search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் பிரதமரின் 15 அம்ச திட்ட பணிகள் குறித்து ஆலோசனை
    X

    பிரதமரின் 15 அம்ச திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

    திண்டுக்கல்லில் பிரதமரின் 15 அம்ச திட்ட பணிகள் குறித்து ஆலோசனை

    • பிரதமரின் 15 அம்ச திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பாரத பிரதமரின் 15 அம்ச திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் விசாகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    சிறுபான்மையினர் மக்களின் கல்வி வாய்ப்பினை அதிகரிக்கவும், பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புகளின் சம பங்கினை உறுதி செய்யவும், சிறுபான்மையினர் வாழ்வு நிலையை மேம்படுத்திடவும், இன கலவரம் மற்றும் வன்முறைகளை தடுத்தல், கட்டுப்படுத்துதல் போன்ற சீறிய குறிக்கோளுக்காக பாரத பிரதமரால் புதிய 15 அம்ச திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    15 அம்ச திட்டத்தில் காலாண்டிற்கு ஒருமுறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், மாவட்ட சமூக நலத்துறை, முதன்மை கல்வி அலுவலகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளில் சிறுபான்மையினத்திற்கென செயல்படும் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்படும்.

    இவற்றில் இத்துறைகளில் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் நலன்காக்க சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் குழந்தைகள் நல திட்ட அலுவலகம் மூலம் செயல்படும் அங்கன்வாடி பள்ளிகள் சீரிய முறையில் செயல்படுத்துதல், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    மேலும் பள்ளிக்கல்வியை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்தல், சிறுபான்மையினர் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், கிராமபுறத்தில் வசிக்கும் ஏழை சிறுபான்மையின மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், வறுமைக்கோட்டிற்குகீழ் வசிக்கும் சிறுபான்மையின மக்கள் நலனிற்கான நிதியுதவி அளித்தல், நகர்புற சிறுபான்மையின மக்களுக்கு பிரதம மந்திரி ஆவாஸ்யோஜனா திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்குதல், சிறுபான்மையின மக்களுக்கு பயனாளிகளின் பங்களிப்பு தொகையுடன் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் மூலமாக வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் போன்றவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    Next Story
    ×