிமலை அருகே அம்மாபாளையத்தை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் நடராஜ் என்கிற மணிகண்டன் என்பவர் ஆசைவார்த்தை கூறி மகள் அபிராமியை கடத்தி சென்று விட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    ஈரோடு மதுக்கடை முன் ரத்த காயத்துடன் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே உள்ள பிரகாசம் வீதியில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.

    இந்த மதுக்கடை முன் இன்று காலை ஒருவர் மயங்கி கிடப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு போலீசார் விரைந்தனர். அங்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் குப்புற விழுந்து கிடந்ததால் முகத்தில் ரத்த காயம் இருந்தது. இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று உடனடியாக தெரியவில்லை.

    அவர் குடித்து விட்டு வரும் போது தவறி விழுந்து அடிப்பட்டு இறந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர்.

    எனினும் அவர் இறந்தது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து அருகே உள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு காமிராவில் ஏதும் தடயம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் புளு கலர் கட்டம் போட்ட சட்டையும், புளு கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். மதுக்கடை முன் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே இன்று காலை அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணியிலிருந்து சத்தியமங்கலத்துக்கு இன்று காலை அரசு டவுன்பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் பயணிகள், மாணவர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.

    இந்த பஸ் இன்று காலை 9.15 மணியளவில் ஆப்பக்கூடல் அருகே கருப்பகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள ஒருவளைவில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே ஒரு மொபட்வந்தது. அதே சமயம் ஒரு நாய் குறுக்கே செல்ல மொபட்டில் சென்றவர் மொபட்டை திருப்பி ஓட்டினார்.

    இதைகண்ட பஸ் டிரைவர் மொபட் மீது மோதாமல் இருக்க திருப்பி வளைத்து ஓட்டினார். இதில் மண்பாதையில் சறுக்கிய பஸ் ரோட்டோரபள்ளத்தில் கவிழ்ந்தது.

    பஸ் கவிழ்ந்ததும் உள்ளே இருந்த பள்ளி மாணவ- மாணவிகள் பயணிகள் கூக்குரலிட்டனர். இந்த விபத்தில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. இதில் 15 மாணவர்கள் மற்றும் ஒரு பெண் பயணியும் லேசான காயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடி சென்று இடிபாட்டுக்குள் சிக்கிய மணவர்கள்மற்றும் பயணிகளை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேர்தலுக்கு பின் தே.மு.தி.க. காணமல் போகும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார். #Congress #EVKSElangovan #DMDK
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் புதுமை காலனியில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கட்சி கொடியேற்று விழா மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி. ரவி தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்ராஜப்பா மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக் திருச்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திமுக தான் பலமான கூட்டணி. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு கட்சிகள் விரைவில் இந்த அணியில் இணைகிறது.

    புதுச்சேரி உள்பட 40தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

    பிரதமர் மோடி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பொய் பேசுவதில் மோடி பெரிய புழுகன் என்றால், ராமதாஸ் ஜூனியர் மோடியாக உள்ளார்.

    மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதே போல் ராமதாசும் கொடுத்த பல வக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.



    பா.ம.க, பதவிக்கு வரும் போது தனது குடும்பத்தினர் கட்சிக்குள் வரமாட்டார்கள் என்று கூறினார். ஆனால் தன் மகனை மத்திய அமைச்சராக்கினார். அதிமுக ஊழல் கட்சி அதில் சேர மாட்டேன் என்று கூறினார்.

    ஆனால், தேர்தலுக்காக அரசியல் வியாபாரியாகவும், தரகராகவும், மாறிவிட்டார்கள்.

    அதிமுக, பாமக கூட்டணியை அவர்களின் கடசித் தொண்டர்களே ஏற்கவில்லை. கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    அதிமுக தனித்து நின்றால் கூட 40 தொகுதிகளில் டெபாசிட் பெறலாம். ஆனால் பாமக., கூட்டணியால் அதுவும் கிடைக்காது.

    தே.மு.தி.க.வுடன், பேச்சுவார்த்தை கடைசி வரை இழுபறியாக இருக்கும். தேர்தலுக்கு பின் தேமுதிக காணமல் போகும். புதிய தமிழகம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தெரியாது. அதை ஒரு கட்சியாகவே நான் மதிப்பது இல்லை.

    திமுக- காங்., தொகுதி ஒதுக்கீடு பேசி முடிவெடுக்கப்படும். அதற்கான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #EVKSElangovan #DMDK
    “உனக்கு துரோகம் செய்து விட்டேன் மன்னித்து விடு” என காதலிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Love #YouthSuicide
    ஈரோடு:

    ஈரோடு அருகே காலிங்கராயன் வாய்க்கால் மேம்பாலத்திற்கு அருகே செல்லும் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் அங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த வாலிபர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது தற்கொலை செய்துகொண்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை பிரேத பரிசோதனைக்காக அந்த வாலிபரின் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.



    தற்கொலை செய்துகொண்ட வாலிபர் நீலம் மற்றும் கருப்பு கலர் கோடு போட்ட முழுக்கைச் சட்டையும் வெள்ளை கலர் பேண்ட் அணிந்து இருந்தார் அவரது பேண்ட் பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது அதில் தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அந்தப் பெண்ணுக்குத் துரோகம் செய்ததாக மன்னிப்பு கேட்பதாகவும் அடுத்த ஜென்மத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தையாக பிறப்பேன் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதி இருந்தார். அம்மா என்னை மன்னித்துவிடு என்றும் எழுதி இருந்தார்.

    இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Love #YouthSuicide
    சத்தியமங்கலம் வனப்பகுதியில் 2-வது நாளாக தீ எரிந்துக் கொண்டிருக்கிறது. அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் மலை உச்சிக்கு போக முடியாமல் திணறினர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அருகே இக்கலூர் வனம் உள்ளது.

    இந்த பகுதி மலை உச்சியில் உள்ளது. அடர்ந்த மரங்களால் நிறைந்த இந்த பகுதியில் ஏராளமான வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.

    தற்போது கோடை வெயில் தொடங்கியதையொட்டியும் மழை பொழிவு இல்லாததாலும் வனப்பகுதி காயத்தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் இக்கலூர் காட்டில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் தீ மரங்களில் பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. மலை உச்சியில் ஏற்பட்ட இந்த தீயை அணைக்க வனத்துறையினரால் முடியவில்லை.

    இன்று (திங்கட்கிழமை) ஆசனூர் இக்கலூர் வனப்பகுதியில் 2-வது நாளாக தீ எரிந்துக் கொண்டிருக்கிறது. அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் மலை உச்சிக்கு போக முடியாமல் திணறினர்.

    மலை உச்சியில் தீ பிடித்து எரிவதால் மேலே செல்லவும் வழியில்லை.

    இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும்போது, “வனப்பகுதியில் பிடிக்கும் தீயை தண்ணீர் ஊற்றியும் செடி, கொடி தழைகளை வெட்டி போட்டும் அணைப்போம். ஆனால் இக்கலூர் பகுதி மலை உச்சியில் இருப்பதால் எப்படி அங்கு போய் தீயை அணைப்பது? என்று தெரியவில்லை” என்று கூறினர்.

    போக முடியாத பகுதியில் தீ பிடித்தால் அந்த காட்டுத்தீ தானாகவே அணைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

    இக்கலூர் பகுதியில் பிடித்த காட்டுத்தீயால் பல பறவைகள், குரங்குகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் பலியாகி விட்டன. மேலும் பல வனவிலங்குகள் இடம் பெயர்ந்து இருப்பதாகவும் வன ஊழியர்கள் கூறினர்.

    இதேபோல தாளவாடி வனப்பகுதி ஜீரேகள்ளி வனத்திலும் நேற்று இரவு தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.

    இந்த பகுதிக்கு வனஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    ×