என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. ஒற்றுமையுடன் செயல்பட்டு தொடர்ந்து மக்கள் தொண்டாற்ற வேண்டும் - செல்வப்பெருந்தகை
- கொள்கை, கோட்பாடு உள்ள கட்சி பா.ம.க.
- உட்கட்சி பிரச்சனை என்றாலும் எதிர்காலத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளோர் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம்.
பா.ம.க. தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இனி பா.ம.க. தலைவர் நான் தான் என அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:
* கொள்கை, கோட்பாடு உள்ள பா.ம.க. கட்சி ஒற்றுமையுடன் செயல்பட்டு தொடர்ந்து மக்கள் தொண்டாற்ற வேண்டும்.
* பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களால் நாட்டுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு ஆபத்து உள்ளதால் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
* உட்கட்சி பிரச்சனை என்றாலும் எதிர்காலத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளோர் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






