என் மலர்
சென்னை
- பெண்கள் மீது மரியாதை முழுமையாக கிடைக்கிறதோ அதுவே மகளிர் தினம் என்பதே சரியானதாக இருக்கும்.
- மகளிர் அனைவரும் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஒளிர இந்த மகளிர் தினத்தில் வாழ்த்துகிறேன்...
சென்னை :
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்ததராஜன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி.... சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன்.... அனைத்து மகளிர்களுக்கும் எனது இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மார்ச் - 8 மகளிர் தினமாக இருப்பதை விட ஒவ்வொரு தினமும் மகளிருக்கான தினமாக இருக்க வேண்டும் என்பதே இன்று அனைவரும் விரும்புவது...
இன்று பெண்கள் சிறப்பாக முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் பெண்களுக்கு முழுமையான தடையில்லாத அடிப்படைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, வரதட்சணை இல்லாத திருமணங்கள், கலைக்கப்படாத பெண் சிசுக்கள்,பாலியல் தொந்தரவு இல்லாத தொழில் நிறுவனங்கள், பாரபட்சமில்லாத வாய்ப்புகள், சமுதாய களம் மட்டுமல்ல, மனதளவில் கூட பெண்கள் மீது மரியாதை முழுமையாக கிடைக்கிறதோ அதுவே மகளிர் தினம் என்பதே சரியானதாக இருக்கும்.
இவையெல்லாம் முழுமையடைந்து ஒவ்வொரு நாளும் மகளிருக்கான தினமாக கொண்டாடப்பட வேண்டும். நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு மூலம் இந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது. பிறந்த பெண் என் பெருமை என்று செல்வமகள் சேமிப்பு திட்டத்தை ஏற்படுத்தியதிலிருந்து பெண்கள் பொருளாதாரத்திலும், தொழிலிலும் முத்திரை பதிக்க வேண்டும் என முத்ரா வங்கி திட்டம் கொண்டு வந்ததிலிருந்து பல பெண்களுக்கு அமைச்சரவையில் சவாலான துறைகளை அளித்ததிலிருந்து மகளிரின் நம்பிக்கை நட்சத்திரமாக நம் பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி மகளிர் அனைவரும் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஒளிர இந்த மகளிர் தினத்தில் வாழ்த்துகிறேன்... என்று கூறியுள்ளார்.
- சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
- அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், மகளிருக்காக தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களை பட்டியலிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனங்களில் சோதனை தொடர்கிறது.
- தி.நகரில் உள்ள அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான ஒப்பந்ததாரர் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், ஒப்பந்ததாரர்கள் இடங்கள் என 3-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இரவு பகலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்என்ஜே மதுபான ஒப்பந்ததாரர்கள் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. தி.நகரில் உள்ள அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான ஒப்பந்ததாரர் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபான ஒப்பந்ததாரர் வீட்டிலும் 3-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.
கோவையில் நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள சிவாஸ் மதுபான ஆலையிலும் 3-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.
- திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
- குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!- தி.மு.க. சார்பில் வருகிற 12-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 12-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் மாவட்டங்களில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்கள் பட்டியலையும் தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
- பட்டா வழங்கும் பணிக்காக மாவட்ட மற்றும் மாநில அளவில் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் அதிகபட்சமாக 1 சென்ட் பட்டா வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழக அமைச்சரவை கூட்டம் கடந்த மாதம் 10-ந் தேதி நடந்தது. அதில் தமிழகத்தில் ஆட்சேபனையற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்தார். அதனடிப்படையில் யார், யாருக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், அதற்கான தகுதி என்ன? என்பது குறித்தும் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அமுதா ஒரு அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சேபனையற்ற நிலங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கலாம். மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு 5 ஆண்டுகள் வசித்தால் வழங்கலாம்.
அதில் ஆட்சேபனை இல்லாத அரசு நிலங்களான மதிப்பிடப்பட்ட மற்றும் மதிப்பீடு செய்யாத நிலங்கள், கல்லாங்குழி-பாறை-கரடு நிலங்கள், கிராம நத்தம், அரசு நஞ்சை-புஞ்சை நிலங்கள், எதிர்ப்புகள் இல்லாத சிறப்பு அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால் சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நீர்நிலைகள், மேட்டு நிலங்கள், மேய்ச்சல்-மேய்க்கால், மந்தவெளி நிலங்கள், காடு நிலங்கள், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்கள், அனைத்து மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றுக்கு பட்டா வழக்கப்படாது.
பட்டா பெறும் பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ரூ.3 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால், அவர்களிடம் இருந்து நிலத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
இந்த பட்டா வழங்கும் பணிக்காக மாவட்ட மற்றும் மாநில அளவில் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் அதிகபட்சமாக 1 சென்ட் பட்டா வழங்க வேண்டும். பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் அதிகபட்சமாக 2 செண்டும். கிராமப்புறங்களில் 3 செண்டும் வழங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.
- அரசுப்பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து கையெழுத்து வாங்குவதாக புகார் எழுந்தது.
மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக 'சமக்கல்வி எங்கள் உரிமை' எனும் கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.
இதனிடையே சென்னை காரப்பாக்கத்தில் பா.ஜ.க.வினர் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பும் மகேஷ் தெரிவித்திருந்தார்.
சென்னை காரப்பாக்கம் பகுதியில் பாஜகவின் கையெழுத்து இயக்கத்தில், அரசுப் பள்ளியின் மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்து இடச்செய்த விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரில், கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஜி.சூர்யா, சுந்தரம், கோடீஸ்வரன், மோகன் மற்றும் அன்பரசு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
- அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- 32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தணிக்கையை மேற்கொண்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டம் II-ல் 15 மெட்ரோ நிலையங்களுக்கான வடிவமைப்பை மதிப்பாய்வு செய்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து பயணிகளும் எளிதாக அணுகக்கூடியவகையில் வசதிகளை மேம்படுத்துவதை உறுதி செய்கிறது.
இந்தியாவின் சீரான வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நிலைய வடிவமைப்புகளை மேம்படுத்துவதற்காக, இந்த ஒப்பந்தம் M/s v-shesh Learning Services Private Limited நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பிப்ரவரி 18, 2025 அன்று வழங்கப்பட்ட ஏற்பு கடிதத்திலிருந்து 180 நாட்களுக்குள் முடிக்கப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் ரேகாபிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் M/s v-shesh Learning Services Private நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் மற்றும் இணை நிறுவனர் P.ராஜசேகரன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எளிதாக அணுகக்கூடிய போக்குவரத்து அமைப்பை உருவாக்க உறுதி பூண்டுள்ளது. இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் அனைவரும் அணுகக்கூடிய வகையில் சீரான வழிகாட்டுதல்கள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
கட்டம் II-ல் 15 மெட்ரோ ரெயில் நிலையங்களில் வடிவமைப்பை மதிப்பாய்வு செய்வதற்காக M/s v-shesh Learning Services Private ஆலோசனை நிறுவனம், கட்டம்-I-ல் செயல்பாட்டில் உள்ள 32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தணிக்கையை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருத்தணி அருகே அரசு பேருந்தும் , லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
- விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர் .
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கேஜி கண்டிகை பகுதியில் அரசு பேருந்தும் , லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 28 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர் .
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "விபத்தில் சிவானந்தம், மகேஷ், முரளி, பாண்டுரங்கன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.
காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 28 பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 2025ஆம் ஆண்டில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது ஒன்பதாவது முறை.
- இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மேலும் கைது செய்யப்படுவதை நடவடிக்கை வேண்டும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை 6.3.2025 அன்று அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து
மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்
மேலும் கைது செய்யப்படுவதைத் தடுத்திட உடனடி தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (7.3.2025) கடிதம் எழுதியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன்பிடித்
துறைமுகத்திலிருந்து 6.3.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்களை அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள
மற்றுமொரு சம்பவம் குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ள முதலமைச்சர், 2025ஆம் ஆண்டில், கடந்த இரு மாதங்களில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் கைது
செய்யப்படுவது இது ஒன்பதாவது முறை என்றும், இன்றைய நிலவரப்படி 227 மீன்பிடிப்படகுகளும், 107 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ளதையும் ஆழ்ந்த
கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, இலங்கையில் தமிழக மீனவர்கள் நீண்ட காலத்திற்கு சிறை வைக்கப்பட்டிருப்பதோடு, அவர்களை விடுவிக்க அதிகபட்ச அபராதத்தை விதிக்கத்
தொடங்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,
சிறைவாசம், அபராதம் மற்றும் இலங்கை சிறையில் இருக்கும் காலத்தில் ஏற்படும் வருமான இழப்பு போன்ற துன்பங்களுக்கும் அப்பால், அவர்களின் பொருளாதாரத்திற்கு
உதவுக்கூடிய ஓரே ஆதாரமாக விளங்கும் அவர்களின் படகுகளையும் இலங்கை அரசு திருப்பித் தராததால், தமிழக மீனவர்கள் தற்போது தங்களது வாழ்வாதாரத்தில் பெரும்
பொருளாதார இழப்பை எதிர்கொண்டுள்ளனர் எனத் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே, கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க
உரிய நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மேலும் கைது செய்யப்படுவதை தடுத்திடுவதற்கு தேவையான அனைத்து தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்திடுமாறும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பை திறந்தார்.
- நோன்பு திறந்ததை தொடர்ந்து, விஜய், இமாம்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 5 மணியளவில் தவெக தலைவர் விஜய் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வருகை தந்தார்.
வெள்ளை லுங்கி, சட்டை, இஸ்லிமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வந்தார்.
அங்கு, இஸ்லாமிய தலைவர்கள் விஜய்யை வரவேற்றனர். பிறகு, நோன்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் விஜய் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் அமர்ந்தனர்.
பிறகு, பிரார்த்தனை செய்துவிட்டு நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பை திறந்தார்.
நோன்பு திறந்ததை தொடர்ந்து, விஜய், இமாம்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.
இதைதொடர்ந்து, விஜய் இஸ்லாமிய மக்கள் முன்பு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், " மாமனிதர் நபிகள்நாயகம் அவர்களின் வழியை, மனிதநேயம், சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்.
எங்களது அழைப்பை ஏற்று இஃப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு வந்த இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தவெக தலைவர் விஜய் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
ராயப்பேட்டையில் திரண்டுள்ள தவெக தொண்டர்கள், ரசிகர்களை நோக்கி கை அசைத்து சந்தித்தபடி விஜய் புறப்பட்டுச் சென்றார்.
- 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி தயாரிப்பு.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 5 மணியளவில் தவெக தலைவர் விஜய் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வருகை தந்தார்.
வெள்ளை வேட்டி, சட்டை, இஸ்லிமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வருகை தந்தார்.
இஸ்லாமிய தலைவர்கள் விஜய்யை வரவேற்றனர். பிறகு, நோன்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் விஜய் மற்றும் இமாம்கள் அமர்ந்தனர்.
பிறகு, தொழுகை செய்துவிட்டு நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பு திறந்தார்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாலை நோன்பு திறந்த பிறகு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி விருந்து அளிக்கப்பட்டது.
- பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கியிருக்கிறோம்.
- எந்த கட்சியையோ, தலைவரையோ சிறுமைப்படுத்த நான் விரும்பவில்லை.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாஜகவால்தான் தோற்றோம் எனக் கூறியவர்கள் தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள்.
பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கியிருக்கிறோம்.
எந்த கட்சியையோ, தலைவரையோ சிறுமைப்படுத்த நான் விரும்பவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






