என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ம.க. தலைவர் அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் உண்டா?
    X

    பா.ம.க. தலைவர் அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் உண்டா?

    • 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவு.
    • அன்புமணியை தலைவராக அறிவித்த போதும் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் தெரிவித்தார். மேலும் பா.ம.க. செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்படுவதாகவும், நானே தலைவர் பதவியில் நீடிப்பேன் எனவும் ராமதாஸ் கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து, பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ம.க. விதிகளின் அடிப்படையில் பொதுக்குழுவிற்கே தலைவரை நீக்கம் அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பா.ம.க.வில் உள்ள நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளதாக கூறுகின்றனர்.

    முன்னதாக, அன்புமணியை தலைவராக அறிவித்த போதும் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×