என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்"

    • அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
    • விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு.

    கோவையில் அமைச்சர்கள் தலைமையில் விசைத்தறி உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், அமைச்சர்கள் சாமிநாதன், செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.

    இதைதொடர்ந்து, நாளை பொதுக்குழுவை கூட்டி விசைத்தறியை இயக்குவது குறித்து முடிவெடுப்போம் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, 33 நாட்களாக நடந்து வந்த விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக ரூ.1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளதாகவும், போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    • விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • சட்டப்பேரவையில் இதுகுறித்துப் பேச வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறி உரிமையாளர்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள்.

    இந்நிலையில், மூன்று முறை உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தங்களது விசைத்தறியில் வேலை செய்யும் கூலி ஆட்களின் சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், தற்போது வழங்கப்படும் கூலி மிகமிகக் குறைவு என்றும், எனவே, தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பான பேச்சுவார்த்தையில், இதுவரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், இதுவரை தி.மு.க. மாடல் அரசு, விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டப்பேரவையில் இதுகுறித்துப் பேச வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

    இந்தக் கூலி உயர்வு பிரச்சனையால், இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், அதன் சார்பு தொழில்களை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, தி.மு.க. அரசால் உயர்த்தப்பட்ட வரிகள், கட்டணங்கள் மற்றும் கடும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் காரணிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், விசைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் அதன் சார்புத் தொழிலாளர்கள் என்று லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
    • வேலை நிறுத்த போராட்டத்தால் வேலை பார்த்து வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது.

    2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நிறுவனங்கள் இங்கு உள்ளன. விசைத்தறி உரிமையாளர்கள் பாவு நூலை பெற்று கூலிக்கு நெய்து கொடுத்து வருகின்றனர்.

    இந்த தொழிலின் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். பல கட்ட போராட்டங்களை நடத்தி நெசவுக்கு தற்போது தான் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு பெற்றனர்.

    தற்போது தமிழக அரசு அனைத்து வகை பிரிவிற்கும் 30 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் மின்கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும் விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதன் காரணமாக சோமனூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி உரிமையாளர்களும் தங்களது விசைத்தறி கூடத்தை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தால் அதில் வேலை பார்த்து வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ×