என் மலர்
சென்னை
- காக்கும் கடவுளாம் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடப்படுகிறது.
- மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காக்கும் கடவுளாம் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்றும்; 'கோகுலாஷ்டமி' என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் இந்த நன்னாளில், மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
குழப்பத்தையும், தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலைநிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று எல்லா சுகங்களும், மன நிம்மதியும் கிடைக்கப் பெற்றவராய் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடலாம்' என்கிற கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில்கொண்டு, கிருஷ்ண பகவான் அவதரித்த இத்திருநாளில், ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிட உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.9,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையில் 3-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 6-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதிக்கு பிறகு விலை சரிவடைந்து வந்த நிலையில் மீண்டும் இந்த உச்சத்தை தொட்டது.
அதன் தொடர்ச்சியாகவும் விலை குறையாமல் ஏறுமுகத்திலேயே பயணித்தது. இதனால் கடந்த 8-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.
இந்த வார தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை சற்று குறைய தொடங்கியது. திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.560 குறைந்து சவரன் ரூ.75,000-க்கும், செவ்வாய் கிழமை ரூ.640 குறைந்து 74,360-க்கும், புதன்கிழமை ரூ.40 குறைந்து ரூ.74,320-க்கும், வியாழக்கிழமை விலையில் மாற்றம் இல்லாமல் சவரன் ரூ.74,320-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.74,240-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.9,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 வரை குறைந்துள்ளது.
வெள்ளி விலையில் 3-வது நாளாக இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி விலை 127 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
15-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,240
14-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
13-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
12-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
11-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
15-08-2025- ஒரு கிராம் ரூ.127
14-08-2025- ஒரு கிராம் ரூ.127
13-08-2025- ஒரு கிராம் ரூ.126
12-08-2025- ஒரு கிராம் ரூ.126
11-08-2025- ஒரு கிராம் ரூ.127
10-08-2025- ஒரு கிராம் ரூ.127
- மாநாடு 21-ந் தேதி நடைபெறும் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தார்.
- த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள சூழ்நிலையில் முதன் முறையாக தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. அந்த வகையில் வரும் 25-ந்தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மாநாடு 4 நாட்களுக்கு முன்னதாக 21-ந் தேதி நடைபெறும் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தார்.
த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களில் விஜய் பலத்தை நிரூபிக்க நடத்தப்படும் த.வெ.க. 2-வது மாநில மாநாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டு பணிகளுக்காக மேலும் 5 குழுக்கள் அமைத்து கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
- சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் சோதனை.
சென்னை:
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்து வருபவர் ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஐ.பெரியசாமி தி.மு.க. துணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழும் இவர் ஏற்கனவே கூட்டுறவு துறை, வருவாய் துறை பொறுப்புகளையும் அமைச்சரவையில் வகித்து உள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவரது அறை ஆகிய இடங்களுக்கு இன்று காலை 6 மணி அளவில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதே போன்று திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள ஐ.பெரியசாமியின் வீட்டுக்கு இன்று காலையில் 3 கார்களில் சென்ற 10 அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐ.பெரியசாமியிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ள வந்திருப்பதாக தெரிவித்த அதிகாரிகள் சோதனையை தொடங்கிய பிறகு வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஐ.பெரியசாமியின் வீட்டில் இருந்தும் யாரையும் வெளியே செல்வதற்கும் அனுமதிக்கவில்லை.
ஐ.பெரியசாமியின் மகனும், பழனி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.செந்தில் குமாரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்து வரும் ஐ.பி.செந்தில் குமார், திண்டுக்கல் சீலப்பாடியில் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவரது வீட்டுக்கும் இன்று காலையில் சென்ற அதிகாரிகள் தீவிர சோத னையில் ஈடுபட்டனர். ஐ.பெரியசாமியின் மகள் பெயர் கவிதா. இவர் திருமணமாகி திண்டுக்கல் கோவிந்தாபுரம் வள்ளலார் நகரில் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. வத்தலக்குண்டில் உள்ள ஐ.பெரியசாமிக்கு சொந்தமான அரிசி ஆலையிலும் சோதனை நடந்தது.
சென்னையில் 2 இடங்கள் மற்றும் திண்டுக்கல்லில் 4 இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதையொட்டி சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் வீட்டில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர்.
இதையடுத்து வீட்டு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. ஐ.பெரியசாமி வீட்டு முன்பு திரண்ட தி.மு.க.வினர் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள்.
கடந்த 2008-ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அதே நேரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. சட்ட விரோதமாக பணபரிமாற்றங்களை மேற்கொண்டு அதன் மூலமே ஐ.பெரியசாமி சொத்துக்களை குவித்திருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
தி.மு.க. அமைச்சர்கள் பலரது வீடுகளில் ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தி.மு.க. மூத்த அமைச்சர்களில் ஒருவரான ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நடத்தி வரும் சோதனை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மக்களுக்கான சேவையாற்றுவதில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.
- உங்கள் தலைமை பொது குடிமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை தொடர்ந்து வலுப்படுத்தட்டும்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
மக்களுக்கான சேவையாற்றுவதில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். உங்கள் தலைமை பொது குடிமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை தொடர்ந்து வலுப்படுத்தட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
- தமிழக ஆளுநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல.கணேசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நாகாலாந்து ஆளுநராக இருந்தவர் இல.கணேசன். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இல.கணேசன் (80), கடந்த மாதம் சென்னை வந்தார். கால் பாதத்தில் ஏற்பட்ட புண் காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வீடு திரும்பினார்.
கடந்த 5-ந்தேதி, கால் மரத்துப்போன நிலையில் வீட்டில் மயங்கி விழுந்த இல.கணேசனை, அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். தொடர்ந்து கடந்த 8-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. எனவே அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல், ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல.கணேசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
- தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் 32 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார் இல.கணேசன்.
- அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
சென்னை:
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80. தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2021-ம் ஆண்டில் மணிப்பூர் ஆளுநராக பதவி வகித்தார்.
இல.கணேசன் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பா.ஜ.க. உள்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இல கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில் கூறியுள்ளதாவது:
நாகாலாந்து மாநில ஆளுநரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான இல.கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும் கடுமையாக உழைத்தவர். அனைத்துத் தரப்பு மக்களிடமும் பரவலாக அறியப்பட்டவர். எளிமையான மனிதர். ஆழ்ந்த சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர்.
இல.கணேசன் மறைவு தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி! என பதிவிட்டுள்ளார்.
- நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன்.
- அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தற்போது தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் அங்கு குழுமியுள்ளனர்.
முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஆளுநர் ரவி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன்.
இளம் வயதிலிருந்தே, எளிமையுடனும் பணிவுடனும், தன்னலமற்ற சேவைகளுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் நாகாலாந்து மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என்று தெரிவித்துள்ளார்.
- தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது
- அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்.
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தற்போது தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் அங்கு குழுமியுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டியவர். மாண்புடன் நடந்து கொண்டு அரசியல் நாகரீகம் பேணிக்காத்தவர்.
அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்" என முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- "சிபிஎஸ்இ கிளஸ்டர்" என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.
- 14,16,17 ஆகிய வயது பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தென் இந்திய சிபிஎஸ்இ விளையாட்டு கூட்டமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு சிபிஎஸ்சி பள்ளிகளை ஒன்றிணைத்து "சிபிஎஸ்இ கிளஸ்டர்" என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சிபிஎஸ்இ கிளஸ்டரின் 6 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் சென்னை கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ள ராமச்சந்திரா பப்ளிக் பள்ளியில் இறகு பந்து போட்டிகள் நடைபெற்றது.
புதுச்சேரி, அந்தமான் மற்றும் தமிழகத்தில் உள்ள சுமார் 500 கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் அடங்கிய 14,16,17 ஆகிய வயது பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் ஆண்கள் அணியில் 14 வயது பிரிவில் சச்சிதாநந்தா ஜோதி பள்ளியும், 17 வயது பிரிவில் ஜெயின் பப்ளிக் பள்ளியும்,19 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும் வெற்றி பெற்றது.
அதே போன்று பெண்கள் அணியில் 14 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும், 17 வயது பிரிவில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியும், 19 வயது பிரிவில் ஒஎன்ஜிசி பள்ளியும் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் கோப்பையையும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் இந்திய அளவில் நடைபெறும் இறகு பந்து போட்டியில் பங்கு பெறுவார்கள், என சிபிஎஸ்இ விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் தெரிவித்தனர்.
- 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
- மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.
சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த இவர், தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
பாஜக மாநில தலைவராகவும் இவர் இருந்துள்ளார். இதன்பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அவருக்கு வீடு உள்ளது. அண்மையில் சென்னைக்கு வந்திருந்த அவர் தனது வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.






