என் மலர்
சென்னை
- பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது.
- டாக்டர் அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்…
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, இனி பா.ம.க. தலைவர் நான் தான் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். மேலும் பா.ம.க. தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாகவும், பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க. விதிகளின் அடிப்படையில் பொதுக்குழுவிற்கே தலைவரை நீக்கம் அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பா.ம.க.வில் உள்ள நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில், அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக முதல் ஆளாக பா.ம.க. பொருளாளர் திலகபாமா குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே . அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு......
அன்புதானே எல்லாம் என்றும்
டாக்டர் அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்…
ஏற்கனவே சொன்னது தான்…
தனி நபர்களை விட தலைமை பெரியது
தலைமையை விட இயக்கம் பெரியது
இயக்கத்தை விட சமூகம் பெரியது
சமூகத்தின் நலன் காக்கப்பட வேண்டுமெனில் அது தற்போதைய சூழலில் டாக்டர் அன்புமணி தலைமையில் மட்டுமே…
டாக்டர் அன்புமணி வழியில் நாம்... என்று பதிவிட்டுள்ளார்.
- சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
- ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஜான் ஜெபராஜ் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த லுக்-அவுட் நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, அவரது புகைப்படம், பாஸ்போர்ட் குறித்த தகவல், அவர் என்ன வழக்கில் சிக்கி உள்ளார் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனார். ஜான் ஜெபராஜ் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- சட்டப்பேரவையில் இதுகுறித்துப் பேச வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறி உரிமையாளர்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள்.
இந்நிலையில், மூன்று முறை உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தங்களது விசைத்தறியில் வேலை செய்யும் கூலி ஆட்களின் சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், தற்போது வழங்கப்படும் கூலி மிகமிகக் குறைவு என்றும், எனவே, தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான பேச்சுவார்த்தையில், இதுவரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை தி.மு.க. மாடல் அரசு, விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டப்பேரவையில் இதுகுறித்துப் பேச வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
இந்தக் கூலி உயர்வு பிரச்சனையால், இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், அதன் சார்பு தொழில்களை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தி.மு.க. அரசால் உயர்த்தப்பட்ட வரிகள், கட்டணங்கள் மற்றும் கடும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் காரணிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், விசைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் அதன் சார்புத் தொழிலாளர்கள் என்று லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஒரு தொடக்கம்தான்.
- அ.தி.மு.க.வும் கூட்டத்தை புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாத்தை காட்டினர்.
சென்னை:
'மாநிலத்தில் சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சி' என்ற தலைப்பில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
* இந்தியாவின் ஜனநாயகம், கூட்டாட்சி தன்மையை பாதுகாத்திடும் பேரியக்கமாக தி.மு.க.வின் போராட்டம் தொடரும். நீட் தேர்வு தொடர்பான வழக்கிலும் தி.மு.க.வின் போராட்டம் தொடரும்.
* மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி தி.மு.க.
* கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஒரு தொடக்கம்தான்.
* தமிழ்நாட்டின் தனித்தன்மையை சட்டப்போராட்டத்தின் வழியே முன்னெடுக்க ஆதரவு சக்திகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.
* தி.மு.க. அதன் தலைமையிலான அரசின் சட்டப்போராட்டத்தால் பெறும் தீர்ப்புகள் ஜனநாயகத்திற்கு வெளிச்சம் பாய்ச்ச கூடியவை.
* பா.ஜ.க.வினர் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும் அ.தி.மு.க.வும் கூட்டத்தை புறக்கணித்து தங்கள் எஜமான விசுவாத்தை காட்டினர் என கூறியுள்ளார்.
- மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.
- தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும்.
சென்னை:
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) இன்று வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.
தென் தமிழகத்தை யொட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் இன்று ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று வெப்பம் 97 டிகிரி பாரன்ஹீட்டை யொட்டி இருக்கும்.
தமிழகத்தில் நேற்று (புதன்கிழமை) காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 80 மி.மீ. மழை பதிவானது.
தமிழகத்தில் நேற்று (புதன்கிழமை) அதிக பட்சமாக வேலூரில் 101.3, சேலத்தில் 100.76 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவு.
- அன்புமணியை தலைவராக அறிவித்த போதும் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் தெரிவித்தார். மேலும் பா.ம.க. செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்படுவதாகவும், நானே தலைவர் பதவியில் நீடிப்பேன் எனவும் ராமதாஸ் கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
பா.ம.க. விதிகளின் அடிப்படையில் பொதுக்குழுவிற்கே தலைவரை நீக்கம் அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பா.ம.க.வில் உள்ள நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளதாக கூறுகின்றனர்.
முன்னதாக, அன்புமணியை தலைவராக அறிவித்த போதும் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஜனவரி முதல் பிப்ரவரி வரை 400 கால்நடைகள் பிடிபட்டுள்ளது.
- 600 மாடுகளை பராமரிக்கும் வகையில் விரிவு படுத்தப்படும்.
ராயபுரம்:
சென்னையில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களை மாடுகள் முட்டி தூக்கி வீசிய சம்பவங்களும் சமீபத்தில் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொளத்தூரில் பெண் ஒருவரை மாடு விரட்டி சென்று முட்டியது.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூரில் ஓய்வு பெற்ற ராணுவவீரரை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசும் கண்காணிப்பு காமிரா காட்சி பார்ப்பவர்களை அதிர வைத்தது.
இதற்கிடையே சென்னை நகரப்பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. முதல் முறை மாடுகள் பிடிபட்டால் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என உயர்த்தப்பட்டுள்ளது.
2-வது முறை அதே மாடு பிடிபட்டால் ரூ.15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. எனினும் பல்வேறு இடங்களில் இன்னும் கால்நடைகள் வழக்கம்போல் போக்கு வரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிகின்றன.
இது அண்ணா சாலை, ஈ.வி.ஆர் பெரியார் சாலை, ஜி.எஸ்.டி சாலை போன்ற முக்கிய சாலை, மதுரவாயல் முதல் கோயம்பேடு மார்க்கெட் வரையிலான 5 கி.மீ பகுதியிலும், சென்னை துறை முகத்தை நோக்கி செல்லும் லாரிகள் மற்றும் பேருந்துகள் செல்லும் பாதையிலும் மாடுகள் அடிக்கடி சுற்றுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அடைத்து பராமரிப்பதற்காக ராயபுரம் மண்டல அலுவலகம் அருகே நவீன வசதியுடன் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு முதல் கட்டமாக 250 மாடுகளை பராமரிக்கும் வகையில் இடவசதி செய்யப்பட்டு உள்ளது.
விபத்தில் கால் நடைகள் சிக்கினால் சிகிச்சை அளிக்கவும் தனி இடம் உள்ளது. சுத்தமான மற்றும் விசாலமான பகுதியில் மாடு களை பராமரிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த பராமரிப்பு மையத்தின் முகப்பு பகுதி மற்றும் உட்புற பகுதியில் இயற்கை சூழல் படத்துடன் வர்ணம் பூசப்பட்டு து உள்ளது. இது பார்ப்பவர்களை கவர்ந்து உள்ளது. இந்த புதிய கால்நடை பராமரிப்பு மையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. வரும் மாதங்களில் இங்கு 600 கால்நடைகளை பராமரிக்கும் வகையில் இடவசதி செய்யப்பட உள்ளது.
மேலும் போதிய இடவசதி இல்லாமல் மாடுகளை பராமரிப்பவர்களும் இங்கு தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பரமாரிக்க லாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக தினமும் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் அதற்கான செலவு குறித்து வரும் நாட்களில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பராமரிக்க ராயபுரத்தில் நவீன வசதியுடன் புதிய பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
250 கால்நடைகளை பராமரிக்கும் வகையில் இது விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. அடுத்த 3 மாதங்களுக்குள் 600 மாடுகளை பராமரிக்கும் வகையில் விரிவு படுத்தப்படும்.
சாலையில் சுற்றும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அபராதம் விதிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதும் வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் (2024) மொத்தம் 2,800 கால்நடைகள் பிடிக்கப்பட்டு உள்ளது.
தற்போது ஜனவரி முதல் பிப்ரவரி வரை 400 கால்நடைகள் பிடிபட்டுள்ளது. 1500 உரிமையாளர்கள் தொடர்ந்து தங்களது மாடுகளை சுதந்திரமாக சாலையில் சுற்றித் திரிய அனுமதித்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது என்றார்.
- கொள்கை, கோட்பாடு உள்ள கட்சி பா.ம.க.
- உட்கட்சி பிரச்சனை என்றாலும் எதிர்காலத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளோர் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம்.
பா.ம.க. தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இனி பா.ம.க. தலைவர் நான் தான் என அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:
* கொள்கை, கோட்பாடு உள்ள பா.ம.க. கட்சி ஒற்றுமையுடன் செயல்பட்டு தொடர்ந்து மக்கள் தொண்டாற்ற வேண்டும்.
* பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களால் நாட்டுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு ஆபத்து உள்ளதால் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
* உட்கட்சி பிரச்சனை என்றாலும் எதிர்காலத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளோர் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க. நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து பேசி சமாதானம் செய்தனர்.
- பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை:
கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பா.ம.க. கூட்ட மேடையிலேயே ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் உருவானது. இதனை தொடர்ந்து பா.ம.க. நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து பேசி சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், இனி பா.ம.க. தலைவர் நான் தான் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மேலும் பா.ம.க. தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாகவும், பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
- 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
- இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியது. இந்நிலையில், 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
குட் பேட் அக்லி' திரைப்படத்தை நடிகை ஷாலினி தனது மகளுடன் இணைந்து ரோகிணி திரையரங்கில் கண்டு ரசித்து வருகிறார்.
- கடுமையான மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்காக போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி 4 (குரூப் 4) பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. வேலைக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில், இன்று வரை நியமன ஆணைகளை வழங்காமல் தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயமல்ல.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு சுமார் 9600 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அக்டோபர் 28-ஆம் நாள் வெளியிடப்பட்டன.
எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் இளநிலை உதவியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, அனைத்து சான்றிதழ்களையும் தாக்கல் செய்தவர்களுக்கு துறைகள் வாயிலாகவும், மாவட்ட ஆட்சியர் வாயிலாகவும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. அதனால், தங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது பறிக்கப்படுமா? என்பது தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். கடுமையான மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 95 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், போக்குவரத்துறைக்கு தொகுதி 4 பணியாளர்களை நியமிப்பதில் மட்டும் அரசு காலம் தாழ்த்துவது ஏன்? ஒருவேளை அவர்கள் நியமிக்கப்படுவதற்கு இன்னும் சில வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகும் என்றால், அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்படி தெரிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?
அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு. அதை நனவாக்குவது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சிதைப்பதாக இருக்கக் கூடாது. எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போக்குவரத்துத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று இரவு சென்னை வருகிறார்.
- முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று இரவு சென்னை வருகிறார்.
மத்திய அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளை அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ள நிலையில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.






