என் மலர்
சென்னை
- நம் பாதுகாப்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் ஜனநாயக அரசியல் மாண்போடு புதுச்சேரி அரசு நடந்துகொண்டிருக்கிறது.
- எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினரும் கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மாநில மக்களுக்கு என் அன்பான வணக்கம்.
எல்லைகள் கடந்து, மொழியாலும் மனத்தாலும் எப்போதும் இணைந்திருக்கும் நாம், ஒரு புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயத்தை இன்று புதுச்சேரி மண்ணில் தொடங்கியிருக்கிறோம்.
நிலப் பரப்பிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் சிறிய யூனியன் பிரதேசம் என்றாலும், கட்சி பேதமின்றி, வெறுப்புணர்வின்றி எதிர்க்கட்சியான நம் நிகழ்வுக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்து நம் பாதுகாப்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் ஜனநாயக அரசியல் மாண்போடு புதுச்சேரி அரசு நடந்துகொண்டிருக்கிறது.
அந்த வகையில், புதுச்சேரி அரசுக்கும் முதல்வர் அவர்களுக்கும் உள்துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் புதுச்சேரி மாநிலக் காவல் துறைக்கும் நமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினரும் கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள்.
அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைத்து, சூழ்ச்சிகள் உட்பட என்னென்னவோ திட்டம் போட்டு நம் அரசியல் பயணத்தை, மக்கள் சந்திப்பை, பிரசார முன்னெடுப்புகளை இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது.
கழகத்தின் எதிர்பார்ப்பை, வேண்டுகோள்களை, உத்தரவுகளை மனதார மதித்து, நிகழ்வை வெகு வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த, அதற்குக் காரணமாயிருந்த தமிழகம், புதுச்சேரி மக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
- புதுச்சேரி மாநில அந்தஸ்து குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியிருப்பது மகிழ்ச்சி.
- த.வெ.க. தலைவர் விஜய்க்கு முன்னதாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான்தான்.
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு பல முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்கவே இல்லை என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் சென்னை புழலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார். அப்போது த.வெ.க. தலைவர் விஜய்க்கு சீமான் பாராட்டு தெரிவித்தார். அவர் கூறியதாவது:
* புதுச்சேரி மாநில அந்தஸ்து குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியிருப்பது மகிழ்ச்சி.
* த.வெ.க. தலைவர் விஜய்க்கு முன்னதாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் நோக்கில் தான் இந்தியா கூட்டணி, நீதிபதி மீது தகுதிநீக்க நோட்டீஸ் அளித்துள்ளது.
- நீதித்துறையை அச்சுறுத்தும் கருவியாக தகுதி நீக்க நோட்டீசை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பயன்டுத்துகின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்தன.
இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதத்தை அளித்தனர்.
இதுதொடர்பாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பரங்குன்றம் வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதி நீக்க நோட்டீசா?
சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் நோக்கில் தான் இந்தியா கூட்டணி, நீதிபதி மீது தகுதிநீக்க நோட்டீஸ் அளித்துள்ளது.
நீதித்துறையை அச்சுறுத்தும் கருவியாக தகுதி நீக்க நோட்டீசை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பயன்டுத்துகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அருள், ஜி.கே.மணி போன்றோர் சொல்லும் பொய்களை பா.ம.க.வினர் நம்ப வேண்டாம்.
- அய்யா ராமதாஸ் பெயரில் வரும் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவருக்கே தெரியாது.
மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது:
* என்னை தலைவராக்கிய அடுத்த நாளில் ஜி.கே.மணி சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டார்.
* சூழ்ச்சி செய்து அப்பா-பிள்ளையை பிரித்தது ஜி.கே.மணிதான்.
* ஜி.கே.மணி போன்றோர் மனிதர்களாக இருக்கவே தகுதி இல்லாத நபர்கள்.
* டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பு தோற்றுவிட்டது, ஆனால் வெற்றி பெற்றதாக ராமதாசிடம் பொய் சொல்லி உள்ளனர்.
* அருள், ஜி.கே.மணி போன்றோர் சொல்லும் பொய்களை பா.ம.க.வினர் நம்ப வேண்டாம்.
* அய்யா ராமதாஸ் பெயரில் வரும் அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவருக்கே தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ம.க.வை களத்தில் நேரடியாக சந்திப்பதற்கான தைரியம் தி.மு.க.வுக்கு கிடையாது.
- தைலாபுரம் தோட்டத்தை தி.மு.க. கட்டுப்பாட்டில் எடுத்து விட்டது.
மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது:
* விரைவில் நாம் மிகப்பெரிய மெகா கூட்டணியை அமைக்க இருக்கிறோம்.
* மெகா கூட்டணி முன்பு தி.மு.க. படுதோல்வியை சந்திக்கப் போவது உறுதி.
* பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும் தி.மு.க. தான் காரணம்.
* அய்யா ராமதாசை சுற்றி தீய சக்திகளும், தி.மு.க.வின் கைக்கூலிகளும் இருக்கிறார்கள்.
* பா.ம.க.வை களத்தில் நேரடியாக சந்திப்பதற்கான தைரியம் தி.மு.க.வுக்கு கிடையாது.
* பா.ம.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறது தி.மு.க.
* தி.மு.க.வினர் சூழ்ச்சி செய்து வன்னியர்களையும் பட்டியலின மக்களையும் ஒன்றுசேர விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
* தைலாபுரம் தோட்டத்தை தி.மு.க. கட்டுப்பாட்டில் எடுத்து விட்டது.
* எவ்வளவோ அசிங்கங்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.
* துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்கப்போவது கிடையாது.
* ராமதாஸ் குழந்தை மாதிரி, அவருக்கு தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. அவருக்கு 87 வயதாகி விட்டது.
* டெல்லியில் 30 பேர் போராட்டம் நடத்திவிட்டு 3,000 பேர் கலந்து கொண்டதாக ராமதாசிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள்.
* நான் நடத்தும் கூட்டங்களில் கூட்டம் குறைவாக இருப்பதாக ராமதாசிடம் தவறான தகவல்களை சொல்லி வருகிறார்கள்.
* இன்னும் 3 மாதத்தில் யார் யார் சிறைக்கு செல்ல போகிறார்கள் என பார்த்துக்கொண்டிருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு பொதுமக்கள் பலர் விண்ணப்பித்தனர்.
- சில மாதங்களாக ரேஷன் கார்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. அதில் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு பொதுமக்கள் பலர் விண்ணப்பித்தனர்.
அந்த மனுக்கள் மீது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் விண்ணப்பித்த, தகுதியான அனைவருக்கும் விரைவில் ரேசன் அட்டைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் தகுதியான சுமார் 55 ஆயிரம் நபர்களுக்கு விரைவில் முழுமையாக ரேஷன் அட்டைகள் விநியோ கிக்கப்பட உள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரிய 1,07,910 விண்ணப்பங்கள் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களாக ரேஷன் கார்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் ரேஷன் அட்டை விநியோகிக்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகை மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11 மற்றும் 12-ந்தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- நேற்று சற்று குறைந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
நேற்று சற்று குறைந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 199 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
06-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
05-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
04-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,160
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
08-12-2025- ஒரு கிராம் ரூ.198
07-12-2025- ஒரு கிராம் ரூ.199
06-12-2025- ஒரு கிராம் ரூ.199
05-12-2025- ஒரு கிராம் ரூ.196
04-12-2025- ஒரு கிராம் ரூ.200
- மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க இருக்கிறோம்.
- ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் திரண்டு பொதுச்செயலாளர் நாளைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரமாண்டமாக வரவேற்கிறோம் .
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
மண்டபத்தின் நுழைவு வாயில் அருகே உள்ள காலி மைதானத்தில் உணவு தயாரிப்பு கூடம், உணவு அருந்தும் கூடம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எல்.இ.டி திரைகள் அமைக்கும் பணிகள் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த பணியை தலைமை கழக மேலாளர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்து செல்லும் பாதை கழக நிர்வாகிகள் உணவருந்தும் இடம் உணவு தயாரிப்பு கூடம் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் அமருமிடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் கூறியதாவது:-
கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் இந்த கழகத்தின் செயற்குழு பொதுக்குழு ஆண்டுதோறும் நடைபெறுவது போன்று இல்லாமல் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு வித்திடும் வகையில் நடைபெற உள்ளது. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் எல்லையான கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க இருக்கிறோம். சாலை எங்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் உருவம் பொறித்த வரவேற்பு பதாகைகள் மாஇலை தோரணங்களுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பும் அளிக்கப்படுகிறது.
கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம், நெற்குன்றம், மதுரவாயல், வானகரம் என ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் திரண்டு பொதுச்செயலாளர் நாளைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரமாண்டமாக வரவேற்கிறோம் .
இதற்கான பணிகள் கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது.
இவ்வாறு பெஞ்சமின் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடைபெற உள்ள இந்த பொதுக்குழு கூட்டம் அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கப்பட்டுள்ளன.
- 26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உதகை ஊராட்சி, 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா ஊராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உதகை ஊராட்சி, 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா ஊராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது. கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் என புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
- கூட்டணியில் குழப்பம் என யாராவது காங்கிரசில் இருந்து கூறினார்களா?
- தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி கடந்த வாரம் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்றது.
இதற்கு முன்னதாக, முன்னதாக திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசரை செங்கோட்டையனும் சந்தித்து பேசியதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்களுடன் த.வெ.க.வினரின் சந்திப்பு அக்கட்சியுடன் த.வெ.க இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை என்று ராகுல்காந்தியின் வியூக அமைப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரவீன் சக்ரவர்த்தி கூறியிருப்பதாவது:-
* எல்லா சந்திப்புகளுக்கும் பின்னால் ஒரு திட்டம் இருக்க வேண்டிய அவசியமில்லை.
* இட்லி, வடை, தோசை சாப்பிடுவது ஒரு சாதாரண சந்திப்பாகவோ அல்லது திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதற்கான சந்திப்பாகவோ கூட இருந்திருக்கலாம்.
* த.வெ.க தலைவர் விஜயை நான் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை.
* த.வெ.க.வில் இணையும் எண்ணம் கொஞ்சமும் இல்லை.
* விஜயுடனான தனது சந்திப்பால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் என்பது தவறு.
* கூட்டணியில் குழப்பம் என யாராவது காங்கிரசில் இருந்து கூறினார்களா?
* தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.
* த.வெ.க- காங்கிரஸ் கூட்டணி என ஊடகங்கள் மட்டுமே பேசி வருவதாக கூறினார்.
- சோனியா காந்திக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- சோனியா காந்திக்கான கொள்கை பாதை இந்தியாவிற்கான நமது கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தட்டும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,
காங்கிரஸ் பாராளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது வாழ்க்கை தியாகம், தன்னலமற்ற பொதுப் பயணம், மதச்சார்ப்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான உறுதியான உறுதியை பிரதிபலிக்கிறது.
சோனியா காந்திக்கான கொள்கை பாதை இந்தியாவிற்கான நமது கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தட்டும் என்று கூறியுள்ளார்.






