என் மலர்tooltip icon

    சென்னை

    • திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.
    • விடியா அரசை "பெண்களுக்கான அரசு" என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, Is Tamil Nadu Safe For Women? என்ற தலைப்பில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் செய்திகளில் வந்துள்ளன. மேலும், சென்னை கண்ணகி நகரில் 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளை பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக Compromise செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த மூன்றாவது நாளே, அதே கோவையில், பெண் கடத்தப்படும் சிசிடிவி காட்சி வெளிவருவது, திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.

    எந்த நேரத்திலும், எங்கும் பெண்களால் நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க முடியாத ஒரு பதற்றமான நிலையை உருவாக்கிவிட்டு, இந்த விடியா அரசை "பெண்களுக்கான அரசு" என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்.

    திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உங்கள் பெயருக்கு பின்னால் வைத்துள்ள நீங்கள், தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

    மேற்கூறிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணையை துரிதப்படுத்தி, பெண்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.




    • ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
    • நான் அதிமுக கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார்கள்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    2011-ம் ஆண்டில் அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 12 இடங்கள் தான் தருவோம் என கூறினார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    நான் அதிமுக கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார்கள்.

    கூட்டணிக்கு மதிமுக வர தயாராகவில்லை என ஜெயலலிதாவிடம் தவறாக கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்; ஜெயலலிதா 15 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது.

    அப்போது ஓபிஎஸ் செய்த தவறுக்காகத்தான் அதன் பலனை தற்போது அனுபவித்து கொண்டு இருக்கிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எக்ஸ்போவில் சென்னையின் முக்கிய வளர்ச்சிப் பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாட்டுகள் காட்சியிடப்படுகின்றன.
    • காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடரும் இந்த நிகழ்ச்சிக்கு நுழைவு இலவசம்.

    சென்னையைச் சுற்றியுள்ள வளர்ச்சிப் பகுதிகள் வேகமாக மாறி வருகின்றன.

    புதிய விமானநிலையம், புறவழி சாலைகள், தொழிற்சாலை விரிவாக்கங்கள் ஆகியவை நில சந்தைக்கு புதிய உயிர் ஊட்டுகின்றன. இதை முன்னிட்டு Connection Point நிறுவனம் நடத்தும் சென்னை ப்ளாட் எக்ஸ்போ 2025 வரும் நவம்பர் 8, சனிக்கிழமை, தாஜ் கொரோமண்டல், நுங்கம்பாக்கம் இல் நடைபெற உள்ளது.

    காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடரும் இந்த நிகழ்ச்சிக்கு நுழைவு இலவசம்.

    இந்த எக்ஸ்போவில் சென்னையின் முக்கிய வளர்ச்சிப் பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாட்டுகள் காட்சியிடப்படுகின்றன.

    OMR, Thirumazhisai, Thiruvallur, Thiruvottiyur, Vallarpuram, Guduvancherry, Thirumudivakkam, Parandur, ECR, Oragadam, Outer Ring Road, Sriperumbudur, Maraimalai Nagar, Vanagaram, Global City போன்ற இடங்களில் புதிய திட்டங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

    இவை அனைத்தும் Outer Ring Road, Chennai Peripheral Ring Road, மற்றும் பரண்டூரில் உருவாகும் புதிய விமானநிலையம் போன்ற முக்கிய கட்டமைப்பு வளர்ச்சிகளுடன் தொடர்புடையவை. இதனால், இவ்வகை பிளாட்டுகள் எதிர்காலத்தில் மிகுந்த மதிப்பேற்றம் பெறக்கூடியவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பங்கேற்கும் முன்னணி டெவலப்பர்கள்

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தலைசிறந்த நிறுவனங்கள்:

    Thangabhoomi, PurvaLand, Jain Housing, UrbanTree, KG, Stepstones, DRA, VR Foundation, RLD, Global City.

    ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனி விலைப்பட்டியல், சட்ட அங்கீகாரம் (DTCP / CMDA / RERA) மற்றும் சிறப்பு சலுகைகளுடன் பிளாட் திட்டங்களை காட்சிப்படுத்தவிருக்கின்றன. சில டெவலப்பர்கள் இடத்திலேயே சிறப்பு தள்ளுபடி வழங்கவிருக்கின்றனர்.

    ஏன் இந்த எக்ஸ்போவை தவறவிடக்கூடாது?

    •ஒரே இடத்தில் பல டெவலப்பர்கள் - நேரடி ஒப்பீடு மற்றும் ஆலோசனை.

    •சட்ட அங்கீகார விவரங்கள், ஆவண ஆலோசனை, விலை விவரங்கள் - அனைத்தும் வெளிப்படையாக.

    •மைய LED திரையில் (10x8 அடி) வீடியோ விளக்கங்கள் மற்றும் திட்ட நடைமுறை காட்சிகள்.

    •முதலீட்டாளர்களுக்கான ROI (Return on Investment) விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்.

    •முழுமையாக இலவச நுழைவு! 

    யாசர் ரஹ்மான் — "Chennai Realtor" யின் அனுபவம்

    இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் யாசர் ரஹ்மான், Connection Point நிறுவனத்தின் மேலாளர். அவர் நடத்தும் Chennai Realtor என்ற YouTube சேனல் சென்னையில் பிளாட் முதலீட்டாளர்களுக்கு நம்பகமான வழிகாட்டியாக உள்ளது.

    அவரின் வார்த்தைகளில் "ஒரு பிளாட் வாங்குவது சொத்து மட்டுமல்ல; அது உங்கள் குடும்பத்தின் எதிர்காலம். சரியான இடம், சரியான டெவலப்பர், சரியான ஆவணம் — இதுவே வெற்றியின் மூலக்கூறுகள்."

    எக்ஸ்போவில் யாசர் மற்றும் அவரது Connection Point குழு நேரில் பங்கேற்று, முதலீட்டாளர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனைகள் வழங்கவுள்ளனர்.

    முதலீட்டுக்கு சரியான நேரம்- இப்போது

    சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் நில மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

    OMR, Oragadam, Sriperumbudur பகுதிகளில் கடந்த 5–8 ஆண்டுகளில் 80% வரை வளர்ச்சி கண்டுள்ளது.

    அதேபோல், Parandur மற்றும் Vallarpuram போன்ற புதிய இடங்களில், விமானநிலையம் மற்றும் சாலை இணைப்புகள் உருவாகும் நிலையில், எதிர்கால மதிப்பெழுச்சி மிகுந்த வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

    அதனால், இந்த எக்ஸ்போ புதிய முதலீட்டாளர்களுக்கும், அனுபவமுள்ளவர்களுக்கும் சரியான வழிகாட்டுதலாக இருக்கும்.

    நிகழ்ச்சி விவரம்

    * இடம்: தாஜ் கொரோமண்டல், நுங்கம்பாக்கம்

    * தேதி: நவம்பர் 8, 2025

    * நேரம்: காலை 10 மணி – இரவு 10 மணி

    * நுழைவு: இலவசம்

    * தொடர்பு எண்: 98840 26399

    * இணையதளம்: connectionpoint.in

    * இலவச பதிவு: Click Here

    * YouTube: Chennai Realtor

    முடிவாக, நிலம் எப்போதும் பாதுகாப்பான முதலீடாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் சரியான தகவலுடன் முதலீடு செய்வது அவசியம். அதற்கான சிறந்த வாய்ப்பு- சென்னை ப்ளாட் எக்ஸ்போ 2025.

    ஒரே நாளில் பல திட்டங்களைப் பாருங்கள், ஆலோசனை பெறுங்கள், உங்கள் கனவு பிளாட்டை தேர்வு செய்யுங்கள்.

    நவம்பர் 8 — காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை- தாஜ் கொரோமண்டல், நுங்கம்பாக்கம்.

    நுழைவு இலவசம்!

    • கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
    • எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தென்னகத்தின் Manchester-ஐ பெண்களை சூறையாடும் Monster-கள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுக-வின் சாதனை!

    தேசத்தையே உலுக்கச் செய்த கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து மூன்று நாட்களுக்கு உள்ளாகவே கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்படாமல், உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    விமான நிலையம் அருகில் பாலியல் வன்கொடுமை, பரப்பரப்பான சாலையில் கடத்தல் எனக் கோவையில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

    திறனற்ற நிர்வாகத்தையும், சீரழிந்த சட்டம் ஒழுங்கையும் வைத்துக் கொண்டு எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே! வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் அரசை நாடு போற்றும் நல்லாட்சி என்று கூறும் அவலத்தை வேறு கேட்க நேருவது பெரும் சாபக்கேடு! என கூறியுள்ளார். 



    • நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க் கும் விற்பனை ஆனது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு தள்ளியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த மாதம் 22-ந்தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது.

    அதன் தொடர்ச்சியாக 28-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம் சரிந்தது. இப்படியாக விலை குறைந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருக்கிறது.

    அதிலும் ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலையிலேயே ஏறுவதும், பின்னர் குறைவதுமாக நீடிக்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் விலை குறைந்து, ரூ.90 ஆயிரத்துக்கு கீழே வந்தது. இந்த நிலையில் நேற்று விலை அதிகரித்து ரூ.90 ஆயிரத்தை தாண்டிவிட்டது.

    நேற்று ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்வை சந்தித்தது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்தது. பிற்பகலிலும் இதேபோல் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்தது.

    மொத்தமாக நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 320-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 560-க் கும் விற்பனை ஆனது.

    வெகு நாட்களுக்கு பிறகு, ஒரே நாளில் 2 முறை விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே இப்படி இருந்த விலை உயர்வினால்தான், தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. மீண்டும் தங்கம் விலை ஏற்றப்பாதைக்கு செல்ல தயாராகிவிட்டதா? என பலரையும் நினைக்கத் தோன்ற செய்கிறது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,270-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.90,160 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 165 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.90,560

    05-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,440

    04-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,000

    03-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,800

    02-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-11-2025- ஒரு கிராம் ரூ.165

    05-11-2025- ஒரு கிராம் ரூ.163

    04-11-2025- ஒரு கிராம் ரூ.165

    03-11-2025- ஒரு கிராம் ரூ.168

    02-11-2025- ஒரு கிராம் ரூ.166

    01-11-2025- ஒரு கிராம் ரூ.166

    • என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்.
    • அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்!

    சென்னை:

    நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்- கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்!

    நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, பாராளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்! என்று கூறியுள்ளார். 



    • வருகிற 14-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.
    • வருகிற 19-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதன்பிறகு உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. இதையடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மோன்தா புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது. இதையடுத்து வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, வருகிற 14-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இதற்கு மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்.

    இதனை தொடர்ந்து, வருகிற 19-ந்தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் மழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
    • ஏற்கனவே செங்கேட்டையன் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 12 பேரை நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன் (கோபி மேற்கு ஒன்றியம்), ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் சுந்தவேல் முருகன், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழக செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 12 பேர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே செங்கேட்டையன் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 12 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசிலபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

    சென்னை:

    தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில

    பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அஜித்குமாரின் கருத்து வைரலாகி பெரும் கவனம் பெற்றது.
    • ஒரு தரப்பு விஜய்க்கு ஆதரவாக உள்ளது என்றும் இன்னொரு தரப்பு விஜய்க்கு எதிராக உள்ளது என்றனர்.

    சென்னை:

    நடிகர் அஜித்குமார் சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,''கரூர் சம்பவத்துக்குத் தனிநபர் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவருமே காரணம்தான். ஒரு சமூகமாகக் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவும் அதிக கூட்டம் வருகிறது. ஆனால் அங்கு இப்படி எதுவும் நடப்பதில்லை. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது. முதல் நாள் முதல் காட்சி கலாசாரத்தை ஊடகங்கள் ஆதரிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.

    அஜித்குமாரின் இந்தக் கருத்து வைரலாகி பெரும் கவனம் பெற்றது. ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவாக பேசினார் என்றும், இன்னொரு தரப்பினர் விஜய்க்கு எதிராக இந்தக் கருத்து உள்ளது என விமர்சனங்களும், விவாதங்களும் எழுந்தன.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமாரே இன்று விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு அஜித்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது கரூரில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது.

    இதற்கு முன்பு ஆந்திரா சினிமா தியேட்டரில் நடந்துள்ளது. பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடந்துள்ளது. பல நாடுகளில் நடந்துள்ளது.

    பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள் நான் உள்பட அனைவருக்கும் பொருந்தும்.

    எனது இந்த கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்படாது என்று நம்புகிறேன். ஒரு சிலர் ரசிகர்கள் மீது பழியை சுமத்துகிறார்கள்.

    எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது.

    என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன். வாழ்த்தி இருக்கிறேன்.

    எல்லாருமே அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • காலையில் சென்னையில் வெயில் வாட்டி வைத்தது
    • இரவில் மழை பெய்து வருவதால் சென்னையில் குளிச்சியான சூழல் நிலவுகிறது.

    தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னையில் எழும்பூர், எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது.

    காலையில் வெயில் வாட்டி வைத்தது வந்த நிலையில், இரவில் மழை பெய்து வருவதால் சென்னையில் குளிச்சியான சூழல் நிலவுகிறது.

    • அனைத்து மாவட்ட தலைநகர்களில் 11ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்.
    • திமுக., காங்கிரஸ்., விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.

    SIR நடவடிக்கைக்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 11ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது.

    அதன்படி, அனைத்து மாவட்ட தலைநகர்களில் 11ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திமுக., காங்கிரஸ்., விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.

    ×