என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாஜக ஒரு மதவாத கட்சி... பாமக ஒரு சாதிக்கட்சி - சீமான் கடும் தாக்கு
- 2024-ம் ஆண்டு சாதிக்கட்சிகளை இணைத்து பா.ஜ.க. கூட்டணி அமைத்தது.
- இந்த உலகத்தில் எப்படி கூட்டி கழித்தாலும் மீதம் உள்ளது அன்புதான்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நெல்லையில் கவின் ஆணவ கொலை செய்யப்பட்டது குறித்து கூறியதாவது:-
* 2024-ம் ஆண்டு சாதிக்கட்சிகளை இணைத்து பா.ஜ.க. கூட்டணி அமைத்தது.
* 2024-ல் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது பாட்டாளி மக்கள் கட்சி
* எல்லா சாதிக்கட்சிகளையும் இணைத்து ஒரு மதகட்சி தலைமை வகித்தது.
* பா.ஜ.க. ஒரு மதவாத கட்சி என்பது தெரியும்.
* சமபங்கு என்றால் மாளிகையில் இருப்பவர்களுக்கும், தாழ்தளத்தில் குடிசையில் இருக்கிறவங்களும் சம பங்கு என்று சொன்னால் ஏற்புடையதாக உள்ளதா?
* நாட்டில் அடிப்படையை தகர்த்து மறுகட்டடம் கட்டணும்னு.
* வெளிப்படையாகவே அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை தகர்த்து முற்றிலுமாக புதிய ஒரு சமூகம் படைப்பது தான் புரட்சி என்கிறார்கள். அதற்காகதான் நாங்கள் போராடுகிறோம்.
* அதனால் தான் நாங்கள் அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் என்கிறோம். இந்த அரசியலுக்குள், இந்த அமைப்புகள் ஒன்னும் செய்யமுடியாது.
* இந்த உலகத்தில் எப்படி கூட்டி கழித்தாலும் மீதம் உள்ளது அன்புதான் என்றார்.






