என் மலர்tooltip icon

    சென்னை

    • 2024-ம் ஆண்டு சாதிக்கட்சிகளை இணைத்து பா.ஜ.க. கூட்டணி அமைத்தது.
    • இந்த உலகத்தில் எப்படி கூட்டி கழித்தாலும் மீதம் உள்ளது அன்புதான்.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நெல்லையில் கவின் ஆணவ கொலை செய்யப்பட்டது குறித்து கூறியதாவது:-

    * 2024-ம் ஆண்டு சாதிக்கட்சிகளை இணைத்து பா.ஜ.க. கூட்டணி அமைத்தது.

    * 2024-ல் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது பாட்டாளி மக்கள் கட்சி

    * எல்லா சாதிக்கட்சிகளையும் இணைத்து ஒரு மதகட்சி தலைமை வகித்தது.

    * பா.ஜ.க. ஒரு மதவாத கட்சி என்பது தெரியும்.

    * சமபங்கு என்றால் மாளிகையில் இருப்பவர்களுக்கும், தாழ்தளத்தில் குடிசையில் இருக்கிறவங்களும் சம பங்கு என்று சொன்னால் ஏற்புடையதாக உள்ளதா?

    * நாட்டில் அடிப்படையை தகர்த்து மறுகட்டடம் கட்டணும்னு.

    * வெளிப்படையாகவே அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை தகர்த்து முற்றிலுமாக புதிய ஒரு சமூகம் படைப்பது தான் புரட்சி என்கிறார்கள். அதற்காகதான் நாங்கள் போராடுகிறோம்.

    * அதனால் தான் நாங்கள் அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் என்கிறோம். இந்த அரசியலுக்குள், இந்த அமைப்புகள் ஒன்னும் செய்யமுடியாது.

    * இந்த உலகத்தில் எப்படி கூட்டி கழித்தாலும் மீதம் உள்ளது அன்புதான் என்றார். 

    • பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
    • பிரேமலதாவை நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த நிலையில், நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதாவிற்கு நன்றி என எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி! என பிரேமலதாவை நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • கலைஞருக்கும், கேப்டனுக்கும் இடையேயான பழக்கம் நெடுங்காலமாக இருந்தது.
    • ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் தே.மு.தி.க.வின் சுற்றுப்பயணம் தொடங்கும்.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். இதையடுத்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

    * 100 சதவீதம் மரியாதை நிமித்தமாகவும், உடல்நிலை குறித்து விசாரிக்கவுமோ முதல்வரை சந்தித்தேன்.

    * கலைஞருக்கும், கேப்டனுக்கும் இடையேயான பழக்கம் நெடுங்காலமாக இருந்தது.

    * குடும்பம், நட்பு ரீதியாக அவரின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளதால் தான் முதலமைச்சரை சந்தித்து உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தேன்.

    * முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேப்டன் சார்பாகவும் தே.மு.தி.க. சார்பாகவும் சந்தித்து நலம் விசாரித்தேன்.

    * தே.மு.தி.க.வை பலப்படுத்தும் பணியில்தான் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.

    * ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் தே.மு.தி.க.வின் சுற்றுப்பயணம் தொடங்கும்.

    * கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்போம்.

    * 2026 ஜன.9-ல் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாடு மற்றும் கட்சியை வலுப்படுத்துவதே தற்போதைய நோக்கம்.

    * யாருடன் யார் கூட்டணி என தற்போது கூற முடியாது. இன்னும் நேரம் உள்ளதால் சரியான நேரத்தில் அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடல் நலன் சீரானதை தொடர்ந்து கடந்த 27-ந்தேதி அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனார்.
    • அடையாரில் நடைபயிற்சி முதலமைச்சர் நடைபயிற்சி மேற்கொண்டபோது அவரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து உள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 21-ந் தேதி காலை நடைபயிற்சியின்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    முதலமைச்சருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு 'ஆஞ்சியோ' சிகிச்சையும் அளிக்கப்பட்டது. உடல் நலன் சீரானதை தொடர்ந்து கடந்த 27-ந்தேதி அவர் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' ஆனார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலையில் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை அடையாரில் நடைபயிற்சி முதலமைச்சர் நடைபயிற்சி மேற்கொண்டபோது அவரை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து உள்ளார்.

    முதலமைச்சரை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். சுமார் 2 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.

    • ஆலோசனையில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
    • த.வெ.க.வுடன் ஓ.பி.எஸ். தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ். இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசித்து வருகிறார்.

    த.வெ.க.வுடன் ஓ.பி.எஸ். தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

    சென்னையில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன் என்று நேற்று ஓ.பி.எஸ். கூறியிருந்த நிலையில் ஆலோசனைக்கு பிறகு கூட்டணி குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நெல்லையில் நடைபெற்ற ஆணவக் கொலை அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
    • FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்வதில் காவல்துறைக்கு தயக்கம் ஏன்?

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * நெல்லையில் நடைபெற்ற ஆணவக் கொலை அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

    * சுர்ஜித், அவரது தாய், தந்தை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    * FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை கைது செய்வதில் காவல்துறைக்கு தயக்கம் ஏன்?

    * சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.

    * சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையுடன் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார். 

    • முதலமைச்சருக்கு ‘ஆஞ்சியோ’ சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • உடல் நலன் சீரானதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 21-ந் தேதி காலை நடைபயிற்சியின்போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்பதால் அவரை ஆஸ்பத்திரியில் தங்கி இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். அவருக்கு 'ஆஞ்சியோ' சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

    உடல் நலன் சீரானதை தொடர்ந்து கடந்த 27-ந்தேதி அவர் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' ஆனார்.

     

    இந்த நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்தார். அவரது உடல்நலம் குறித்து அவர் விசாரித்தார். அவருடன் பொருளாளர் சுதீஷூம் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்தார்.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது வரை எந்த கூட்டணியிலும் இணையாத பிரேமலதா தி.மு.க. கூட்டணிக்கு செல்வதற்கான அச்சாரம் தான் இந்த சந்திப்பா என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    • விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை பூந்தமல்லி அருகே தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதி 2 பேர் பலியாகினர்.

    சென்னீர்குப்பத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு சென்னை நோக்கி சென்ற தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்ற இளைஞர் மற்றும் ஒரு பெண் மீது மோதியது.

    இந்த விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தேவி என்ற பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    தண்ணீர் லாரி ஓட்டுநரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள், ஓட்டுநர் போதையில் இருந்ததே விபத்திற்கு காரணம் என குற்றம்சாட்டினர்.

    விபத்தை ஏற்படுத்திய தண்ணீர் லாரி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி என தகவல் வெளியாகி உள்ளது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,680-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை விலை மாற்றமின்றியும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்தும், நேற்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,680-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,170-க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,360-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 125 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    30-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

    29-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200

    28-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    27-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    26-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,280

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    30-07-2025- ஒரு கிராம் ரூ.127

    29-07-2025- ஒரு கிராம் ரூ.126

    28-07-2025- ஒரு கிராம் ரூ.126

    27-07-2025- ஒரு கிராம் ரூ.126

    26-07-2025- ஒரு கிராம் ரூ.126

    • ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி.
    • “ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது” மிகப் பெரிய துரோகம்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க- பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை என்று பேசி இருந்தார். இதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பின் நான்கு முறை, அதாவது இருபது ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமைத்த பெருமைக்குரியவர் முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்திய பெருமையும் அம்மா அவர்களுக்கு உண்டு. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் "இரட்டை இலை" சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்த பெருமைக்குரியவர் அம்மா.

    இப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உச்ச நிலைக்கு அழைத்துச் சென்ற அம்மா அவர்களை குறை சொல்லும் விதமாக "பாஜக கூட்டணி முறிவு" என்ற வரலாற்று பிழையை அம்மா அவர்கள் செய்துவிட்டார்கள் என்று அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட கடம்பூர் ராஜூ அவர்கள் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நலன் கருதி அம்மா அவர்கள் பா.ஜ.க. கட்சி கூட்டணியிலிருந்து விலகியதால்தான், 2001 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அம்மா அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்கள். இந்த வரலாறு தெரியாமல் கடம்பூர் ராஜூ பேசியிருப்பது அவரின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    அம்மா அவர்கள் செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தது. ஆனால், அம்மா அவர்களால் சட்டமன்ற உறுப்பினராக்கப்பட்ட, அமைச்சராக்கப்பட்ட கடம்பூர் ராஜு அவர்களின் பேச்சுதான் வரலாற்றுப் பிழை.

    "மோடியா, இந்த லேடியா" பார்த்துவிடலாம் என்று சவால்விட்டு, 37 தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற காரணமாக இருந்த இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை கடம்பூர் ராஜூ அவர்கள் குறை சொல்வதைப் பார்க்கும்போது "வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது" என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. அம்மா அவர்களை குறை சொல்வது என்பது "உண்ட வீட்டுக்கு இரண்டகம்" செய்வதைப் போன்றது.

    "ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது" மிகப் பெரிய துரோகம் என்பதை உணர்ந்து, தான் செய்த செயலுக்கு கடம்பூர் ராஜூ அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதற்குத் தக்க பாடத்தினை தமிழக மக்கள் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 தேர்தலிலும் இருக்கும் ஒற்றுமை என்றால், பலமான ஆளும் கட்சியை வீழ்த்தி புதிய சக்தி ஆட்சி பீடத்தில் அமர்ந்தது.
    • தி.மு.க.வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை 1972-ம் ஆண்டு தொடங்கினார்.

    சென்னை:

    விஜய் சொல்லும் 1967, 1977-ம் ஆண்டு தேர்தல்களில் என்ன நடந்தது? த.வெ.க. கனவு, நனவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    த.வெ.க. தலைவர் விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி வெளியிடும் கூட்டத்தில் நேற்று பேசும் 1967 மற்றும் 1977 சட்டமன்ற தேர்தல்களை போல, வருகிற 2026 தேர்தலும் அமைய போகிறது என்று பேசினார். அவரது பேச்சால் அந்த தேர்தல்களில் எந்த நடந்தது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதில் 1967-ம் ஆண்டு தி.மு.க. முதல் முறையாக வெற்றி பெற்று அண்ணா முதலமைச்சர் ஆனார். 1977-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. முதல் முறையாக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனார். இந்த 2 தேர்தலிலும் இருக்கும் ஒற்றுமை என்றால், பலமான ஆளும் கட்சியை வீழ்த்தி புதிய சக்தி ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. அந்த அடிப்படையில் தான் விஜய், 2026-ம் ஆண்டு தேர்தலில் த.வெ.க. ஆட்சி அமைக்கும் என்பதை அவர் கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்து குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது:- ஒரு கட்சி தலைவர், தங்களது கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று சொல்வது முதலில் தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுக்க தான். அந்த வகையில் தான் விஜய்யும் பேசி இருக்கிறார். எனவே அவரது பேச்சினை வைத்து த.வெ.க. ஆட்சியை பிடிக்குமா? என்று கேட்டால், அதனை மக்கள் தான் முடிவு செய்ய முடியும்.

    விஜய் சொன்ன, இந்த தேர்தல்களையும், 2026-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் 1967-ம் ஆண்டு தேர்தல் மூலம் முதலமைச்சர் ஆன அண்ணா, ஒரு பழுத்த அரசியல்வாதி. அவர் 1909-ம் ஆண்டு பிறந்து 1935-ம் ஆண்டு அதாவது தனது 26-வது வயதில் நீதி கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பின்னர் திராவிடர் கழகத்தில் பயணித்து 1949-ம் ஆண்டு, அதாவது தனது 40 வயதில் தி.மு.க.வை தொடங்கினார். தி.மு.க. 1952-ம் ஆண்டு நடந்த முதல் பாராளுமன்றம், சட்டசபை தேர்தலில் பங்கேற்கவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலில் தான் பங்கேற்றது. முதல் முறை போட்டி என்பதால் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இருப்பினும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றனர். பின்னர் 1962-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தில் 7 தொகுதிகளிலும், சட்டசபையில் 50 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். 1967-ம் ஆண்டு தேர்தலில் பாராளுமன்றத்தில் 25 தொகுதிகளிலும், சட்டசபையில் 234 தொகுதிகளில் 137 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். அண்ணா, முதலமைச்சர் ஆனார். அவர் தனது 58 வயதில் ஆட்சியை பிடித்தார்.

    இதேபோல் தி.மு.க.வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை 1972-ம் ஆண்டு தொடங்கினார். தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சியை கட்டமைத்தார். 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அவர் சட்டசபை தேர்தலில் 130 இடங்களிலும், பாராளுமன்றத்தில் 21 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றார்.

    எம்.ஜி.ஆருக்கு அ.தி.மு.க. என்ற சட்டை புதிது என்றாலும், அரசியலில் அவர் பழையவர். காந்தி மீது கொண்ட ஈடுபாட்டால் தனது இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1953-ம் ஆண்டு அதாவது தனது 36 வயதில் தி.மு.க.வில் சேர்ந்தார். 1962, 1967 மற்றும் 1971-ம் ஆண்டு தேர்தல்களில் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

    அண்ணாவும், எம்.ஜி.ஆரும் பல ஆண்டுகள் அரசியலில் இருந்து, பல தேர்தல்களை சந்தித்து ஆட்சியை பிடித்தனர். ஆனால் விஜய், அரசியலுக்கு வந்து 2 ஆண்டுகள் முழுமையாக முடிவடையவில்லை. அவர் சினிமாவின் உச்ச நடிகர். மக்களுக்கு தெரிந்த முகம். ஆனால் தேர்தல் வெற்றிக்கு இது மட்டும் போதாது. கட்சியின் கட்டமைப்பும், தேர்தலை எதிர்கொள்ளும் திறனும் வலுவாக இருக்க வேண்டும். ஆனால் அவற்றை த.வெ.க. இன்னும் முழுமையாக பூர்த்தி செய்ய வில்லை.

    தேர்தலின்போது ஆட்சி என்பது அனைவருக்கும் கனவு. அது த.வெ.க.விற்கு நனவாகுமா? என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எனவே விஜய், அந்த தேர்தலைகளை ஒப்பிடும்போது, அந்த தலைவர்கள் வெற்றி எப்படி சாத்தியமானது என்பதனையும், அவர்களது மக்கள் பணியினையும், அரசியல் அனுபவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகும்.
    • கடல் சார்ந்த அலைவுகளின் தாக்கம் இந்திய பெருங்கடலில் காணப்படுகிறது.

    சென்னை:

    டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தில் இயல்பிற்கு எஞ்சிய மழைப்பொழிவு பதிவாகும். குறிப்பாக முதல் இரண்டு வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகும்.

    கடல் சார்ந்த அலைவுகளின் தாக்கம் இந்திய பெருங்கடலில் காணப்படுகிறது. குறிப்பாக ராஸ்பி அலைவின் காரணமாக தெற்கு வங்ககடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்று சுழற்சி உருவாக கூடும்.

    இச்சுழற்சி மிகமெதுவாக வடதமிழகம் & தெற்கு ஆந்திர கடலோரம் நோக்கி நகரக்கூடும்.

    இதன் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தின் வடகடலோரம், வடக்கு உள்மாவட்டங்கள், டெல்டா, மத்திய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் என ஒட்டுமொத்த மாநிலத்திலும் பரவலாக வெப்பச்சலன இடிமழை தீவிரமடைந்து மழைப்பொழிவை கொடுக்கும் என்று கூறியுள்ளார். 



    ×