search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "35 pound jewelry robbery"

    மதுரையில் கோவில் அர்ச்சகர் வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை கே.கே.நகர் லோகாஸ் காலனியைச் சேர்ந்தவர் முரளிக்கண்ணன் (வயது 39). இவர் அங்குள்ள கற்பக விநாயகர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார்.

    கடந்த 9-ந் தேதி முரளிக்கண்ணன் குடும்பத்துடன் சென்னை சென்றுவிட்டார். இதனால் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று காலை அவர்கள் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்துள்ளது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது. இதனைக் கண்டு முரளிக்கண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரிய வரவே, அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வீட்டின் பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் முரளிக்கண்ணன் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு பழைபாளையத்தில் இன்று அதிகாலை தனியார் கம்பெனி மேலாளரை அரிவாளால் மிரட்டி 35 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.
    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பழைய பாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 52). தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிகிறார்.

    இவரது மனைவி பெயர் வள்ளியம்மை. இவர்களுக்கு கவுதம் (22), ஸ்ரீராம் (16) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகன் கவுதம் ஓசூரில் வேலை பார்க்கிறார். இளையமகன் ஸ்ரீராம் திண்டலில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறாள்.

    நேற்று இரவு வழக்கம் போல் இவர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். கீழ்வீடு வாடைக்கு விடப்பட்டுள்ளது. மேல் வீட்டில் ராமநாதன் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் 4பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. இவர்கள் 4 பேருக்கும் 25 வயதில் இருந்து 30 வயதுக்குள் இருக்கும்.

    2பேர் கீழே நின்று கொண்டனர். மற்ற 2 பேர் மாடிக்கு சென்றனர். ஒருவன் கதவை உடைத்தான். 2 பேர் கைகளிலும் அரிவாள் இருந்தது.

    கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டதும் வீட்டில் தூங்கிகொண்டிருந்த ராமநாதன் மணியம்மை, ஸ்ரீராம் 3 பேரும் முழித்தனர். ஒருவன் மணியம்மை கழுத்தில் அரிவாளை வைத்தான். இன்னொருவன் மாணவன் ஸ்ரீராம் கழுத்தின் அரிவாளை வைத்தான்.

    பிறகு கொள்ளையர்கள் “நகை பணம் இருக்கும் இடத்தை சொல்லி விடுங்கள். இல்லையென்றால் அரிவாளால் வெட்டி கொன்று விடுவோம்” என்று மிரட்டினர்.

    இதில் பயந்துபோன அவர்கள் நகை இருக்கும் இடத்தை கூறினர். பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்து 35 பவுன் நகை ஒரு வைரநகை, வெள்ளி பொருட்கள், 6 செல்போன்கள் ஒரு டி.வி. ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.

    வீட்டில் இருந்த 2 கண்காணிப்பு கேமிராவையும் உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறாரகள். 
    ×