என் மலர்
சென்னை
- வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
- இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செல்வப்பொருந்தகையை சமூக ரீதியான உணர்வுடன் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர், வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. திருப்பெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை விழாவில் பங்கேற்க வந்துள்ளார்.
ஆனால், அங்கு பணியில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவரை சமூக ரீதியான உணர்வுடன் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர். ஆகம விதிகள் என்ற பெயரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரையே அவமரியாதையாக நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதே நிகழ்வில் பங்கேற்ற வேறு சில கட்சிகளின் தலைவர்களுக்கு அனைத்து விதமான மரியாதைகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கு. செல்வப்பெருந்தகைக்கு உரிய மரியாதை அளிக்கப்படாதது ஏன் என்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் முன் பதில் அளித்திட வேண்டும்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் உடனடியாக உரிய விசாரணைகள் நடத்தி இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.
- விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.
எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என விஜய் கூறினார்.
- 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிப்பு.
- தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு.
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அதற்குரிய மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். முழுமையாக பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
- முடிவுற்ற பணிகள் குறித்தும் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வந்தார்.
- நாடு போற்றுகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா சிறப்புடன் நிறைவேறியது.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்வழிகாட்டுதலின்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பெருந்திட்ட வரைவு மூலமாக கோவிலின் வளர்ச்சி மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டு, பெருந்திட்ட வரைவு பணிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தும், பல்வேறு துறைசார்ந்த கலந்தாய்வு கூட்டங்களில் இத்திட்டத்தின் நிலைக்குறித்தும், முடிவுற்ற பணிகள் குறித்தும் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கியும் வந்தார்.
அதனை தொடர்ந்து, நேற்று (7-ந்தேதி) வரலாற்று சிறப்புமிக்க நாடு போற்றுகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா சிறப்புடன் நிறைவேறியது. திராவிட மாடல் ஆட்சியில் மேலும் ஒரு மைல்கல், 'எல்லார்க்கும் எல்லாம்' என ஆட்சி புரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்து சமய அறநிலையத் துறையும் பொதுமக்களும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவிப்பு.
- தமிழ்நாட்டில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் ஆதரவு.
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் "No Work, No Pay" என்ற அடிப்படைபில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
- இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21ஆம் தொடங்குகிறது.
- கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை வழங்குவார் எனத் தகவல்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 18ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இக்கூட்டம் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் சென்னை அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
2025ஆம் ஆண்டின் இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
- தி.மு.க. அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
- நீண்டநாள் கோரிக்கையான பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசுப்பள்ளிகளில் ஓவியம், இசை, உடற்கல்வி மற்றும் கணினி பாடங்களை பயிற்றுவிக்க நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் என்ற நீண்டநாள் கோரிக்கையை ஏற்க மறுத்து அவர்கள் மீது அடக்கு முறையை ஏவியிருக்கும் தி.மு.க. அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்த பின்பும் அவற்றை நிறைவேற்ற மறுப்பதும், ஒவ்வொரு போராட்டத்தின் போதும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதும் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதி ஆகும்.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இது ஜனநாயக நாடு, மக்களுடன்தான் தானும் வசிக்கிறோம் என்ற எண்ணம் அமைச்சருக்கு வரவேண்டும்.
- அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள்.
சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:-
பதவியில் இருக்கிறோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பொன்முடி பேசிவிட முடியுமா?. ஒரு நபரை கொலை செய்துவிட்டு நான் கொலை செய்ய விரும்பவில்லை என்று கூற முடியுமா? சைவம் வைணவம் பிரிவுகள் தொடர்பாக இஷ்டம் போல் கருத்து தெரிவிப்பது சரியா?
இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது. இது ஜனநாயக நாடு, மக்களுடன்தான் தானும் வசிக்கிறோம் என்ற எண்ணம் அமைச்சருக்கு வரவேண்டும்.
இதுபோல பேசும் நபர்களின் வாயை கட்டுப்படுத்த இந்த நீதிமன்றம் விரும்புகிறது. மனுதாரர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்களின் இதுபோன்ற பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசியல்வாதிகளும் அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆரம்பகட்ட விசாரணை என்பது புகாரில் குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா இல்லையா என்பது குறித்து விசாரிப்பது தான். அதன் பிறகு வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கின் முடிவை நீதிமன்றம் தீர்மானிக்கும் என்று தெரிவித்த நீதிபதி, வேண்டாதவர்களுக்கு எதிராக புகார் வந்தால் அதில் முகாந்திரம் உள்ளதாக கூறும் நிலையில், ஆதரவாளர்கள் என்றால் முகாந்திரம் இல்லை என்று கூறுகிறீர்கள். ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி தீர்ப்பு எழுத முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
- தனியார் கட்டிடங்களுக்கு அதிகமான வரி வசூல் முறைகேடுகள் நடந்துள்ளது.
- இனி எதிர்காலத்தில் ஊழல் செய்யாமல் இருப்பதற்கான வழிகாட்டியாக இருக்கும்.
சென்னை:
மதுரை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தனியார் கட்டிடங்களுக்கு அதிகமான வரி வசூல் முறைகேடுகள் நடந்துள்ளது. ஆட்ட கடிச்சு, மாட்ட கடிச்சு, கடைசில மனுஷனையே கடிச்ச கதையாக ஒரு அளவே இல்லாமல் ஊழல் போனதன் விளைவாக மதுரை மாநகராட்சி முழுவதும் அனைத்து வார்டுகளிலும் ஊழல் நடந்தது இன்றைக்கு வெட்ட வெளிச்சமாக வந்திருக்கிறது. அனைவரையும் ஒரே நேரத்தில் பதவி நீக்கம் செய்த முதலமைச்சரின் செயல்பாடு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு இணையாக கருதப்படுகிறது.
அவர்கள் ஊழல் செய்த பணத்தை மீண்டும் மதுரை மாநகராட்சியே திரும்ப வசூல் செய்ய வேண்டும். அப்போதுதான் இனி எதிர்காலத்தில் ஊழல் செய்யாமல் இருப்பதற்கான வழிகாட்டியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக் கிடக்கின்றன.
- ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு:-
* அஸ்தினாபுரம் பகுதி வாழ் மக்களின் நிலத்தடி நீருக்கு மிகுந்த ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவு நீர் தங்கு தடையின்றி கலப்பதால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் தோல் வியாதிகள் உள்ளிட்ட எண்ணற்ற சுகாதார சீர்கேடுகளால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
* நெமிலிச்சேரி ஏரி முழுவதும் வளர்ந்திருந்த ஆகாயத் தாமரை கொடிகளை பொதுமக்கள் ஒன்று கூடி மிகுந்த சிரமங்களுக்கு இடையே அகற்றினர். ஆனால், ஆளுங்கட்சியின் அலட்சியத்தாலும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், இந்த ஏரி மீண்டும் ஆகாயத் தாமரை கொடிகளால் சூழப்பட்டு கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளது.
* அஸ்தினாபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முறையாக மேற் கொள்ளாத காரணத்தால், பெரும்பாலான இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ஆறுபோல் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக, பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்களும், பலவித இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
* குரோம்பேட்டை கணபதிபுரம் சுடுகாடு எவ்வித பராமரிப்பும் இல்லாத காரணத்தால், தகன மேடையின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், உயிர் நீத்தோருக்கான இறுதிச் சடங்குகளை மக்கள் மிகவும் அச்சத்துடன் செய்து வருகின்றனர்.
* அஸ்தினாபுரம் பகுதியில் நாள்தோறும் 5 எண்ணிக்கையில் மினி பஸ்கள் இயங்கி வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
* இப்பகுதி முழுவதும் முறையாக குப்பைகள் அள்ளப்படாத காரணத்தால், அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் பரவிக் கிடக்கின்றன. இதனால், பொது சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான, மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், அஸ்தினாபுரம் பகுதிக் கழகத்தின் சார்பில் வருகிற 11-ந் (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணியளவில், ஜமீன் ராயப்பேட்டை, ஸ்ரீபட வேட்டம்மன் கோவில் சந்திப்பு அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயககுமார் தலைமையிலும்; செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பள்ளி வேன் மீது ரெயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ - மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
- விபத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ - மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இந்த மழலைகளின் மரணம் ஆற்றொணா துயரையும் வேதனையையும் தருகிறது.
இவ்விபத்தில் படுகாயமுற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உரிய சிகிச்சைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விபத்தில் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுமாதிரியான விபத்துகள் இனியும் தொடராத வகையில் அனைத்து தரப்பிலிருந்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடலூர் தனியார் பள்ளி வாகனம் மீது ரெயில் மோதி மாணவர்கள் உயிரிழப்பு எனும் தகவல் அறிந்து மனம் வேதனை அடைகிறது.
- பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் துயரத்தில் பள்ளிக் கல்வித்துறை பங்கெடுத்துக்கொள்கிறது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கடலூர் தனியார் பள்ளி வாகனம் மீது ரெயில் மோதி மாணவர்கள் உயிரிழப்பு எனும் தகவல் அறிந்து மனம் வேதனை அடைகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் துயரத்தில் பள்ளிக் கல்வித்துறை பங்கெடுத்துக்கொள்கிறது.
காயமடைந்த மாணவர்கள் மீண்டுவர அனைத்து வகையிலும் உதவிசெய்ய காத்திருக்கிறோம். உயிரிழந்த பிஞ்சுகளின் பெற்றோர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், சக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






