என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரும்பாறை அருகே வீடு, பயிர்களை சேதப்படுத்திய யானை
Byமாலை மலர்11 Jun 2022 12:36 PM IST
- பெரும்பாறை பகுதியில் யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன.
- இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த யானை வீடு மற்றும் பயிர்களை சேதப்படுத்தியது.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் சோலைக்காடு, நேர்மலை, கடைசி கூட்டுக்காடு, கொக்குப்பாறை உள்ளிட்ட பகுதியில் கடந்த சிலநாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. நேற்று அப்பகுதியில் உள்ள காபி தோட்டங்களில் காட்டு யானைகள் திடீரென புகுந்தன.மேலும் தோட்டத்தின் முள்வேலியை உடைத்து சேதப்படுத்தின.
இது மட்டுமின்றி தோட்டங்களில் பயிரிட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு, பாக்கு மரம் வீடு போன்றவற்றை நாசப்படுத்தின. இதனால் காபி தோட்ட உரிமையாளர்கள், தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கூலி தொழிலாளிகள் வேலைக்கு வர மறுக்கின்றனர். எனவே அந்த காட்டு யானைகளை விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×