என் மலர்
சென்னை
- தமிழகத்தில் குடியேறி உள்ள இந்திகாரர்கள் குறித்த டேட்டா எதுவும் தமிழக அரசிடம் இல்லை.
- தனது வாக்காளர்களை தமிழகத்தில் பா.ஜ.க. குடியமர்த்துகிறது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:
* தமிழகத்தில் குடியேறி உள்ள இந்திகாரர்கள் குறித்த டேட்டா எதுவும் தமிழக அரசிடம் இல்லை.
* பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் SIR-ஐ தீவிரமாக செயல்படுத்துவார்கள்.
* தனது வாக்காளர்களை தமிழகத்தில் பா.ஜ.க. குடியமர்த்துகிறது.
* இந்தியை திணித்தால் எதிர்ப்பாய், இந்தி காரனை திணித்தால் என்ன செய்வாய்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் நவம்பர் 4-ந் தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளன.
- அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிக்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வீடு, வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கும் பணி 4-ந் தேதி தொடங்கி டிசம்பர் 4-ந் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாட்டில் நவம்பர் 4-ந் தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கு தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு த.வெ.க.விற்கு தி.மு.க அழைப்பு விடுத்திருந்தது.
தி.மு.க. சார்பில் நடத்தப்படும் கூட்டம் என்பதால் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை. தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடந்திருந்தால் தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்று இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு சார்பில் நடந்த தொகுதி மறு சீரமைப்பிற்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டத்தில த.வெ.க. பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
- அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதித்து முதலமைச்சர் உறுதியான முடிவெடுப்பார்.
- அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருப்பது உட்கட்சி விவகாரம்.
சென்னை தீவுத்திடல் அருகே மாரத்தான் ஓட்டப்போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணை முதல்வர் தொடங்கி வைத்த மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் பா.ஜ.க.விற்கு பாதகமான வாக்குகளை நீக்க முயற்சி நடக்கிறது.
* பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக என்ன நடத்தப்பட்டது என்பது தெரியும்.
* SIR-ஐ பயன்படுத்தி தமிழ்நாட்டில் எப்படியாவது வெல்ல வேண்டும் என பா.ஜ.க. நினைக்கிறது.
* அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதித்து முதலமைச்சர் உறுதியான முடிவெடுப்பார்.
* சென்னையில் தற்போது சாலைகள் செப்பனிடும் பணி நடந்து வருகிறது.
* அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருப்பது உட்கட்சி விவகாரம்.
* அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ். இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்
- மொழி என்ற பெயரில் மக்களிடையே தடைகளை உருவாக்கியது துரதிர்ஷ்டவசமானது.
சென்னை ராஜ்பவனில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிறுவன தினக் கொண்டாட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் வறுமையைக் குறைப்பதில் வெற்றி கண்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வறுமை 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது சர்வதேச அமைப்புகளின் கூற்றுப்படி, 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போதைய வறுமை நிலை 6 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
தேசத்தின் உணர்வை, பாரதத்தின் இதயத்துடிப்பை புரிந்துகொண்ட ஒரு தலைமை நமக்குக் கிடைத்துள்ளது. மகாத்மா காந்திக்குப் பிறகு, இந்த நாட்டை மிக நன்றாகப் புரிந்துகொண்டவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்று நான் உறுதியுடன் சொல்கிறேன்.
அனைவரும் பாரதத்தை ஒரு குடும்பமாகக் கருத வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு, மொழி என்ற பெயரில் மக்களிடையே தடைகளை உருவாக்கியது துரதிர்ஷ்டவசமானது.
மாநில தினம் கொண்டாடுவது என்பது அந்தந்த மாநிலத்தின் கலாச்சாரத்தைப்கொண்டாடுவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. இதுவே 'ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்' (ஒரே இந்தியா, சிறந்த இந்தியா)" என்று தெரிவித்தார்.
- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
- மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு.
நவம்பர் 5ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நவம்பர் 5ம் தேதி காலை 10.30 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்டு 12ம் தேதி அன்று தொடங்கி வைத்தார்.
- ஒவ்வொரு மாதமும் 2-வது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முதியோர்- மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்டையார்பேட்டையில் கடந்த ஆகஸ்டு 12ம் தேதி அன்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம், தமிழக அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை பொது மக்களின் வீடு தேடிச் சென்றடைய செய்யும் வகையில் மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 34,809 நியாயவிலைக் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கொண்ட 15 லட்சத்து 81 ஆயிரத்து 364 ரேசன் கார்ட்டில் உள்ள 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 பயனாளிகளும், 91 ஆயிரத்து 969 ரேசன் அட்டைகளில் உள்ள ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகளும் பயன் அடைகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தமிழக அரசு தளர்த்தியுள்ளது.
- கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
- தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவின் வெற்றியால் அப்பகுதி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கபடி வீராங்கனை கார்த்திகாவின் அபார சாதனையால் தமிழ்நாடு முழுவதும் தற்போது சென்னை கண்ணகி நகரின் புகழ் எதிரொலித்து வருகிறது.
கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.
மழை, வெயில் குறித்து கவலையின்றி கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற இந்த உள்ளரங்க மைதானம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். கார்த்திகா போன்ற இன்னும் பல வீராங்கனைகளை நிச்சயம் உருவாக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
- கல்விக்கு நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடு 22-ஆம் இடத்தில் உள்ளது.
- பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வௌயிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா?
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு நாளை மறுநாள் நவம்பர் 3-ஆம் தேதிக்குள் ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் கட்டாயப்படுத்தப்படுவதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கவலையளிக்கின்றன. அரசின் தோல்விக்காக புனிதப்பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது.
ஒரு மாநிலத்தில் கல்வித்துறை செழிக்க வேண்டும் என்றால் அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6% ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் கல்வித்துறைக்கு ஆண்டுக்கு ரூ.2.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் வெறும் 1.31%, அதாவது ரூ.46,767 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடு 22-ஆம் இடத்தில் உள்ளது.
இந்த நிதியைக் கொண்டு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த முடியாது என்பது உண்மை தான். இத்தகைய சூழலில் அதற்குத் தேவையான நிதியை கவுரவமான, கண்ணியமான வழிகளில் திரட்ட வகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளிடம் தத்துக் கொடுப்பதும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை நன்கொடைக்காக கையேந்த வைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை.
ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை கையேந்த வைக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். அரசு பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம் பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 2024- 25ம் ஆண்டில் நெல் உள்ளிட்ட பொருட்கள் போக்குவரத்து செலவினம் ரூ.863 கோடி செலவானது.
- அதிமுக ஆட்சியில் 1.20 கோடி டன் நெல் போக்குவரத்துக்கு ரூ.1,947 கோடி செலவானது.
தமிழகத்தில் நெல் கொள்முதலும் நகர்வும் துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
நெல் கொள்முதல், நகர்வில் தொய்வு என ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்ட நிலையில் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 12.01 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மழை, பண்டிகையால் ஏற்பட்ட தடங்கலையும் மீறி 10.75 லட்சம் டன் நெல் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்களை மீறி லாரிகள் மற்றும் ரெயில்கள் மூலம் நெல் நகர்வு நடைபெற்று வருகிறது. 2024- 25ம் ஆண்டில் நெல் உள்ளிட்ட பொருட்கள் போக்குவரத்து செலவினம் ரூ.863 கோடி செலவானது.
அதிமுக ஆட்சியில் 1.20 கோடி டன் நெல் போக்குவரத்துக்கு ரூ.1,947 கோடி செலவானது. நெல் போக்குவரத்து செலவினம் திமுக ஆட்சியில் ரூ.731, அதிமுக ஆட்சியில் ரூ.1,622 செலவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளாட்சி துறையில் ரூ.800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக சொல்கிறார்கள்.
- அரசியல் பாகுபாடு இல்லாமல் கொடுத்தால் முதலமைச்சரை நானே பாராட்டுவேன்.
'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று காலை கும்பகோணத்திற்கு வருகை தந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகள் பாதிப்பு உள்ளானது தி.மு.க. ஆட்சியின் நிர்வாக திறமையின்மைக்கு ஒரு சான்று. ஆய்வு என்ற பெயரில் துணை முதலமைச்சர் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வந்து பார்த்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது, அவர்களது உட்கட்சி பிரச்சினை. இதில் நான் தலையிட விரும்பவில்லை. அமைச்சர் சேகர் பாபு முதலில் கோவில் பிரச்சினையை சரி செய்யட்டும். அதன் பிறகு, கட்சி பிரச்சினையை பார்க்கட்டும்.
ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், செங்கோட்டையன் ஆகியோரை சந்தித்து பா.ஜ.க.-விற்கு ஆதரவு கேட்பீர்களா? என்ற கேள்விக்கு மற்றொரு நாள் பதில் அளிப்பதாக கூறி ஒற்றை வரியில் முடித்தார். வடக்கு, தெற்கு எனவும், மொழிவாரியாக திரித்து பேசுவதும், தமிழகத்தில் வன்மத்தை ஏற்படுத்துவதும், கருணாநிதி காலத்தில் இருந்து தொன்று தொட்டு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நானும் டெல்டாகாரன் என சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அதனை அரசியல் பாகுபாடு இல்லாமல் கொடுத்தால் முதலமைச்சரை நானே பாராட்டுவேன்.
உள்ளாட்சி துறையில் ரூ.800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக சொல்கிறார்கள். விசாரணையின் முடிவில் உண்மை தெரியவரும் என்றார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
- தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
காஞ்சிபுரத்தில் 30-க்கும் மேற்பட்ட பட்டுப்புடவை உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றில் முக்கியமான ஒன்றான முருகன் கூட்டுறவு சங்கம் அதன் விற்பனை நிலையத்தை எண்ணைக்கார தெருவில் உள்ள சொந்த இடத்தில் புதுப்பொலிவுடன் புனரமைத்துள்ளது. இந்த விற்பனை நிலையத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் மற்றும் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ., முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் முத்துச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் காந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் மிகவும் தரமாக இருப்பதால் அனைவரும் அணிந்து மகிழ்கிறார்கள்.
மேலும், இந்த ஆண்டுக்கான பொங்கல் வேட்டி, சேலைகள் நவம்பர் 15-ந் தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக இதுவரை நெசவாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தி.மு.க. ஆட்சியில் நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ரூ.800 கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நெசவாளர்களுக்கு ரூ.800 முதல் ரூ.1500 வரை கூலி கிடைக்கிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அ.தி.மு.க. ஆட்சியில் பத்தாண்டுகளில் 9 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுமுதல் ஆண்டிலேயே ரூ.9 கோடி லாபம் ஈட்டியது, 58 சொசைட்டிகள் நவீனமயமாக்கப்பட்டு வியாபாரம் அதிகரித்து கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்கத் தொடங்கி உள்ளது.
இவ்வாறு அமைச்சர் காந்தி கூறினார்.
- தஞ்சை மாநகர் முழுவதும் வண்ண விளக்குகள் ஒளிர, சதய விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
- தமிழர்களின் பெருமையாக ராஜராஜ சோழன் நமக்காக விட்டுச் சென்றுள்ள பங்களிப்புகளை நினைவுகூர்வோம்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழர்களின் கலைத்திறன், போர்த்திறன், கப்பற்கலை, பாசனமுறை என அனைத்தின் உச்சமாக ஆட்சிசெய்து மங்காப் புகழொளியைத் தமதாக்கிக் கொண்ட மாமன்னர் இராசராச சோழனின் 1040-ஆவது சதய விழா இன்று!
தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, நேற்றுமுதல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன், தஞ்சை மாநகர் முழுவதும் வண்ண விளக்குகள் ஒளிர, சதய விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர்களின் பெருமையாக அவர் நமக்காக விட்டுச் சென்றுள்ள பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சொல்லி, மாமன்னர் இராசராச சோழன் புகழ் போற்றுவோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






