என் மலர்tooltip icon

    சென்னை

    • பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
    • நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

    சென்னை :

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

    "மக்களுக்கான அரசு" என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறி போகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஆகும்.

    தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். குழந்தையை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.

    மேலும், இந்தக் குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாகப் பிரசவ வார்டுகளில், எவராலும் ஊடுருவ முடியாத அளவிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதை உறுதி செய்ய, பயோ-மெட்ரிக் முறை அல்லது அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.



    • காங்கிரசில் ராகுல் காந்தி, கார்கே, செல்வப்பெருந்தகை கேட்டால் பதில் சொல்லலாம்.
    • எல்லோரும் கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது. இவர்கள் 3 பேர்தான் அத்தாரிட்டி.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- தி.மு.க. தோல்வி பயம் காரணமாக ரூ.5 ஆயிரம் கொடுத்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்களே?

    பதில்:- எதிர்க்கட்சிகள் அப்படித்தான் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. நாங்கள் இப்போது கொடுக்கவில்லை.

    மாதம் தோறும் ரூ.1000 கொடுக்கிறோம். அ.தி.மு.க. பா.ஜ.க. வுடன் சேர்ந்து கொண்டு இந்த திட்டத்தை தடுக்க சதி திட்டம் தீட்டினார்கள்.

    அந்த சதி திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்ததால் அதற்கு தடை வாங்கி விடக்கூடாது என்பதற்காக முன் கூட்டியே பணத்தை கொடுத்துள்ளார்.

    கே:- தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியம் இல்லை என்று முதலமைச்சர் அறிவித்த பிறகும் ஒருசில காங்கிரஸ் தலைவர்கள் அது தொடர்பாக மீண்டும் பேசுகிறார்களே?

    ப:- நாளையில் இருந்து யாரும் பேசமாட்டார்கள். 5 ஆயிரம் ரூபாய் கொடுத்த பிறகு மக்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பது எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியும். அதனால் இனி பேசமாட்டார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார். கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் கிடையாது என்பதை தெளிவுபடுத்திவிட்டார். ராகுல்காந்தி முதல் மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

    காங்கிரசில் ராகுல்காந்தி, கார்கே, செல்வப்பெருந்தகை கேட்டால் பதில் சொல்லலாம். எல்லோரும் கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது. இவர்கள் 3 பேர்தான் அத்தாரிட்டி.

    ஆட்சியில் பங்கு என்று கேட்டவர்கள் அனைவரும் இப்போது சீட் கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

    கே: திருச்சி மாநாட்டில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்பார்களா?

    ப: தலைவர் அது பற்றி சொல்வார் என்றார்.

    • பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர்.
    • தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

    சென்னை:

    த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கழகத் தோழர்களுக்கு வணக்கம்.

    வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர். எனவே தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

    அதன்படி, வரும் 20ஆம் தேதி (20.02.2026) வரை கழகத் தோழர்கள் தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவித்துள்ளார். 

    • வருகிற 16-ந்தேதி இதே ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 9.15 மணிக்கு வந்து சேரும்.
    • விழுப்புரம்- திருவண்ணாமலை இடையேயும் விழுப்புரம்- வேலூர் இடையேயும் முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    மகா சிவராத்திரி நாளை நடைபெறுவதால் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ் மற்றும் ரெயில்களில் செல்கிறார்கள். கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு பஸ், ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.15 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு பிற்பகல் 3 மணிக்கு சென்றடைகிறது.

    வருகிற 16-ந்தேதி இதே ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 9.15 மணிக்கு வந்து சேரும்.

    இதேபோல எழும்பூரில் இருந்து வேலூர் கண்டோண்ட்மென்ட்டுக்கு முன்பதிவு இல்லாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இந்த ரெயில் எழும்பூரில் இருந்து நாளை மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு வேலூர் சென்றடைகிறது.

    பின்னர் 16-ந்தேதி வேலூர் கண்டோண்ட்மென்ட்டில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு காலை 9.15 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த 2 ரெயில்களுக்கான முன்பதிவு இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது.

    இதே போல விழுப்புரம்- திருவண்ணாமலை இடையேயும் விழுப்புரம்- வேலூர் இடையேயும் முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    • 14 நாட்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில் எங்களை இதுவரையில் அரசு அழைத்துப் பேசவில்லை.
    • பணி புறக்கணிப்பு போராட்டத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

    சென்னை:

    டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்தப் போராட்டத்தை சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.சி. பாட்டாளி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன. டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அரசு இதுவரையில் அழைத்து பேசாததால் அடுத்த கட்டமாக 17-ந்தேதி முதல் காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். போராட்டம் குறித்த நோட்டீஸ் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் (16-ந்தேதி) இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூடி சாவியை நிர்வாகத்திடம் கொடுத்து விடுவதாகவும் 17-ந்தேதியில் இருந்து பணிக்கு செல்ல மாட்டோம் என்றும் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 4,749 டாஸ்மாக் கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மிகவும் குறைந்த சம்பளத்தில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாகும்.

    14 நாட்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில் எங்களை இதுவரையில் அரசு அழைத்துப் பேசவில்லை. அதனால் பணி புறக்கணிப்பு போராட்டத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் காலிபாட்டில் ஸ்டிக்கர்களை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் கலந்து கொள்ளுமா என்று அதன் மாநில செயலாளர் சிவகுமாரிடம் கேட்டதற்கு, இது பற்றி தலைமையிடம் கேட்டு முடிவு செய்வதாக தெரிவித்தார்.

    டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதால் பாதிப்பு ஏற்படக்கூடும். ஆளுங்கட்சி தொழிற்சங்கமான தொ.மு.ச. தொழிலாளர்கள் இதில் பங்கேற்பார்களா என்று தெரியவில்லை.

    தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை முறியடிக்க டாஸ்மாக் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது ஓரிரு நாட்களில் தெரிய வரும்.

    • 18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி தமிழகத்தில் ஒரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
    • ஓரிரு இடங்களில் நாளை லேசான பனி மூட்டம் இருக்கும்.

    சென்னை:

    பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதன் ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நாளை உருவாக கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    18-ந்தேதி மற்றும் 19-ந்தேதி தமிழகத்தில் ஒரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் இன்று அதிகாலை பனிமூட்டம் காணப்பட்டது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓர் இடங்களில் நாளை அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை லேசான பனி மூட்டம் இருக்கும்.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவையில் ஒரு இடங்களில் 16-ந்தேதி அதிகாலை வேளையில் மிதமான பனி மூட்டமும் காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு இடங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும்.

    17-ந்தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓர் இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், ஈரோடு, பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் லேசான பனிமூட்டமும் இருக்கும்.

    18-ந்தேதி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும். காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், ஈரோடு, பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஒரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதே போல வெப்ப நிலையும் தமிழகம், புதுவையில் இன்றும், நாளையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு தவெக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
    • நயினார் நாகேந்திரனின் பேச்சிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

    அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

    நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு தவெக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    மேலும், நயினார் நாகேந்திரனின் பேச்சிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரனின் அநாகரிக விமர்சனத்திற்கு திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல.

    பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வார இறுதி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

    இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,560-க்கும் சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,16,480-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    13-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200

    12-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800

    11-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,320

    10-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,640

    09-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    13-02-2026- ஒரு கிராம் ரூ.280

    12-02-2026- ஒரு கிராம் ரூ.300

    11-02-2026- ஒரு கிராம் ரூ.300

    10-02-2026- ஒரு கிராம் ரூ.300

    09-02-2026- ஒரு கிராம் ரூ.300

    • விஜய் கூறியது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
    • திரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வரணும்.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

    அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

    நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு தவெக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில், தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டன பதிவை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.

    அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா?

    4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா?

    முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது; உங்கள் அறிவைக் குருடாக்கிவிட்டது.

    பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    காதல் எனும் உயிர்ப்பண்பு

    ஆண் பெண்

    மாமிசத்தோடு மட்டும்

    சம்பந்தப்பட்டதில்லை

    எல்லா நிலைகளிலும்

    எல்லா வயதினிலும்

    அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது

    'பெருந்தேன் இழைக்கும்

    நாடனொடு நட்பே' என்று

    சங்கத் தலைவி பாடுமிடத்து

    உடற்புணர்ச்சி காதலாகிறது

    'காதலாகிக் கசிந்து

    கண்ணீர் மல்கி'

    என்று பாடும்பொழுது

    கடவுள் பக்தி காதலாகிறது

    'காதல் திருமகன்' என்று

    தசரதன் தளும்புகிறபோது

    பாசம் காதலாகிறது

    உதடுகளை மாற்றி மாற்றி

    முத்தங்கள் பயணப்படுவதுபோல்

    இதயங்களை மாற்றி மாற்றிக்

    காதல் பயணப்படுகிறது

    மனிதர் உள்ளவரை மட்டுமல்ல

    இடம் பெயரும்

    உயிர்கள் உள்ளவரை

    காதல் இருக்கும்

    உடலோடு தொடங்கி

    உடல் தாண்டி

    உயிரில் ஐக்கியமாகிறபொழுது

    காதல் தன் புனிதயாத்திரையில்

    பூரணம் பெறுகிறது

    எல்லாக் காதலுக்கும்

    இது நேர்வதில்லை

    இன்று விற்பனையாகும்

    250 மில்லியன் ரோஜாக்களும்

    குழல் சேர்வதில்லை.

    ஆனாலும் ரோஜாக்கள்

    பூக்கவே பூக்கும்;

    ஆனாலும் காதல்

    மலரவே மலரும்

    காதலைத் தடுக்க

    நாம் யார்?

    தானாய்த் தோன்றித்

    தானாய் மறையும்

    சந்திர சூரியர்

    போன்றது காதல்

    வாழ்க காதலே;

    பூமியை வாழவை..!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அம்பத்தூர் இன்டஸ்டிரியல் எஸ்டேட்: நியூ டைனி செக்டர், போஸ்ட் ஆபீஸ் ரோடு 2வது மற்றும் 5வது தெரு, அம்பிட் ஐடி பார்க் ரோடு, 2வது மெயின் ரோடு ஸ்பூத் பேஸ் ஆகிய இடங்கள்.

    அம்பத்தூர் சிட்கோ: மாரியம்மன் கோவில் தெரு, குலக்கரை தெரு, கண்ணன் கோவில் தெரு, ஆவின் பிரதான சாலை, ஈபி சாலை 1 முதல் 4வது தெரு, வடக்கு கட்டம் 31ஏ சாலை, வடக்கு கட்டம் 12 மற்றும் 13வது தெரு, கொரட்டூர் டைனி செக்டர் ஆகிய பகுதிகள்.

    • காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்துவது வழக்கம்.
    • காதலர் தினத்தன்று மெரினா கடற்கரை உள்ளிட்ட காதலர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    சென்னை:

    உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தினமும் காதலை வளர்த்தாலும் காதலர் தினத்தை தங்களது 'ஸ்பெஷல்' தினமாக காதலர்கள் கருதுகிறார்கள். எனவே அவர்கள் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, தனியார் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் இன்றைய தினம் அதிகளவில் கூடுவார்கள்.

    காதல் புனிதமானது என்பது காதலர்களின் வேத வாக்காக இருந்தாலும், இது தமிழ்நாட்டின் பண்பாடு, கலாசாரத்துக்கு எதிரானது என்பது இந்து அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகளின் கோஷமாக இருக்கிறது. மேலும் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது அவர்களது வலியுறுத்தலாக இருந்து வருகிறது.

    எனவே காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்துவது வழக்கம். இதனால் காதலர் தினத்தன்று மெரினா கடற்கரை உள்ளிட்ட காதலர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    அந்த வகையில் காதலர் தினத்தையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். காதலர்களை மிரட்டும், அச்சுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதேபோன்று பொதுஇடங்களில் எல்லை மீறும் காதல் ஜோடிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×