என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வரி முறைகேட்டில் ஊழல் செய்த பணத்தை மதுரை மாநகராட்சியே திரும்ப வசூல் செய்ய வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை
- தனியார் கட்டிடங்களுக்கு அதிகமான வரி வசூல் முறைகேடுகள் நடந்துள்ளது.
- இனி எதிர்காலத்தில் ஊழல் செய்யாமல் இருப்பதற்கான வழிகாட்டியாக இருக்கும்.
சென்னை:
மதுரை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் தனியார் கட்டிடங்களுக்கு அதிகமான வரி வசூல் முறைகேடுகள் நடந்துள்ளது. ஆட்ட கடிச்சு, மாட்ட கடிச்சு, கடைசில மனுஷனையே கடிச்ச கதையாக ஒரு அளவே இல்லாமல் ஊழல் போனதன் விளைவாக மதுரை மாநகராட்சி முழுவதும் அனைத்து வார்டுகளிலும் ஊழல் நடந்தது இன்றைக்கு வெட்ட வெளிச்சமாக வந்திருக்கிறது. அனைவரையும் ஒரே நேரத்தில் பதவி நீக்கம் செய்த முதலமைச்சரின் செயல்பாடு கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு இணையாக கருதப்படுகிறது.
அவர்கள் ஊழல் செய்த பணத்தை மீண்டும் மதுரை மாநகராட்சியே திரும்ப வசூல் செய்ய வேண்டும். அப்போதுதான் இனி எதிர்காலத்தில் ஊழல் செய்யாமல் இருப்பதற்கான வழிகாட்டியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






