என் மலர்
சென்னை
- கால அவகாசம் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பங்களை மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என அறிவிப்பு.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2025-2026 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 25.06.2025 இன்று முதல் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி, விண்ணப்பங்களை 29.06.2025 மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- 2 நாட்களாக போலீசார் தேடி வந்தநிலையில், தனிப்படை போலீசார் ஸ்ரீகிருஷ்ணாவை பிடிபட்டார்.
- சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் தந்த வாக்குமூலம் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த முயன்றனர்.
ஆனால், கிருஷ்ணா செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். 2 நாட்களாக போலீசார் தேடி வந்தநிலையில், தனிப்படை போலீசார் ஸ்ரீகிருஷ்ணாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 நாட்களாக தேடி வந்த நிலையில் சென்னையில் பிடிபட்ட நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவை, சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்த பரிசோதனையில் ஸ்ரீகிருஷ்ணா கொகைன் பயன்படுத்தியது உறுதியானால் ஸ்ரீகாந்தை போல் ஸ்ரீகிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான்.
- அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்குகிறோம்.
வால்பாறையில் சில தினங்களுக்கு முன்னதாக சிறுமி ஒருவரை சிறுத்தை, தூக்கிக் கொண்டு சென்று தாக்கியது. பின்னர் அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ராஜ கண்ணப்பன் "மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான். அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்குகிறோம்" எனப் பதில் அளித்துள்ளார்.
மிருகங்களிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மோதுமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்பதற்குப் பதிலாக மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான் என பதில் அளித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.
- தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 27, 28-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
- மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய- மாநில அரசுகளுக்கு உண்டு.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனவே இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலில் இருந்து மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய- மாநில அரசுகளுக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
- குறைபாடுகளை உடனடியாக தீர்க்குமாறு உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.
இந்தியாவின் முதன்மையான தொழில்நுட்ப நிறுவனங்கள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 பொறியியல் கல்லூரிகளில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது மாநிலத்தில் தொழில்நுட்பக் கல்வியின் தரம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆய்வில், போதுமான உள்கட்டமைப்பு இல்லாதது முதல் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கல்வித் தரத்தை பூர்த்தி செய்யாதது வரை பல பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த கற்பித்தல் பணியாளர்கள் பற்றாக்குறை, போதுமான ஆய்வக வசதிகள், காலாவதியான பாடத்திட்டங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) போன்ற அமைப்புகளால் நிர்ணயிக்கப்பட்ட அங்கீகாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியது ஆகியவை குறைபாடுகளில் அடங்கும். சில கல்லூரிகளில் காலாவதியான நூலகங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாதது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக, தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. கல்லூரிகளில் நிலவும் இந்த குறைபாடுகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் என்று கல்வி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த குறைபாடுகளை உடனடியாக தீர்க்குமாறு உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உயர்த்தப்படவுள்ள ரெயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.
- ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்று காட்பாடி செல்ல ரெயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரெயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது…
AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரெயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.
ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
இந்திய ரெயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல கட்டங்களாக பிரசார சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதற்கு திட்டங்கள் தயாராகி வருகிறது.
- விஜய் சுற்றுப்பயணத்திற்காக பிரச்சார வேன் தயார் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சியின் அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகிறார்.
விஜய் நடித்து வந்த 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டு உள்ளார். பொதுக்குழு, செயற்குழு, கோவையில் பூத்கமிட்டி மாநாடு ஆகியவை த.வெ.க. சார்பில் அடுத்தடுத்து நடந்து முடிந்தது. கோவை பூத் கமிட்டி மாநாட்டை தொடர்ந்து கோவையில் விஜய் ரோடுஷோ நடத்தினார். நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அடுத்ததாக மதுரையில் நடந்த ரோடுஷோவிலும் ஏராளமானோர் திரண்டு வந்து விஜய்யை உற்சாகப்படுத்தினர்.
234 தொகுதிகளிலும் அடுத்ததாக 10,12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. அடுத்த கட்டமாக விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டு உள்ளார்.
சுற்றுப் பயணம் குறித்து கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட சுற்றுப் பயணத்தை வருகிற ஆகஸ்டு மாதம் டெல்டா மாவட்டத்தில் இருந்து விஜய் தொடங்க இருக்கிறார். நாகப்பட்டினத்தில் முதல் சுற்றுப் பயணத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் ஏற்கனவே இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்குதலை கண்டித்து நாகப்பட்டினத்தில் மக்கள் இயக்கம் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார். இதைத் தொடர்ந்து அவரது அரசியல் சுற்றுப் பயணமும் நாகப்பட்டினத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பல கட்டங்களாக பிரசார சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதற்கு திட்டங்கள் தயாராகி வருகிறது. விஜய் சுற்றுப்பயணத்திற்காக பிரச்சார வேன் தயார் செய்யப்பட்டு உள்ளது. பிரசாரத்தின் போது முக்கிய இடங்களில் பொதுக்கூட்டம் மற்றும் ரோடுஷோ மூலமும் மக்களை சந்திக்க இருக்கிறார்.
முதற்கட்ட சுற்றுப் பயணம் டெல்டா மாவட்டத்திலும் அடுத்த கட்டமாக கொங்கு மண்டலத்திலும் அதற்கடுத்ததாக தென்மாவட்டங்களிலும் விஜய் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி பலமாக இருந்து வருகிறது.
இருகட்சிகளும் பணபலத்துடனும், பதவி பலத்துடனும் 2026 தேர்தலை சந்திக்க இருக்கிற நிலையில் விஜய் தனது முகத்தை மூலதனமாக கொண்டு மக்களை சந்திக்க இருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
- இந்தியாவின் அரசியல் போக்கையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட புரட்சியாளர் வி.பி.சிங்.
- சிறப்புக்குரிய வி.பி.சிங் அவர்களுக்கு முதலமைச்சர் சென்னையில் வங்கக்கடலோரம் ஆளுயர சிலை வைத்து பெருமை சேர்த்தார்கள்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சாமானியர்களின் கைகளில் அதிகாரத்தை கொண்டு சேர்க்க தனக்கு கிடைத்த பிரதமர் பொறுப்பை பயன்படுத்திய சமூகநீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று!
மண்டல் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் அரசியல் போக்கையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட புரட்சியாளர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக திகழ்ந்து இந்தியாவுக்கே சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர்.
சமூகநீதி மற்றும் மதசார்பின்மையின் பக்கம் உறுதியாக நின்று ஆட்சி புரிந்து, அதன் காரணமாகவே பதவியையும் இழந்த தியாக வரலாற்றுக்கு சொந்தக்காரர்.
இத்தகைய சிறப்புக்குரிய வி.பி.சிங் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வங்கக்கடலோரம் ஆளுயர சிலை வைத்து பெருமை சேர்த்தார்கள்.
உயரிய அதிகாரப் படிக்கட்டுகளில் எளிய மக்களை ஏற்றிவிட்ட வி.பி.சிங் அவர்களின் புகழ் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணா மீதும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரின் நடவடிக்கை அடுத்தகட்டமாக பாய்ந்துள்ளது.
- திரைப்பட விழாக்களிலும், தனியாா் நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்த் திரைப்படத்துறையினரை அதிா்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் போதைப்பழக்கத்துக்கு அடிமையானது எப்படி? என்பது குறித்து அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து, கழுகு படத்தில் நடித்த பிரபல நடிகர் கிருஷ்ணா மீதும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரின் நடவடிக்கை அடுத்தகட்டமாக பாய்ந்துள்ளது.
போலீசாரின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து, திரைப்பட விழாக்களிலும், தனியாா் நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருள் பயன்படுத்தி வந்த தமிழ்த் திரைப்படத்துறையைச் சோ்ந்த மேலும் சிலா் இந்த வழக்கில் சிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தும் பட்டியலில் தமிழ் சினிமாவில் 10 பிரபல நடிகர்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மூன்றெழுத்தில் பெயர் கொண்ட முன்னணி நடிகர் ஒருவர், தான் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில் கொகைன் போதைப்பொருளை வழங்குவாராம். அவருடன் இணைந்து நடித்த நடிகைகள் கூட கொகைனுக்கு அடிமையாகி கிடப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இளம் இசையமைப்பாளர் ஒருவர் கொகைன் இல்லாமல் இரவில் தூங்கமாட்டாராம். கொகைன் உறிஞ்சினால் தான் அவருக்கு இசைஞானம் பொங்கி வருமாம்.
போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் இவர்களும் கொண்டுவரப்பட இருக்கிறார்கள். இதனால் நடிகர்-நடிகைகள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.
- தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டு நடிகர் கிருஷ்ணா தலைமறைவாகிவிட்டார்.
- வீட்டில் இருந்தவர்களிடம் சம்மன் கொடுக்கப்பட்டது.
நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து, கழுகு படத்தில் நடித்த பிரபல நடிகர் கிருஷ்ணா மீதும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரின் நடவடிக்கை அடுத்தகட்டமாக பாய்ந்துள்ளது. இவர் முன்னணி இயக்குனரான விஷ்ணுவர்தனின் தம்பி ஆவார். கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர்.
இதனால் தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டு நடிகர் கிருஷ்ணா தலைமறைவாகிவிட்டார். அவர் கேரளாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கிருஷ்ணா உடனடியாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர். போலீசார் நேற்று சம்மன் கொடுக்க சென்றபோது, கிருஷ்ணா வீட்டில் இல்லை. அவரது வீட்டில் இருந்தவர்களிடம் சம்மன் கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- உங்கள் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்கள் போல கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது.
- மஞ்சள் காமாலைக்காரர் கண்களுக்கு அத்தனையும் மஞ்சளாகத் தெரிவது போல.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கண்களுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்து, அம்பலப்பட்டு, சிறை சென்றுவந்த திமுக எம்பி ஆ. ராசா, நாட்டிற்காக நேர்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தரக்குறைவாக விமர்சித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை, ஆ. ராசா அவர்களே! உங்கள் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்கள் போல கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது.
கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகளின் புகலிடமாகத் தமிழகம் மாறியதற்கு முழு முதற்காரணம் உங்கள் திராவிட மாடல் அரசு, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனைக் கட்சிப் பொறுப்பில் வைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்த அரசு உங்கள் விடியா அரசு, தமிழகத்தில் ஆயுதக் கலாச்சாரம் வேரூன்றி வளர்வதை வேடிக்கை பார்க்கும் அரசு உங்கள் விளம்பர மாடல் அரசு, கர்ப்பிணிப் பெண்ணைக் காவல் நிலையத்திலேயே வைத்துக் கொடூரத் தாக்குதல் நடத்திய அரசு உங்கள் கொடுங்கோல் அரசு. இப்படி பொதுமக்களின் பாதுகாப்பை முழுவதுமாக அடகுவைத்த நீங்கள், இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டின் பாதுகாப்பை மொத்தமாகக் கட்டிக் காக்கும் மத்திய உள்துறை அமைச்சரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
அதுசரி, திமுக ஆட்சியில் தமிழகத்தின் அவல நிலை குறித்து எதுவும் தெரியாமல், "நாம் தான் நம்பர் 1 முதல்வர்" என்ற மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒருவரை தலைவராகக் கொண்ட மூடர் கூட்டத்திற்கு அனைவரும் முட்டாளாகத் தான் தெரிவார்கள். மஞ்சள் காமாலைக்காரர் கண்களுக்கு அத்தனையும் மஞ்சளாகத் தெரிவது போல. உங்கள் கீழ்த்தரமான ஆணவமிக்க அரசியல் நாகரிகமற்ற பேச்சுக்களுக்கு, தமிழக மக்கள் உங்களை 2026-க்குப் பிறகு அரசியலை விட்டே துரத்திவிடுவது உறுதி என்று கூறியுள்ளார்.






