என் மலர்tooltip icon

    சென்னை

    • செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    • நாளை மறுநாள் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    * தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    * நாளை மறுநாள் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. 

    • புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
    • புலிகாட், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில் கனமழை பெய்யும்.

    வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னமானது நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி மாலை அல்லது இரவில் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    மேலும் முதலில் மணிக்கு 10 கி.மீ.வேகத்தில் நகர்ந்து வந்த புயல் சின்னத்தின் வேகம் தற்போது குறைந்து மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் கரை நோக்கி நகர்கிறது.

    இதனிடையே மோன்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னையில் மழைக்கான அறிகுறி இல்லாத நிலையில், திருவள்ளூரில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    சில மணி நேரமாக திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, புலிகாட், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், சென்னையில் நிச்சயமாக மழை பெய்யும். ஆனால் சென்னை நகரம் குறைந்தபட்சம் 100 மிமீ கனமழையைப் பெறுமா என்பது தான் கேள்வி. அந்த கேள்விக்கான விடைக்காக நாம் இன்று மாலை அல்லது இரவு வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • குழந்தையை மீட்டு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
    • தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டை ஜோகி தோட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீராம் - சந்தான லட்சுமி. இவர்களுக்கு 1½ வயதில் தனுஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

    பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான அலமேலுவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்க்க சந்தான லட்சுமி குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது குழந்தை தனுஷ் அலமேலு வீட்டில் குளியல் அறையில் இருந்த 1½ அடி தண்ணீர் வாளியில் தவறி விழுந்துள்ளது.

    இதனால் பதறிப் போன சந்தான லட்சுமி குழந்தையை மீட்டு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது. இது பற்றி தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்ய டெல்லி தலைமை முடிவு செய்து உள்ளது.
    • இந்த குழுவினர் விரைவில் தமிழகம் வந்து மாநில தலைமையுடன் ஆலோசனை செய்ய உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சந்திக்கிறது.

    இந்த கூட்டணியை வலுப்படுத்தவும், தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் பைஜயந்த்பாண்டாவை தேர்தல் பொறுப்பாளராக டெல்லி பா.ஜ.க. தலைமை நியமித்து உள்ளது. அவரும் 2 முறை தமிழகத்துக்கு வந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் கட்சிகளான அ.ம.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய கட்சிகளை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அந்த கட்சிகளின் தலைவர்களையும் நேரில் சந்தித்து பேசினார். ஆனால் எந்த கட்சியும் இதுவரை உறுதியான முடிவுகளை தெரிவிக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் இருப்பதால் மெதுவாக முடிவெடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

    இது ஒரு புறம் இருக்க தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்ய டெல்லி தலைமை முடிவு செய்து உள்ளது. இதற்காக மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி மற்றும் அனுராக் தாகூர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவுக்கு ஆலோசனை வழங்க தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியும் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவினர் விரைவில் தமிழகம் வந்து மாநில தலைமையுடன் ஆலோசனை செய்ய உள்ளனர்.

    தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அறிவித்து நிறைவேற்றாத வாக்குறுதிகள், ஊழல்கள், சட்டம், ஒழுங்கு நிலைமை, போதைபொருள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை ஆதாரங்களுடன் தயாரிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த தேர்தல் அறிக்கையை ஜனவரி மாதம் தை பொங்கலையொட்டி வெளியிடவும் திட்டமிட்டு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • நாளை மறுநாள் மாலை அல்லது இரவு மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
    • புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஆழ்ந்த காற்றழுத்தம் நாளை புயலாக வலுப்பெறும் என அறிவித்திருந்த நிலையில் இன்று மாலையே புயலாக வலுப்பெறும் என்றும் ஆழ்ந்த காற்றழுத்தம் புயலாக மாறி வடக்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் காலைக்குள் தீவிரப்புயலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் மாலை அல்லது இரவு மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள்?
    • தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்?

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன்.

    ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.

    திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை,

    ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது,

    ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உலுக்கிப் போனவர், தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித்குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா?

    ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது.

    தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள்?

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்?

    அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

    இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா?

    அது சரி, விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய உங்களுக்கு நேரம் இருக்காது தான்.

    விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை! என்று கூறியுள்ளார். 



    • தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிகமான மழை பதிவாகி உள்ளது.
    • சென்னையில் இயல்பை விட சுமார் 57 சதவீதம் அதிகமாக 28 செ.மீ.மழை பெய்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுவிழந்ததால் பெரும்பாலான பகுதுகளில் பெரிய அளவில் மழை கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று 8.கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னைக்கு கிழக்கே-தென் கிழக்கில் 790 கி.மீ. தூரத்திலும், விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கில் 850 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டிருந்தது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நகர்ந்து வருகிறது.

    இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் 27-ந்தேதி காலையில் ஒரு சூறாவளி புயலாக மாறும். இந்த 'மோன்தா' புயல் சென்னையில் இருந்து சற்று விலகி ஆந்திரா நோக்கி நகர தொடங்கும். அது வடமேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 28-ந் தேதி (செவ்வாய்) காலைக்குள் ஒரு கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடையும். அப்போது பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கும்.

    இந்த சூறாவளி புயல் வடக்கு-வட மேற்கு நோக்கி மேலும் நகர்ந்து செவ்வாய்க்கிழமை (28-ந்தேதி) இரவு காக்கி நாடாவை சுற்றி உள்ள மச்சிலப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திர மாநில கடற்கரையை கடக்கும்.

    அப்போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும். இந்த காற்று சில இடங்களில் 110 கி.மீ வேகத்தில் வீசும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    சூறாவளி புயல் ஆந்திராவில் கரையை கடப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. அதிலும் சூறாவளி புயல் மோன்தா சென்னை நோக்கி வராமல் சற்று விலகி ஆந்திரா நோக்கி செல்கிறது.

    இதனால் சென்னை சூறாவளி புயலில் இருந்தும், அதிகனமழையில் இருந்து தப்பியது என்றே சொல்லலாம். சூறாவளி புயல் ஆந்திராவை நோக்கி திரும்புவதால், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே அதிக மழை பெய்ய வாய்ப்பு ஏற்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் விட்டு விட்டு ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். இருந்தாலும் இந்த மாவட்டங்களுக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிகமான மழை பதிவாகி உள்ளது.

    சென்னையில் இயல்பை விட சுமார் 57 சதவீதம் அதிகமாக 28 செ.மீ.மழை பெய்துள்ளது. காஞ்சிபுரத்தில் 25 செ.மீ. இயல்பை விட 88 சதவீதம் அதிகமாக மழை கிடைத்துள்ளது.

    திருவள்ளூர் 30 செ.மீ. இது இயல்பை விட 113 சதவீதம் அதிகமாகவும், செங்கல்பட்டில் 20 செ.மீ. இது இயல்பைவிட 27 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.

    தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் அதாவது இயல்பைவிட 71 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
    • தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கு திசையில் 790 கி.மீ. தொலைவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் மோன்தா புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

    • ஆறு அறிவு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
    • திருமாவளவன் இசைத்தட்டை வெளியிட்ட இயக்குனர் பாக்கியராஜ் பெற்றுக்கொண்டார்.

    நேற்று சென்னையில் நடைபெற்ற ஆறு அறிவு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இந்த விழாவில் திருமாவளவன் இசைத்தட்டை வெளியிட்ட இயக்குனர் பாக்கியராஜ் பெற்றுக்கொண்டார்.

    இந்த விழாவில் பேசிய திருமாவளவன், "அடங்க மறு, அத்து மீறு என்றால் வன்முறை அல்ல. அடக்குமுறையை எதிர்த்து நிற்பது. இதை சரியாக புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்வது ஆதிக்க சாதி உணர்வு" என்று காட்டமாக தெரிவித்தார்.

    அடங்க மறு, அத்து மீறு என்று கூறி திருமாவளவன் வன்முறையை தூண்டுகிறார் என்று தொடர்ச்சியாக இணையத்தில் விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

    • பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.
    • முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவாகும் 'மோன்தா' புயலால் சென்னைக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.

    அவ்வாறு நடைபெறும் பணிகளை முதலமைச்சர், துணை முதலமைச்சர், அரசு அதிகாரிகள் என அனைவரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நேற்றுமுன்தினம் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    இந்த நிலையில், இன்று காலை மீண்டும் சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். 

    • தங்கம் விலை அதிகரிக்கும்போது, ஒருநேரத்தில் மிதமான நிலைக்கு வரும்.
    • தங்கத்தை பொறுத்தவரையில் நீண்டகால முதலீட்டாகவே பார்க்கவேண்டும்.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது. இது இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இருந்தது. மேலும் விலை அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.

    ஆனால் அந்த விலையில் திடீரென்று சரியத் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை விலை குறைந்து வந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயருமா? அல்லது ஏற்ற-இறக்க நிகழ்வு தொடருமா?, விலை குறையும் இந்த நேரத்தில் தங்கத்தின் மீது முதலீடு மேற்கொள்வது சரியாக இருக்குமா? என்ற கேள்வி பலருடைய மனதிலும் ஓடும்.

    இதுகுறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    தங்கம் விலை அதிகரிக்கும்போது, ஒருநேரத்தில் மிதமான நிலைக்கு வரும். அப்படிப்பட்ட ஒரு இடைவேளைதான் இந்த விலை குறைவு. இது பின்னர் மீண்டும் வேகம் எடுக்கும்.

    தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) 4,100 டாலர் என்ற அளவில் இருக்கிறது. இது விரைவில் 4,500 டாலர் முதல் 4,800 டாலர் வரை செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு 2 முதல் 3 மாதங்கள் காலம் எடுக்கும்.

    ஆகவே தங்கம் விலை நிச்சயம் உயரும். அதே சமயம் ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் குறைய வாய்ப்பே கிடையாது.

    பொருளாதார சூழ்நிலை, பிரிக்ஸ் நாடுகளின் சில முன்னேற்பாடுகள், அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள், கச்சா எண்ணெய் விலையில் மாற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு சரிவது போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கிறது. மேலும் அமெரிக்காவின் பெடரல் வங்கியில் வைப்புநிதிக்கான வட்டிவிகிதம் நவம்பர் மாதம் குறைந்தால், முதலீட்டாளர்கள் அதில் இருந்து பணத்தை எடுத்தும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.

    அப்படி பார்க்கையில் தங்கத்தின் தேவை வருங்காலங்களில் அதிகரிக்கும். தங்கத்தை பொறுத்தவரையில் நீண்டகால முதலீட்டாகவே பார்க்கவேண்டும். குறுகியகால முதலீட்டுக்கு தங்கம் ஏற்றது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • திருச்செந்தூரில் இருந்து நாளை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06135), மறுநாள் காலை 8 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06136), மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நேற்று (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×